BREAKING NEWS
Search

பெட்ரோல் ரூ 3.77, டீசல் ரூ 2.91 விலைக் குறைப்பு.. எத்தனைப் பெரிய அயோக்கியத்தனம்!

பெட்ரோல், டீசல் விலை.. தொடரும் ‘அரச அயோக்கியத்தனம்’!

main_cropped

சென்னை : பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.77 ரூபாயும் , டீசல் விலை லீட்டருக்கு 2.91 ரூபாயும் குறைகிறது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் 2 முறை, பெட்ரோல், டீசல் விலையில் திருத்தம் செய்து வருவதாகச் சொன்னாலும், சர்வதேச விலை நிலைக்கு நேர் எதிராக மிக அதிக அளவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்கு விலை நிர்ணயித்து மக்களை வஞ்சித்து வருகிறது மோடி அரசு.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில்கூட இல்லாத அளவுக்கு உச்சபட்சமாக பெட்ரோல் விலை லிட்டர் ரூ 74.28 ஆகவும், டீசல் விலை ரூ 62.48 ஆகவும் இருந்தது (சென்னையில்).

இன்றைய விலைக் குறைப்பின்படி பெட்ரோல் விலை சென்னையில் லிட்டர் ரூ 70.61 ஆகவும், டீசல் லிட்டர் விலை ரூ 60.73 ஆகவும் உள்ளது. இப்புதிய விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இப்போதுள்ள சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி பெட்ரோலுக்கு குறைந்தபட்சம் ரூ 30 வரையிலும், டீசலுக்கு ரூ 35 வரையிலும் விலைக் குறைப்பு செய்யலாம். ஆனால் மத்திய மாநில அரசுகள் அதிகப்படியான வரிகளை விதித்து, சர்வதேச சந்தையில் நிலவும் பெட்ரோல் – டீசல் விலையின் உண்மை பலனை மக்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்வதில் குறியாக உள்ளன.

இது தொடர்பாக ஏற்கெனவே வெளியான கட்டுரை…

பெட்ரோல் – டீசல் – எரிவாயு விற்பனை என்ற பெயரால் அரசு நடத்தும் பெரும் கொள்ளை- ஒரு விரிவான அலசல்!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *