BREAKING NEWS
Search

எல்லோரையும் சந்தேகி… தருண் விஜய் எம்பி உள்பட! – சுபவீ

எல்லோரையும் சந்தேகி… தருண் விஜய் எம்பி உள்பட! 

                  
-சுப. வீரபாண்டியன்  

subavirapandian-250x375பாரதிய ஜனதாவிற்குப் பல முகங்கள் உண்டு!  அமைதியாகப்  பேசும் இல. கணேசன் ஒரு முகம். அடாவடியாய்ப்  பேசும் ஹெச்.ராஜா இன்னொரு முகம்! தமிழர்களைப் பொறுக்கிகள் என்று சொல்லும் சு.சாமி ஒரு முகம், தமிழ் மொழியை, திருக்குறளைப் போற்றும் தருண் விஜய் இன்னொரு முகம். எப்போதும் தமிழர்களுக்கு மட்டும் ஒரே முகம் – ஏமாளி முகம்!

பா.ஜ.கட்சி, தான்  ஆட்சிக்கு வருவதற்கு முன் எத்தனையோ உறுதிமொழிகளைக் கொடுத்தது. வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் இந்தியாவிற்குக் கொண்டுவந்து, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய்  கொடுப்போம் என்றது. (பாவம், அதை நம்பிப் பலபேர் கடன் வேறு வாங்கி விட்டார்கள்!) இப்படிப் பல்வேறு உறுதிமொழிகள். ஆனால் இன்றோ, சமஸ்க்ருதத் திணிப்புக்கு மட்டும்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறது.

முதலில் சமஸ்க்ருத வாரம். பிறகு, கேந்திரிய வித்யாலயங்களில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சம்ஸ்க்ருதப் பாடம். கடந்த வாரம், தில்லியில் நடைபெற்ற ‘ஜல் தன்மன்’ என்னும் நதிநீர் இணைப்புக் கருத்தரங்கில், நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி ஒரு புதிய கருத்தை வெளியிட்டுள்ளார். அங்கே பேசியவர்களில் சிலர் ஆங்கிலத்தில் பேசும்போது, எதிர்த்துச்  சிலர் குரல் எழுப்பியுள்ளனர். உடனே, உமா பாரதி எழுந்து, சிலருக்கு இந்தி தெரியவில்லை, சிலருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. இந்தச் சிக்கலைப் போக்குவதற்கு ஒரே வழிதான் உள்ளது. இந்தியா முழுவதும் சமஸ்க்ருதத்தை இணைப்பு மொழியாக்கிட  வேண்டும் என்று கூறியுள்ளார். உண்மைதான்…இந்தி சிலருக்குத் தெரியும், ஆங்கிலம் சிலருக்குத் தெரியும். சமஸ்க்ருதாமோ யாருக்குமே தெரியாது.எனவே அதனைப் பொது மொழியாக்கிவிட வேண்டியதுதான்!

இவ்வாறு சமஸ்க்ருதத் திணிப்பு ஒருபுறத்தில் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான், தருண் விஜய் என்னும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர், தமிழின் பெருமை குறித்தும், திருக்குறளின் உயர்வு குறித்தும் தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளார். அவர் உண்மையிலேயே, தமிழ்ப் பற்று உடையவர்தானா, திருக்குறளின் மீது தீராக் காதல் கொண்டவர்தானா என்று எண்ணிப் பார்த்திட வேண்டியுள்ளது.

தருண் விஜயின் தமிழ்ப் பற்று உண்மையாகக் கூட இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதனை விட, அவர் மிகப் பெரிய சம்ஸ்க்ருதப் பற்றாளர் என்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ‘பாஞ்சசன்யா’வின் ஆசிரியராக இருந்தவர் அவர். டைம்ஸ் ஆப் இந்தியாவின் வலைப் பூத் தளங்களில் அவர் சமஸ்க்ருதம் குறித்து என்ன எழுதியுள்ளார் தெரியுமா? “சமஸ்க்ருதம் என்றால் இந்தியா. இந்தியா என்றால் சமஸ்க்ருதம். தெற்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்காகவும் இந்தியாவை இணைக்கும் மாபெரும் சக்தி சமஸ்க்ருதம்” என்று அவர் குறிப்பிடுகின்றார்.

tarun-vijay-vairamuthu-11

ஒருவருக்கு இரு மொழிகளின் மீதும் பற்று இருப்பதில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால் இந்தியாவை சமஸ்க்ருதத்தால்தான் இணைக்க முடியும் என்னும் பார்வை, தமிழ் உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளுக்கும், ஏன், ஜனநாயகத்திற்குமே எதிரானது. ஆனால் அதே தருண் விஜய் சீனாவிற்குச் சென்று திருக்குறளைப் படிக்கச் சொல்கிறாரே என்று கேட்கலாம். ஆம்..சீனாவில் உள்ளாவார்கள் திருக்குறள் படிக்கட்டும், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் சமஸ்க்ருதம் படிக்கட்டும் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்!

தமிழர்களுக்கு வீசப்பட்டிருக்கும் அடுத்த வலை, வடநாட்டுப் பள்ளிகளிலும் திருவள்ளுவர் நாள் கொண்டாடப் போவதான அறிவிப்பு! திருக்குறளை அவர்கள் எப்படி எடுத்துச் செல்லப் போகிறார்கள், திருவள்ளுவரின்  முகமாக எதனைக் காட்டப் போகிறாரர்கள் என்பதை எல்லாம் பொறுத்திருந்து நாம் பார்க்க வேண்டும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் வள்ளுவ முழக்கத்தையா அவர்கள் முன்னெடுப்பார்கள்? வருணாசிரமத்திற்கு எதிரான வள்ளுவரை யாராக அவர்கள் படம் பிடிக்கப் போகின்றனர் என்பதில் நமக்குக்  கவனம் வேண்டும்.

MP-Tarun-Vijay

தமிழ் மன்னன் ராசேந்திரனுக்கு விழா எடுப்பதைக் கூடவா சந்தேகிக்க வேண்டும் என்று வினவலாம். ஆம்..கண்டிப்பாக! ராசேந்திரன் ஒரு தமிழ் மன்னன் என்பதால் அவர்கள் விழா எடுக்க நினைக்கவில்லை. பழைய தென் ஆர்க்காடு மாவட்டத்திலிருந்த ‘எண்ணாயிரம்’ என்னும் ஊரில் வேதப் பள்ளிகளைத் தொடக்கி வைத்தவன் ராசேந்திரன் என்று வரலாற்றாசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரியும், கே.கே. பிள்ளையும் நிறுவி உள்ளனர். தமிழ் நாட்டில் வேதப் பள்ளியை, சமஸ்க்ருத மொழியைப் பரப்பிய மன்னரை அவர்கள் பாராட்டத்தானே செய்வார்கள்!

அதிகாரத்திற்கு வந்துவிட்ட அவர்கள் அடக்கு முறையாலும், அரவணைப்பு வழியாலும் தமிழ் நாட்டைக் கைப்பற்றி விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் செய்கின்றனர். அடக்கு முறை, அதிகாரத் திமிர் ஆகியனவும் அவர்களிடமிருந்து அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது என்பதற்கு, ஹெச். ராஜாவின் அண்மைப் பேச்சு ஓர் எடுத்துக்காட்டு. எங்கள் தலைவர்களைத்  தாக்கிப் பேசிவிட்டு வைகோ பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்துவிட முடியாது என்கிறார் ஹெச். ராஜா. இது ஒரு கொலை மிரட்டல்.

வைகோ வேறு கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனாலும் ஒரு திராவிடக் கட்சித் தலைவரை, பார்ப்பனர் ஒருவர் மிரட்டுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது! தானாடா விட்டாலும் எங்கள் சதை ஆடும்!

தமிழர்களே, விழிப்பாயிருங்கள்! தருண் விஜயைப் பாராட்டுவதில் அப்படி ஒன்றும் அவசரம் தேவையில்லை. பா.ஜ.க.வின் ‘பிள்ளை பிடிக்கும்’ விளையாட்டில் ஒரு புதிய வேடம்தான் தருண் விஜய்!

அன்புடன்
சுப.வீரபாண்டியன்

தொடர்புக்கு: subavee11@gmail.com, வலைப்பூ முகவரி : http://subavee-blog.blogspot.com
16 thoughts on “எல்லோரையும் சந்தேகி… தருண் விஜய் எம்பி உள்பட! – சுபவீ

 1. Arul

  In the present scenario BJP is much better than Dravidian parties. During Periyar’s period there was need for Dravidian movement and what he did was right and did wonderful things to the people of lower strata. But over the course of time Dravidian movements deteriorated and didn’t live upto the expectations. Now in the current situation even if Periyar is alive he will support BJP.

 2. baba

  பாஜவுக்கு பல முகங்கள் இருக்கலாம்…ஆனால் உங்க திராவிட கட்சிகளுக்கு ஒரே முகம் தான்…அது மக்களை தமிழ் தமிழ் என்று சொல்லி ஏமாற்றும் முகம் தான்…இதுவே உங்கள் கட்சி செய்தால் அது மகா சாதனை…ஆனால் ஒரு இந்து கட்சி செய்தால் அதற்கு ஒரு உள்நோக்கம் கண்டுபிடித்து அதையும் குறை சொல்விர்கள்…கண்டிப்பாக உங்கள் திராவிட கட்சிகள் இருக்கும்வரை தமிழனுக்கு விடிவே கிடையாது….

 3. senthil

  only intention is to oppose bjp, when modi helped to released fishman, nobody appreaciated and tamilnadu politics only aim is to protest in the name of srilankan tamils.

 4. sathya

  These guys never let us grow with universal thoughts. They always want to put us down by provoking our feelings and sentiments. If they don’t get any thing else.. easy catch…Srilankan Tamil issues. Britishers were successful by dividing us with the cast system and made us feel inferior about our own culture…now these guys are following the trend …..these guys should have never given space to raise their thoughts in this forum…Dear Editor ..what I gather is this is purely for our beloved Thalaivar and other good things around not for playing the politics in this…

 5. குமரன்

  சுப.வீ பற்றி எந்த சந்தேகமும் கிடையாது!!! அவர் ஒரே போக்கில்தான் பேசுவார், அவரது மதசார்பின்மை என்பது இந்து மத எதிர்ப்பும் விரோதமும் மட்டுமே.

  எப்போதோ ஒருமுறை அத்தி பூத்தது போல ஒரு வட மாநிலத்தவர் தமிழின் சிறப்பைப் பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறுவதையும் ஆக்க பூர்வமாகக் கோரிக்கை வைத்து மத்திய அரசைத் திருவள்ளுவர் விழா கொண்டாட வைத்ததையும் திருக்குறளின் சிறப்பை உலகறிய நிறுவும் முயற்சியையும் கொச்சைப் படுத்தும் சுப.வீ இந்த விஷயத்தில் மாறவே மாட்டார். ஏனெனில் அவரது கண்களைக் காழ்ப்புணர்ச்சி மட்டுமே மறைக்கிறது.

  மத்திய அரசு தமிழை மதிக்க, போற்ற ஆரம்பித்துவிட்டால், போலி மதவாதம் பேசி, தமிழ், தமிழார் என்று பிழைப்பு நடத்துவது தடைப்பட்டு விடுமோ என்ற பயம்தான் இவரது இந்தப் பேச்சுக்குக் காரணம். கலைஞர் சொல்லித்தான் வைரமுத்து தருண் விஜய்க்குப் பாராட்டு விழா நடத்தினார் என்பது சுப.வீக்குத் தெரியாது என்று மக்களை நம்பச் செய்ய முடியாது.

  எச்.ராஜா பொறுக்கித் தனமாகப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. ஆனால் அது அரசியல். தமது தலைவரைத் தாக்கிப் பேசுவதை அனுமதிக்காதவர் போல வீராவேசமாகப் பேசுவதில் ராஜாவுக்கு அவரது கட்சியில் அரசியல் ஆதாயம் இருக்கும். இது கூடவா சுப.வீக்குத் தெரியாது?

  அரசியலில் வைகோ உணர்ச்சி பூர்வமாகப் பேசுவார். அதுபோல ராஜாவும் உணர்ச்சி பூர்வமாகப் பேசுவார். இதில் ஒருவரின் சாதியை மட்டும் தேர்ந்தெடுத்து சுப.வீ பேசுவது அப்பட்டமான சந்தர்ப்ப வாதம், விஷமத்தனமானது. மீண்டும் மீண்டும் சாதிய அரசியலை மட்டுமே செய்துவருவதில் அவருக்கு இருக்கும் அடிப்படைவாதப் போக்குதான் இதில் முன் நிற்கிறது. தொடர்ந்து இப்படிப்பட்ட மட்டரகமான அரசியலைச் செய்துவரும் காலம் இனி இல்லை என்பதை சுப.வீ உணரவேண்டும்.

 6. குமரன்

  சுப.வீயின் உண்மை முகம் பாரீர்!

  தருண் விஜயின் பாராளுமன்ற உரையை விடவும், அவர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதிய கட்டுரையில் இருக்கும் பகுதிகள்தாம் சுப.வீக்கு நம்பத் தகுந்தவை ஆகின்றன என்டால் சுப.வீயின் காழ்ப்புணர்வு பளிச்சென்று வெளிவருகிறது. சுப.வீ சுட்டும் தருண் விஜயின் கட்டுரை இந்தத் தொடுப்பில் உள்ளது.

  http://blogs.timesofindia.indiatimes.com/indus-calling/de-indianisation-begins-with-elimination-of-sanskrit/
  இந்தக் கட்டுரையிலிருந்து தனது வெறுப்புப் பேச்சுக்கு வசதியான பகுதியை மொழிமாற்றம் செய்து அறிக்கை வெளியிடும் சுப.வீ, கீழே காணும் பகுதியை ஏன் மொழி மாற்றம் செய்து வெளியிடவில்லை?

  பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னதை இல்லை என்று மறுக்கும் துணிவு இருக்கிறதா அவருக்கு?

  இன்னும் சொல்லப் போனால், பாபா சாகேப் அம்பேத்கர் சமஸ்கிருதத்தைப் படித்து, எந்தெந்த சாத்திரங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவை என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியதால்தான் இன்று தாழ்த்தப் பட்டவர்கள் தலை நிமிர்ந்து நடக்க முடிகிறது?

  சம்ஸ்கிருத அறிவும் அவசியம், அதை எப்படி மனித சமுதாய நன்மைக்குப் பயன்படுத்த முடியும் என்பதைத்தான் பார்க்கவேண்டுமே அல்லாது, சும்மா வெறுப்பை உமிழக் கூடாது.

  ///In 1949 Dr BR Ambedkar had moved a constitutional amendment to make Sanskrit India’s official language replacing Hindi. Not only the leaders from Tamil Nadu supported the move but Mr Naziruddin Ahmed, a Muslim League member from West Bengal also signed it. ///

  சுப.வீ இன்னமும் இந்த வெறுப்பு அரசியலைத் தொடராமல் இருப்பது நாட்டுக்கு நல்லது.

  தமிழம், சமஸ்கிருதமும் இந்த நாட்டின் பழம்பெரும் மொழிகள். இவற்றிலிருந்து பிறந்தவையே அறுதிப் பெரும்பான்மையான இந்திய மொழிகள். இரண்டில் எதை அழிக்க முயன்றாலும் அம்முயற்சி மடமை.

 7. திராவிடன்

  ஆரிய மாயையில் சிக்கி என்ன பேசுகிறோம் என உளறிக்கொட்டும் அப்பாவித் தமிழர்களே, தாய்த்தமிழையும, தமிழர்களையும் அழித்து விடுவார்கள். ஓராண்டுக்குள் சமஸ்கிருத்த்திலிருந்து தாவி தமிழ் மீது காதல் என்றால் அது நயவஞ்ச்சகமாகத் தான் இருக்க வேண்டும் என்பது ‘கா்ககா பாட்டி நரி’கதையிலேயே நமக்கு தெரியாதா என்ன ?

 8. திராவிடன்

  ஆரிய மாயையில் சிக்கி என்ன பேசுகிறோம் என தெரியாமல் உளறிக்கொட்டும் அப்பாவித் தமிழர்களே, தாய்த்தமிழையும, தமிழர்களையும் அழித்து விடுவார்கள். ஓராண்டுக்குள் சமஸ்கிருத்த்திலிருந்து தாவி தமிழ் மீது காதல் என்றால் அது நயவஞ்ச்சகமாகத் தான் இருக்க வேண்டும் என்பது ‘கா்ககா பாட்டி நரி’கதையிலேயே நமக்கு தெரியாதா என்ன ?

  விழித்திருப்போம். தமிழகம் காப்போம்..

 9. குமரன்

  சமஸ்கிருதம், தமிழ் இரண்டையும் மதிப்பவர்களே இருக்க மாட்டார்களா என்ன?

  தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் இந்த நாட்டின் மொழிகளே. சமஸ்கிருதத்திலிருந்து இந்தி, மராத்தி, குஜராத்தி,பஞ்சாபி, வங்காளி உள்ளிட்ட வட இந்திய மொழிகளும், தமிழிலிருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளும் தோன்றின. இரண்டில் எதை அழிக்க நினைத்தாலும் முயன்றாலும் அது இந்தியாவுக்குக் கேடு விளைவிக்கும்.

  இதில் எதையும் குறைத்தோ வெறுத்தோ பேசுதல் மடமைதான்.

  இரண்டு மொழிகளிலும் மிகச் சிறந்த இலக்கியங்கள் உள்ளன. இரண்டையும் போற்றிப் பேணுதல் காலத்தின் கட்டாயம். இதிலும் வெறுப்பு அரசியல் செய்வது என்பது குறுகிய நோக்கம் கொண்டவர்களின் கொண்டாட்டத்துக்குத் தற்காலிகமாக மட்டுமே வழிவகுக்கும். தகவல் தொடர்பு மிகவும் முன்னேறிய இந்தக் காலத்தில் இத்தகைய வெறுப்ப அரசியல் நெடுநாள் தாக்குப் பிடிக்காது.

  பாபாசாகேப் அம்பேத்கர் சமஸ்கிருதத்தை ஆதரித்துப் பாராளுமன்றத்தில் கொண்டுவந்த அரசியல் சட்டத் திருத்தம் குறித்து மவுனம் சாதிப்பது ஏன் என்பதை சிந்தித்தால் இவர்களின் இரட்டை வேடம் வெளிவரும்.

 10. குமரன்

  பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை சமஸ்கிருதப் பேராசிரியர் பிரபாகர் ஜோஷி என்பவர் சமஸ்கிருதத்தில் பீமாயணம் என்று எழுதியிருக்கிறார். இவர் ஒரு அந்தணர். கடந்த காலத் தவறை உணர்ந்த எத்தனையோ அந்தணர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தகவல்கள் குறித்து இரட்டை வேடதாரிகள் எவரும் பேச மாட்டார்கள்!

  http://creative.sulekha.com/bheemayanam-a-biography-of-dr-ambedkar-in-sanskrit_261671_blog

  ///Canto 18 of Bheemayanam is devoted to Ambedkar’s efforts in later life to secure for Sanskrit common cultural space and labour with regional languages of India. In Canto 4 Joshi feelingly writes about how as a high school student, Ambedkar was prevented from sitting in the Sanskrit class because of his birth in the Mahar caste).///

  ///Decades later, we find Ambedkar still interested in Sanskrit. A dispatch of the Press Trust of India (PTI) dated September 10, 1949 states that Ambedkar was among those who sponsored an amendment making Sanskrit as the official language of the Indian Union in place of Hindi. Most newspapers carried the news the next day, i.e., on September 11, 1949 (see the issue of Sambhashan Sandeshah, a Sanskrit monthly published from Delhi , June 2003: 4-6).

  Other dignitaries who supported Dr Ambedkar’s initiative included Dr B.V. Keskar, then the Deputy Minister for External Affairs and Professor Naziruddin Ahmed. The amendment dealt with Article 310 and read: 1.The official language of the Union shall be Sanskrit. 2. Notwithstanding anything contained in Clause 1 of this article, for a period of fifteen years from the commencement of this constitution, the English language shall continue to be used for the official purposes of the union for which it was being used at such commencement: provided that the President may, during the said period, by order authorise for any of the official purposes of the union the use of Sanskrit in addition to the English language . But the amendment was defeated in the Constituent Assembly due to the opposition of the ruling Congress Party and other lobbyists.///

  ஒரு தலித்தாக அம்பேத்கர் தனது வாழ்வில் அனுபவித்த கொடுமைகளையும் கடந்து அவருக்கு சமஸ்கிருதத்தின் மீது இருந்த பற்றைப் பற்றி அப்படி எந்தக் கிஒடுமையையும் அனுபவிக்காத சுப.வீ என் பேசுவதில்லை? தலித் மீது சில சமூகத்தினர் காட்டும் பாசம் வெற்று மாயை, அவர்களுக்குத் தமது சாதிகளது ஆதிக்கம் முறியாமல் இருக்க எடுக்கும் நிலைப்பாடே பிராமணர் மீது காட்டும் வெறுப்புக்குக் காரணம். நீதிக் கட்சி போராடியது முதலியார், நாயர், ரெட்டியார், நாயுடு, உடையார் ஆகிய சாதியினருக்கு மட்டுமே. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீதிக் கட்சியினால் பயன் பெற்றோர் இவர்கள் மட்டுமே. நீதிக் கட்சியின் வழிவந்த திராவிடர் கழகம், அம்பேத்கார் பற்றி அதிகம் பேசாததன் காரணம் இதுவே ஆகும்.

 11. திராவிடன்

  சாதியே கிடையாது என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடி நாதம். நீர் அதில் ரெட்டி, நாயுடு , கம்மா நாயுடு, அம்மா நாயுடு ன்னு விஷத்தை கலக்காதீர்.

 12. குமரன்

  சர் பிட்டி தியாகராய செட்டி, டாக்டர் நாயர், நடேச முதலியார், கோபதி நாராயணசாமிசெட்டி, ராஜா சர் முத்தையா செட்டியார், எ.டி.பன்னீர்செல்வம், சவுந்தரபாண்டிய நாடார், ஈ.வே ராமசாமி நாயக்கர் (பின்னாளில் நாயக்கர் என்பதை விட்டார்), என்று வரிசை கட்டிய நீதிக்கட்சியின் வழிவந்த திராவிடக் கழகம் சாதி இல்லை என்ற அடிநாதத்தைக் கடைப்பிடித்தது என்றால், ராஜாவின் சாதியை மட்டும் பிடித்துத் தொங்குவானேன்? கீழவெண்மனியில் 48 தலித் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கோபாலகிருஷ்ண நாயுடுவால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி காரணமாகவே, நாயுடு கொன்றார் என்பதை மறைப்பதற்காகவே – பத்திரிகைகளாலும், திமுக அரசியல்வாதிகளாலும் – ‘சாதி இந்து’ என்ற சொல் உருவாக்கப்பட்டது. அது எதற்காக என்றால், நாயுடு சாதியினர் தலித்களைக் கொன்ற செய்தி மக்களைச் சென்றடைந்தால் சங்கடம் ஆகும் என்பதுதானே?

  இப்போது திராவிடர் கழகம் தொடர்ந்து சாதியம் தவிர வேறு எதைப் பற்றி பேசுகிறது?

 13. Krishna

  திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், கர்நாடகம் இவற்றை எல்லாம் சேர்த்து தான். அங்கே உள்ள ரெட்டி, நாயுடு, ராயர், உடையார் அவர்கள் தான் நீதி கட்சியில் ஆதிக்கம் செலுத்தினார்கள் ஆகவே அவர்களை பற்றி பேசாமல் திராவிடம் பற்றி முழுமையாக பேச முடியாது.

  அண்டை மாநிலங்களில் திராவிட நாடு வாதம் எடுபடாததால் தான் அண்ணாதுரை திராவிட நாட்டு கொள்கையை கைவிட்டார். ஆகவே நண்பர் குமரன் சொல்வது போல் சுப வீ அவர்களின் கட்டுரையில் ஒரு selective பார்வை இருப்பது நன்றாகவே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *