BREAKING NEWS
Search

மாணவர் போராட்டங்களும் கருணாநிதி ஜெயலலிதா அரசுகளும்…

மாணவர் போராட்டங்களும் கருணாநிதி ஜெயலலிதா அரசுகளும்…

P1180320

மாணவர்கள் போராட்டம் வலுவடைவது தங்களுக்கு பெரும் ஆபத்து என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்திருக்கின்றனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் இவர்களால் மாணவர்களின் தன்னெழுச்சியை சகித்துக் கொள்ள முடிவதில்லை.

ஈழத் தமிழருக்கு நீதி வேண்டும், ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு தண்டனை வேண்டும், தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய எட்டு மாணவர்கள் திலீபன், ஜோசப் பிரிட்டோ, அந்தோணி சாஜ், பார்வைதாசன், பால் கென்னத், மணி, சண்முகப் பிரியன், லியோ ஸ்டாலின் ஆகியோரை, ஞாயிறு நள்ளிரவு வலுக்கட்டாயமாக தூக்கிப் போய் மருத்துவனையில் சிகிச்சைப் பெற வைத்துள்ளனர்.

ஈழ மக்கள் விடுதலைக்காக முத்துக்குமார் தன்னை எரித்து புதிய எழுச்சியை உருவாக்கிய நேரத்தில் அதை முற்றாக மழுங்கடிப்பதில் வெற்றி பெற்றது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. மத்திய அரசு செய்வதையெல்லாம் நியாயப்படுத்தி, மாணவர் போராட்டங்களை முற்றாக ஒடுக்கியது. கல்லூரிகள், விடுதிகளைக் கூட மூடி மாணவர்களை கிராமங்களுக்கு விரட்டியது.

இன்று அந்த அளவு கூட விட்டுவைக்கவில்லை ஜெயலலிதா அரசு. போலீஸைப் பயன்படுத்தி சத்தமின்றி உண்ணாவிரதமிருந்த மாணவர்களை தூக்கிச் சென்றுள்ளது.

அரசு அல்லது பிரதான கட்சிகள் என்றில்லை… ஓட்டுப் பிழைப்பு நடத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுமே இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டியது வெளிப்படையாகத் தெரிந்தது.

தன்னெழுச்சியாக போராடத் தொடங்கியுள்ள மாணவர்களை, அதை முடித்துக் கொண்டு தங்கள் பின்னாள் திரளச் செய்துவிட வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் காட்டியதை இந்த முறை பார்க்க முடிந்தது.

ஆனால் எதற்கும் இணங்காத மாணவர்கள் தங்கள் போராட்டத்தில் உறுதியுடன் இருந்து, அரசின் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால் அவர்கள் ஆரம்பித்த போராட்ட உணர்வு இப்போது அனைத்துக் கல்லூரிகளுக்கும் பரவியிருக்கிறது.

இன்று தமிழகமும் முழுவதும் பல கல்லூரிகளில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளனர் மாணவர்கள்.

மாணவர் போராட்டங்கள் மகத்தானவை.. சுயநலமற்றவை… அந்த வயதில் மட்டுமே அது சாத்தியம். அதை களங்கப்படுத்தாமல், ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்வதுதான் மக்களின் கடமை.

இப்போது அரசியல்வாதிகளின் முகங்கள் அம்பலப்பட்டுவிட்டதால், தங்களை நோக்கி வரும் தலைவர்களை மாணவர்கள் நம்பாமல் விரட்டியடிக்கிறார்கள். இந்த நேரத்தில் மக்கள்தான் இந்தப் போராட்டங்களை மேலும் வலிமைப்படுத்தி கொண்டு செல்ல வேண்டும்.

மக்களின் ஏகோபித்த ஆதரவும் இணைந்தால் மாணவர் போராட்டத்துக்கு இந்த முறை ஒரு பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது!

-என்வழி செய்திகள்
57 thoughts on “மாணவர் போராட்டங்களும் கருணாநிதி ஜெயலலிதா அரசுகளும்…

 1. குமரன்

  இப்படிப் பட்ட சுயநலமற்ற போராட்டங்களைக் கூடச் செயலற்றுப் போகச் செய்வதில் அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள். காலம்தான் பதில் சொல்லும்.

  இந்த முறையாவது மாணவர்களின் இந்தப் போராட்டம் வெல்லட்டும்.
  ராஜபக்சே குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை அனுபவிக்க வேண்டும்.

 2. குமரன்

  அண்மைச் செய்தி ஒன்று இதோ.

  மாணவர்களைச் சந்திக்கச் சென்ற தங்கபாலுவின் மீது கற்களும், தண்ணீர் பாட்டில்களும் வெங்காயமும் வீசப்பட்டனவாம். செருப்பை ஏன் விட்டார்கள் எனத் தெரியவில்லை.

  சதிவலை பின்னி, ராஜீவ் மரணத்துக்குப் பழிவாங்கும் ஒரே நோக்கில் ‘லட்சக் கணக்கான அப்பாவி மக்கள் செத்தாலும் பரவாயில்லை பிரபாகரனை கொன்றோ உயிரோடோ கொண்டு வா’ என ஆணையிட்ட சொக்கத் தங்கம் தியாகத் திருவிளக்கு அன்னை சோனியாதான் இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பாராம், இந்த ஜால்ரா சொல்கிறார்.

  ///இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்கபாலு, “நான் இவர்களை சந்தித்து பேசாமல், வேறு யார் வந்து இவர்களை சந்தித்து பேசுவார்கள்? கற்களை தூக்கி வீசி காயப்படுத்துவதா ஜனநாயகம்? இதனை போலீசாரும் வேடிக்கை பார்த்தது கண்டிக்கத்தக்கது.

  மாணவர்களின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தீர்க்க முடியும். காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது நல்லதல்ல. இலங்கை பிரச்சினையை மாநில அரசால் தீர்க்க முடியாது. சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தியால் தான் தீர்க்க முடியும். அவர்களது சார்பில், அவர்கள் சொல்லித்தான் மாணவர்களை பார்த்து அவர்களுடைய கோரிக்கையை கேட்டு நடவடிக்கை எடுக்க வந்தேன்.

  ஆனால் மாணவர்கள் போர்வையில் வன்முறை கும்பல் உண்ணாவிரத பந்தலுக்குள் வரக்கூடாது என்று எங்களை தடுத்ததுடன், கற்களையும், புத்தகம், குடிநீர் பாட்டில், வெங்காயம் போன்றவற்றையும் வீசி தாக்கினர். இதில் தாமோதரன் மண்டை உடைந்தது. எங்களுடைய கூட்டணி கட்சியை சேர்ந்த தி.மு.க. எம்.பி. வந்த போது கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்புறம் இலங்கை பிரச்னை எப்படி தீரப் போகிறது?” என்றார்.///

 3. tamil

  உங்களின் பெற்றோர் மற்றும் குடும்பங்களையும் மறந்து விடாதீர்கள்.

  மாணவர்களை போராட வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் ஆக்கபூர்வமாக போராடுங்கள். உங்களின் போராட்டம் திசை மாறி செல்கிறது என்றே தோன்றுகிறது.

  நீங்கள் இன்று போடும் கோஷம் “காவல்துறையை” கேலி செய்வதாகவே இருக்கிறது. மறந்து விடாதீர்கள் நமது எதிர்ப்பு சிங்கள அரசுக்கும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கும் தான். காவல் துறை நேற்று நள்ளிரவு மாணவர்களை கைது செய்தது அவர்களின் உயிரை காபற்றத்தான். அதை எதிர்க்கும் அனைவரும் அந்த மாணவர்கள் சாகட்டும் என்று தான் இருந்தீர்கள் என்றே பொருள்படும்.

  எந்த குறிக்கோளுக்காக நாம் போராடுகிறோம் என்ற தெளிவுவேண்டும். எங்கு எப்படி போராட வேண்டும் என்று தெரியாமல் போராடுவது பலன் தரப்போவதில்லை. ஏற்க்கனவே பிணத்தை வைத்து அரசியல் செய்தாயிற்று, இப்போதும் அதற்காகத்தான் நிறைய தலைவர்கள் அலைந்துகொண்டு இருக்கிறார்கள்.

  மாணவர்கள் அதை உணர்ந்து நல்லவர்களின் ஆலோசனையின் பேரில் போராடுங்கள். உங்களின் பெற்றோர் மற்றும் குடும்பங்களையும் மறந்து விடாதீர்கள்.

  சென்னை மாநகர பேருந்தில் போடும் சண்டை போலல்ல போராட்டம் என்பது.
  -இதுதான் ஜனநாயகமா?

 4. Krishna

  இலங்கை அதிபரின் போர் குற்றங்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை பொறுத்த வரையில் தேர்வுகள் வரும் இந்த நேரத்தில் அவர்களின் கல்விக்கு தடையாக எது இருந்தாலும் அதை அவர்கள் ஒதுக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்கள் ஆயிரக்கணக்கில் பணம் கட்டி தன் பிள்ளைகள் படித்து சமூகத்தில் ஒரு உயர்ந்த அந்தஸ்திற்கு வருவார்கள் என்று கனவு கண்டிருக்கும் போது, மாணவர்கள் இது போன்று காலவரையற்ற போராட்டம் தேவை தானா என்பதை யோசிக்க வேண்டும். ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் இருந்திருந்தால் அது நியாயமாக இருந்திருக்கும்.

  மாநில அரசை பொறுத்த வரையில் அந்த மாணவர்கள் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் அங்கேயே இருந்து அவர்கள் உயிர் பிரிந்திருந்தால் இழப்பு அவர்கள் பெற்றோருக்கு தான். நம் அரசியல்வாதிகள் அவர்களின் பெயரை தங்கள் வளர்ச்சிக்கு உபயோகித்து கொள்வார்கள். ஆகவே கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அரசுகள் செய்தது சரி தான்.

 5. nellai

  மாணவர்கள் இந்த விசயத்திற்காக போராடுவது நல்லதுதான். ஆனால் இதுபோல தமிழகம் மற்றும் இந்தியாவில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது. குறிப்பாக ஜாதி மற்றும் லஞ்சம் மற்றும் அரசியல் வாதிகள். இவற்றிர்காகவும் போராடினால் நன்றாக இருக்கும்.
  நன்றி
  நெல்லை

 6. குமரன்

  ///நமது எதிர்ப்பு சிங்கள அரசுக்கும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கும் தான். ///

  உண்மை. சிங்கள அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் சொக்கத் தங்கம், தியாகத் திருவிளக்கு அன்னை சோனியாவும், ராகுலும் அவரது குடும்பத்தாரும், அவர்களது நிரந்தர பரம்பரை அடிமைகளான காங்கிரஸ் காரர்களும், அந்த காங்கிரஸ் ஆளும் மத்திய அரசும், அந்த மத்திய அரசை அமைக்க உதவி, அதில் பங்கு (ஊழல்/ கொள்ளை உள்பட) கொண்டு, எப்போதும்/ இப்போதும் நாடகம் நடிக்கும் கருணாநிதியும் அவரது குடும்பத்தாரும் அவரது திமுக கட்சியும்தான்.

  ///காவல் துறை நேற்று நள்ளிரவு மாணவர்களை கைது செய்தது அவர்களின் உயிரை காபற்றத்தான். ///

  ஏன் இந்தக் காவல் துறையை ஏவி வரும் அவர்களது எஜமானியான ஜெயா, காவிரி ஆணையைக் கேசட்டில் வெளியிட்ட வீராங்கனை அம்மா அவர்கள் மத்திய அரசைப் பணிய வைத்து சிங்கள இலங்கையை மிரட்ட வேண்டியதுதானே? அதைச் செய்யும் அளவு அவருக்கு வீரமும் தைரியமும்,ஆட்சித் திறமையும் இல்லையா?

  ஆக மாணவர்களைக் கைது செய்தது அவர்களது உயிரைக் காப்பாற்ற என்பது தவறு. அது ஜெயாவின் ஆட்சியைக் காப்பாற்ற என்பதே சரி.

  ///ஏற்க்கனவே பிணத்தை வைத்து அரசியல் செய்தாயிற்று, இப்போதும்
  அதற்காகத்தான் நிறைய தலைவர்கள் அலைந்துகொண்டு இருக்கிறார்கள்.///

  ராஜீவ் பிணத்தை வைத்துச் செய்த அரசியலில்தான் ஜெயா முதல் முதலில் முதல்வரானார்? காங்கிரஸ் போபார்ஸ் ஊழலில் இருந்து மீண்டு ஆட்சிக்கு வந்தது?

  ஆக காங்கிரஸ் போல காந்தி பிணம், நேரு பிணம், இந்திரா பிணம், ராஜீவ் பிணம் என்று பிண அரசியல் செய்தவர்கள்/ செய்பவர்கள் எவரும் இல்லை. ஏதோ திமுகவும், அதிமுகவும் அவ்வப்போது இதைச் செய்கிறார்கள்.

  என்ன, தேர்வை ஒரு மாதம் தள்ளி வைப்பார்கள் அவ்வளவே, படிப்பு ஒன்றும் பாழாகாது. அதைச் செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.

 7. குமரன்

  கூடங்குளம் போராட்டத்துக்கு மத்திய அமைச்சர் நாராயண சாமியை ஓடவிட்ட மாதிரி ஜெயா இதற்கும் சல்மான் குர்ஷித்தை ஓட விட்டால் மத்திய அரசுக்கு நிலைமை புரியும். ஏன் சல்மான் குர்ஷித் வரவேண்டும் என்றால் அவர்தான் இப்போது ராஜபக்சேவின் ஊதுகுழல்.

 8. malar

  மிக மிக சரியாக சொன்னிங்க…..

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 9. S.Tulasidass

  “இலங்கை தமிழர் பிரச்சனையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள் (மத்திய அரசு) எதிர்ப்பு தெரிவித்தீர்களா? மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும் என்று ஜவகர்லால் நேரு கூறி இருக்கிறார். இந்த கொள்கையை மத்திய அரசு பின்பற்றத் தவறியதின் விளைவுதான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்த கதி நேர்ந்துள்ளது.” (சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ்)

 10. Krishna

  “ஏன் இந்தக் காவல் துறையை ஏவி வரும் அவர்களது எஜமானியான ஜெயா, காவிரி ஆணையைக் கேசட்டில் வெளியிட்ட வீராங்கனை அம்மா அவர்கள் மத்திய அரசைப் பணிய வைத்து சிங்கள இலங்கையை மிரட்ட வேண்டியதுதானே? அதைச் செய்யும் அளவு அவருக்கு வீரமும் தைரியமும்,ஆட்சித் திறமையும் இல்லையா?:

  வெறும் 10 எம்.பி.க்களை வைத்து கொண்டு, எப்படி மத்திய அரசை பணிய வைப்பது. 20 எம்.பி.க்களை வைத்திருக்கும் திமுக தான் மத்திய அரசை பணிய வைக்க வேண்டும்.

  “ஆக மாணவர்களைக் கைது செய்தது அவர்களது உயிரைக் காப்பாற்ற என்பது தவறு. அது ஜெயாவின் ஆட்சியைக் காப்பாற்ற என்பதே சரி.”

  இப்போதெல்லாம் சுப்ரீம் கோர்ட் மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்யும் விவகாரங்களில் மிகவும் கண்டிப்புடன் இருப்பதால் ஒரு மாநில அரசை அவ்வளவு சுலபமாக டிஸ்மிஸ் செய்து விட முடியாது. ஆகவே முதல்வருக்கு அந்த பயம் இருக்க வாய்ப்பில்லை.

 11. தினகர்

  //வெறும் 10 எம்.பி.க்களை வைத்து கொண்டு, எப்படி மத்திய அரசை பணிய வைப்பது. 20 எம்.பி.க்களை வைத்திருக்கும் திமுக தான் மத்திய அரசை பணிய வைக்க வேண்டும்.//

  மத்திய அரசை பணிய வைத்து காவிரி தீர்ப்பை அரசாணையில் வெளியிட வைத்ததாக, விழாக்கள் எல்லாம் நடைபெற்றதே. கருணாநிதியால் முடியாததை நான் சாதித்தேன் என்றெல்லாம் முதல்வர் சொன்னாரே. அப்போதும் 10 எம்.பிக்கள் தானே அதிமுகவுக்கு இருந்ததார்கள்?.அல்லது அதுக்கு பிறகு 10 பேர் திமுகவுக்கு தாவிட்டாங்களா?

 12. Krishna

  “மத்திய அரசை பணிய வைத்து காவிரி தீர்ப்பை அரசாணையில் வெளியிட வைத்ததாக, விழாக்கள் எல்லாம் நடைபெற்றதே. கருணாநிதியால் முடியாததை நான் சாதித்தேன் என்றெல்லாம் முதல்வர் சொன்னாரே. அப்போதும் 10 எம்.பிக்கள் தானே அதிமுகவுக்கு இருந்ததார்கள்?.அல்லது அதுக்கு பிறகு 10 பேர் திமுகவுக்கு தாவிட்டாங்களா?”

  மத்திய அரசை எம்.பி.க்கள் மூலம் ஜெயலலிதா பணிய வைக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல் வழக்கு போட்டு தான் பணிய வைத்தார். கடந்த திமுக ஆட்சியில் அரசிதழில் வெளியிடுமாறு திமுக ஒருமுறை கூட மத்திய அரசை கோரவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் போடவில்லை.

 13. தினகர்

  “மத்திய அரசை எம்.பி.க்கள் மூலம் ஜெயலலிதா பணிய வைக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல் வழக்கு போட்டு தான் பணிய வைத்தார்”

  தமிழர்களுக்காவும், வழக்கை போட்டு மத்திய அரசை பணிய வைத்து வழிக்கு கொண்டு வரவேண்டியது தானே!

 14. Krishna

  “தமிழர்களுக்காவும், வழக்கை போட்டு மத்திய அரசை பணிய வைத்து வழிக்கு கொண்டு வரவேண்டியது தானே!”

  காவிரி பிரச்சினைக்கும் இலங்கை பிரச்சினைக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு புரியவில்லை. மத்திய அரசின் வெளியுறவு கொள்கைகளில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. ஜெயலலிதா ஒரு வேளை இதற்கு வழக்கு போட்டிருந்தால், மறு கணமே உச்சநீதிமன்றம் அதை தள்ளுபடி செய்திருக்கும். ஏற்கனவே இது சம்பந்தமாக ஒரு பொது நல மனுவை முன்பு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இலங்கை பிரச்சினையின் தீர்வு மக்கள் மன்றத்தில் தான் இருக்கிறது. ராஜபக்ஷேவை நேரடியாக ஆதரிக்கும் காங்கிரசையும் அதற்கு வால் பிடிக்கும் கட்சிகளையும் தேர்தலில் தோற்கடிப்பது என்று மக்கள் முடிவு செய்தால் மட்டுமே எஞ்சியுள்ள இலங்கை தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.

  ஆனால் காவிரி பிரச்சினையில் காவிரி தீர்ப்பாயம் ஒரு தீர்ப்பை வெளியிட்டால், அதை அரசிதழில் வெளியிடுவது constituitional mandate. அதை கடந்த டிசம்பர் மாதமே உச்சநீதிமன்றம் அரசிதழில் வெளியிடுமாறு மத்திய அரசை பணித்தது. ஆனால் அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. தமிழக அரசு மீண்டும் இரண்டாவது முறை உச்சநீதிமன்றத்திற்கு போனதால் தான் ஏதோ இந்த அளவிற்காவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

 15. மிஸ்டர் பாவலன்

  நண்பர் கிருஷ்ணா அவர்களே.. முன்பு நான் டீக்கடை பதிவு
  ஒன்று எழுதினேன்..உங்களுக்கு நினைவு இருந்தால்
  நல்லது. நினைவு இல்லை என்றால் டீக்கடையில்
  டீ குடித்தபடி “என் கட்சியை சொல்றியே, உன் கட்சியில
  என்ன கிழிச்சாங்க” என்று அடித்து கொள்பவர்கள் போல்
  தான் இங்குள்ள சிலர். கடையில் டீ குடித்து விட்டு
  அமைதியாக செல்வது தான் நமக்கு நல்லது. நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==

 16. Manoharan

  இதெல்லாம் கிடக்கட்டும் அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு ஒன்றுமே பேசாமல் ஏன் மவுனம் சாதிக்கிறார் ? தமிழனின் உயிர் போனால் போகட்டும் என்றா அல்லது ஜெவுக்கு பயந்து கொண்டா ? கோழயாக இருக்கமாட்டேன் என்றாரே …?

 17. Krishna

  திரு பாவலன் அவர்களே, உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். எல்லோரும் அரசியல் விவகாரங்கள் எல்லாம் நமக்கு எதற்கு என்பதால் தான் இரு கழகங்களும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து தமிழகம் மற்றும் தமிழர்களின் நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒரு சில விஷயங்களை தவிர, திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. இரு கழக ஆட்சிகளும் மக்களின் அத்தியாவசிய தேவையான மின்சாரம் கிடைப்பதற்கு எதுவுமே செய்யவில்லை. சரி – மாநில அரசு தான் செய்யவில்லை என்றால், மத்திய அரசின் மின் திட்டங்களை திமுக தடுக்கிறது/கெடுக்கிறது. திமுகவின் இடத்தில் அதிமுக இருந்தாலும் இதையே தான் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். சரி, மின்சாரம் தான் இல்லை, மத்திய அரசிடம் போராடி அகல ரயில் பாதை திட்டங்களையாவது நிறைவேற்றி காட்டினார்களா என்றால் அதுவும் இல்லை. அடுத்த ஆண்டு முடிய வேண்டிய விழுப்புரம்-திண்டுக்கல் இரட்டை பாதை திட்டம் 2020 ஆண்டிலும் முடியாது. திருவாரூர்-காரைக்குடி, மானாமதுரை-விருதுநகர், செங்கோட்டை-புனலூர், திண்டுக்கல்-கோவை என்று எந்த திட்டம் எடுத்துக்கொண்டாலும் ஒரு முன்னேற்றமும் சுத்தமாக இல்லை. காமராஜர் காலத்திற்கு பிறகு சிறு அணைகள் (check dams) எதுவும் கட்டப்படவில்லை. பிற மொழிகளை தெரிந்து கொள்ள விடாமல் தமிழர்களை குண்டுச்சட்டியில் இருக்கும் குதிரைகளாக, கிணற்று தவளைகளாக மாற்றி விட்டார்கள். கல்லூரி மாணவர்களை படிக்கும் காலத்திலேயே அரசியலுக்கு இழுத்து அவர்களின் மூளையை மழுங்கச்செய்யும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும் – ஆனால் நேரடியாக ஈடுபடக்கூடாது. மாணவர் அணி என்பதே எந்த கட்சியிலும் இருக்க கூடாது. அவர்களின் படிப்பை முடித்து விட்டு தான் அரசியலுக்கு வரவேண்டும். படிப்பை முடித்த இளைஞர்கள், நடுத்தர வயதினர்கள் என்று ஆரோக்கியமான சிந்தனை கொண்டு அரசியலில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டுகிறார்களோ, அன்று தான் தமிழகத்திற்கு இரு கழகங்களுக்கும் ஒரு genuine மாற்று சக்தி தோன்றும். அதற்கு பிறகு தான் தமிழகத்தில் முன்னேற்றம் ஓர் அளவிற்காவது இருக்கும்.

  என்னை பொருத்தவரையில் திமுக ஆட்சியில் இருந்து, அதிமுக ஆதரவு மத்திய அரசு என்று ஒன்று இருந்து இது போல் முட்டுகட்டைகள் போட்டால், அப்போதும் அதை எதிர்த்து தான் எழுதுவேன். இன்னும் சொல்லப்போனால், அதிமுக அப்படி செய்யாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்களும் அப்படி செய்யக்கூடியவர்கள் தான்.

  தற்சமயத்திற்கு என்னை போன்று நினைப்பவர்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் எண்ணக்குமுறல்களை என்வழி போன்ற சமூக அக்கறையுள்ள வலைதளத்தில் பதிவு செய்கிறேன் என்ற திருப்தி ஏற்படுகிறது.

 18. தினகர்

  //மத்திய அரசின் வெளியுறவு கொள்கைகளில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. ஜெயலலிதா ஒரு வேளை இதற்கு வழக்கு போட்டிருந்தால், மறு கணமே உச்சநீதிமன்றம் அதை தள்ளுபடி செய்திருக்கும்//

  சரியான காரணங்களோடு வழக்கு தொடர்ந்தால் தள்ளுபடி செய்யமுடியாது. தமிழர்கள் பிரச்சனை தமிழ் நாட்டுடன் நேரடி தொடர்பு கொண்டது. தமிழ் நாட்டு மக்களுக்கு ரத்த உறவு சம்மந்தப்பட்டது. அவ்வளவு ஏன், இப்போது மாணவ்ர்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பதிலாக, தமிழர்களின் ஆதரவு குரல்களை நீதி மன்றம் மூலம் மத்திய அரசுக்கு, கெடு வைக்கலாமே!. உத்தரவாதம் கேடகலாமே!. மனம் இருந்தால் சட்டத்திலும் மார்க்கமுண்டு. போர் என்றால் அப்பாவி மக்களும் சாகத்தான் செய்வார்கள் என்றவர்களுக்கு மனம் எப்படி இருக்கும் என்று தெரியாதா என்ன?

 19. தினகர்

  //டீ குடித்தபடி “என் கட்சியை சொல்றியே, உன் கட்சியில
  என்ன கிழிச்சாங்க” என்று அடித்து கொள்பவர்கள் போல்
  தான் இங்குள்ள சிலர். கடையில் டீ குடித்து விட்டு
  அமைதியாக செல்வது தான் நமக்கு நல்லது//

  டீ குடித்த படியே, சந்தடி சாக்கில் சிந்து பாடி ’மூட்டி’ விடுபவர்களை விட டீ குடித்துக்கொண்டே நேருக்கு நேர் பேசுபவர்கள் சிறந்தவர்களே 🙂

 20. மிஸ்டர் பாவலன்

  //எண்ணக்குமுறல்களை என்வழி போன்ற சமூக அக்கறையுள்ள வலைதளத்தில் பதிவு செய்கிறேன் என்ற திருப்தி ஏற்படுகிறது.// (கிருஷ்ணா)

  உங்கள் கருத்திற்கு நன்றி. ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரித்து
  இந்த வலையில் ரொம்ப ஆண்டுகளாக எழுதி வருபவர் உங்கள் பதிவுகளை
  அரசியல் சாணக்கியமாக edit செய்து, அவர் கட்சி சார்பாக எழுதி வருவதால்,
  “கட்சிக்காரர்களுடன் நீண்ட விவாதங்கள் வைத்துக் கொள்ள வேண்டாம்,
  அவர்களை convince செய்யமுடியாது” என்ற பொருளில் நான் எழுதினேன்.
  உங்கள் கருத்துக்களை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில்
  குமரன், நான், கணேஷ் ஷங்கர் எனப் பலர் உண்டு.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 21. தினகர்

  //அரசியல் சாணக்கியமாக edit செய்து, அவர் கட்சி சார்பாக எழுதி வருவதால்//

  ஏன் இந்த சந்துலே சிந்து பாடுற வேலை?. தங்கள் அபிமான தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்திலா?

  ஒட்டுவது, வெட்டுவது, ஒரே கருத்தை வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதமாக எழுதுவது, என்னமோ பக்கத்து வீட்டில் இருந்து பார்த்த மாதிரி அடுத்தவர்களுக்கு கட்சி சாயம் பூசுவது, புரட்சி புகழ் பாடிவிட்டு நடுநிலை என்று பல்டி அடிப்பது என்பதெல்லாம் நன்கு கற்றறிந்த விஞ்ஞானிக்கு அழகில்லை.

  அவ்வப்போது தான் கற்ற கல்வியை நினைவு கூர்ந்து கொண்டால் அகிலத்திற்கே நல்லது.

 22. naarathar

  தமிழனுக்கு எதிர்காலம் உண்டா ??? என்றால் காங்கிரஸ் கட்சியின் வேர் அறுபடும் வரை எதிர்காலம் இல்லை ..இரண்டு கேரளா மீனவர்களை சுட்ட இட்டாலியன் குற்றவாளி,ஆனால் 600 தமிழ் மீனவர்களை சுட்டு ,இன்னும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சிங்களவன் ரத்தினக்கம்பள விருந்தாளி ????

  அற வழி போராட்டம் இவர்கள் முன் தகுதியற்றது.நடந்துகொண்டிருப்பது பேடிகளின் ஆட்சி.தமிழனின் வீரம் தெரியாத மண்ணுளி மாக்கான்களின் அதிகாரம்..
  மாணாக்கரின் எழுச்சி அணையப்போகும் அகல் விளக்கல்ல..கொழுந்து விட்டு எரியும் காட்டுதீ என்பது தெரியவேண்டும்.

  சொகுசு பங்களாவில் உறங்கிக்கொண்டிருக்கும் அத்துணை அரசியல் சொம்பு தூக்கிகளுக்கும் நாம் எடுக்கும் அடுத்தகட்ட போராட்டம் கண்டிப்பாக அற வழியாக இருக்காது என்பதை புரிய வைக்கவேண்டும்.

  தமிழனுக்கு எந்த மாநிலமும் துணை வராது,தமிழனுக்கு தமிழனே துணை என்பதை புரிந்துகொண்டு தமிழன் அனைவரும் ஒன்றுபட்டால் ,உலகம் நம்மை ஏறெடுக்கும் .கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று நம்பலாம்..

  நாராயணா….நாராயணா…

 23. Krishna

  “சரியான காரணங்களோடு வழக்கு தொடர்ந்தால் தள்ளுபடி செய்யமுடியாது. தமிழர்கள் பிரச்சனை தமிழ் நாட்டுடன் நேரடி தொடர்பு கொண்டது. தமிழ் நாட்டு மக்களுக்கு ரத்த உறவு சம்மந்தப்பட்டது. அவ்வளவு ஏன், இப்போது மாணவ்ர்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பதிலாக, தமிழர்களின் ஆதரவு குரல்களை நீதி மன்றம் மூலம் மத்திய அரசுக்கு, கெடு வைக்கலாமே!.”

  சட்டத்திற்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் ரத்த உறவுகள் எல்லாம் தெரியாது. அரசால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின் பின்னணியில், ஊழல், அல்லது முறைகேடு அல்லது அரசியல் அமைப்பிற்கு (Constituition) புறம்பாக ஏதாவது இருப்பதற்கு முகாந்திரம் (prima facie) இருந்தால் தான் நீதிமன்றம் தலையிடும். ராஜபக்சேவுக்கு வால் பிடிப்பது என்று ஒரு வேளை மத்திய அரசு முடிவு எடுத்தால் சட்டப்படி அவர்களுக்கு உரிமை உண்டு. ஒரு வேளை இலங்கையில் உள்ள பெரும் புள்ளிகளில் யாரிடமாவது கட்டிங் வாங்கியிருந்தார்கள் என்பது போன்ற ஆதாரங்கள் எதாவது கிடைத்தால் தான் நீதிமன்றம் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க முடியும். ஆகவே தீர்ப்பு மக்கள் மன்றத்தில் தான் இருக்கிறது. மக்கள் தான் இவர்களை இனங்கண்டு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.

 24. குமரன்

  ஜெயலலிதாவைப் பொறுத்த மட்டில், அவர் எல்லாரையும் அவ்வப்போது மிரட்டிக் கொண்டே இருப்பார். அவர் அப்படி மிரட்டும்போது தப்பித் தவறி எதிராளி தன போக்கை மாற்றிக் கொண்டு விட்டால், உடனே அவரது அமைச்சக அடிமைகள்/ ஆதரவாளர்கள் “ஆகா, பார்த்தாயா எப்படி புரட்சித் தலைவி அம்மா மிரட்டிப் பணிய வைத்து விட்டார்” என்பார்கள்.

  அப்படி எதுவும் நடக்கா விட்டால், ஏதாவது சாக்குப் போக்கு சொல்வார்கள்.

  ஜெயாவுக்கு எல்லாரும் தன்னைப் பார்த்துப் பயந்து கொண்டே இருக்கவேண்டும் அதற்க்காக ஏதாவது ஏடாகூடமாகச் செய்து கொண்டே இருப்பார். It is a compulsive obsessive disorder.

  தெனாலி படத்தில் கமலுக்கு எதைக் கண்டாலும் பயம் வருவது போல, ஜெயாவைக் கண்டால் எல்லாருக்கும் பயம் வரவேண்டும் என்ற எண்ணத்திலேயே அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்துள்ளது.

  அதாவது ஜெயாவைக்கண்டால் ….
  …..சாலை பணியாளர்களுக்கு பயம்
  …..அரசு ஐ.யே.எஸ்(கணினியின் தமிழ் தட்டச்சில் எதேச்சையாக வந்த …..பிழை”யே”, இதுவும் நல்லாத்தான் இருக்கு!). ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மாற்றல் குறித்து பயம்,
  …..அரசு ஊழியர்களுக்கு பதவி நீக்கம் குறித்த பயம்,
  …..கிறிஸ்தவ போதகர்களுக்கு கட்டாய மதமாற்றத் தடைப் பயம்,
  …..அமைச்சர்களுக்குப் பதவி நீக்கம் குறித்த நிரந்தர பயம்,
  ….. கட்சிக் காரர்களுக்குப் பதவிப் பறிப்பு பயம் (அரசு அதிகாரிகளை அவ்வப்போது மாற்றுவதுபோல, வட்டச்செயலாளர் முதல் தலைமைக் கழகப் பொறுப்பாளர் வரை மாற்றல் உத்தரவு போடும் ஒரே கட்சித் தலைவர் ஜெயாதான்!)
  ….மக்களுக்கு மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, ரேஷன் பொருள் விலை உயர்வு எனப் பல முனைத் தாக்குதல் பயம்,
  …. திமுகவுக்கு நில ஆக்கிரமிப்பு (இது கூட ‘நிலா’ என்று தட்டச்சில் வந்தது, அதுவும் நல்லாத்தான் இருக்கும்! இந்த நிலா சினிமா நடிகை அல்ல!) , வருமானத்துக்கு மிஞ்சிய சொத்துக் குவிப்பு வழக்கு, நற்பெயருக்குக் களங்கம் விளைத்ததால் அவதூறு வழக்கு பயம்
  …. பத்திரிகையாளர்களுக்குப் “புரட்சித் தலைவி அம்மா” அவர்களின் “நற்பெயருக்குக் களங்கம்” விளைவித்ததால் அவதூறு வழக்குப் பயம்
  ….. மத்திய அரசுக்குத் தினமும் ஒரு மிரட்டல் பயம்
  …. பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் இருக்கும் நீதிபதி அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு வித விதமான மிரட்டல் பயம் (ஆச்சார்யா விலகியே விட்டார்!)
  ….. முன்பெல்லாம் பத்து ஆட்டோ வரிசையாகத் தெருவில் ஆட்களுடன் போனாலே பார்க்கும் எல்லாருக்கும் பயம்!
  …. 1991-96 ஆட்சிப் பயங்களின் நினைவு வந்தாலே எல்லாருக்கும் பயம்
  …. உயர் நீதிமன்ற நீதிபதி, அவரது மருமகன், எம்.ஜி.ஆர் கார் டிரைவர், சாமியார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பொய் வழக்கு பயம்

  என்று பலவேறு விதமான பயங்கள்.

  மிரட்டல் என்ற ஆயுதத்தைப் பலவேறு விதமாகப் பலத் திசைகளிலும் தூவிவிடுவார் ஜெயா.

  எனவே அவர் “மிரட்சித் தலைவி” என்றே சொல்லலாம்!

 25. குமரன்

  மிஸ்டர் பாவலன் மனமிருந்தால் தெனாலி பட கமல்-ஜெயராம் காட்சிபோல ஜெயா-சசி காம்பினேஷனில் ஒரு “பயம்” ஸ்கிட் எழுதலாம்! நான் பரிந்துரைக்கிறேன்!!!!

 26. குமரன்

  கூடுதலாக இப்போது …

  …. கூட்டணிக் கட்சிக் காரர்களுக்குத் தேர்தல் நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் கழட்டி விடுவாரோ என்ற பயம்,
  ….. தேர்தல் போது கூட்டணியில் இருந்து தேர்தலில் வென்றுவிட்டால், தேர்தலுக்குப் பின்னால் அந்தக் கூட்டணிக் கட்சிக்குச் சட்டமன்றத்தில் அவமானப் படுத்தப் படும் பயம்
  ….. மக்கள் போராட்டம் நடத்துவோருக்கு போராட்டத்தை எந்த விதத்தில் ஒடுக்குவாரோ என்ற பயம்
  ….. திரைப்படம் எடுப்பவருக்கு எந்தக் காரணத்தால் எப்படித் தடை வருமோ என்ற பயம்

  ஆக “பய”லலிதாதான்!

 27. குமரன்

  என்கருத்து கொஞ்ச நாளாகக் காணவில்லையே? நலம்தானே?

 28. குமரன்

  சும்மா மிரட்டல்களை அள்ளி வீசி/ தடாலடி அதிரடி நடவடிக்கை எடுத்து எல்லாத் தரப்பினரையும் பயம் கொள்ள வைத்த பின்னால், மொட்டை பாஸ் போல ஜெயா தன தலையைத் தட்டி, சசியிடம் “ச்சும்மா அதிருதில்லே” என்று சொல்வதுபோலக் கூட ஒரு ஸ்கிட் எழுதலாம்!

  “சிச்சுவேஷன்” நிறையத் தருவேன், மிஸ்டர் பாவலன் பாட்டு அல்லது ஸ்கிட் எழுத!

 29. குமரன்

  தமிழகம் எங்கும் தீயாக பற்றிக் கொண்டுள்ள மாணவர் போராட்டத்தில் இணைந்து கொள்ள, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 700 மாணவர்கள் நேற்று கூடியபோது, பல்கலைக்கழகத்துக்கு உடனே காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

  “போராட்டத்தில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள் என்ற மிரட்டலும் விடுக்கப்பட்டது” என்றார், கதிர்வேலன் என்ற மாணவர்.

  ஆனால், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் முடிவை மாற்றாத காரணத்தால், பல்கலைக்கழக ஹாஸ்டல்களில் தங்கியிருந்த மாணவிகள் மறுநாள் (இன்று – செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்குள் ஹாஸ்டலை காலிசெய்துவிட்டு ஊருக்கு கிளம்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

  அதுவாவது பரவாயில்லை, மாணவர்கள் நிலைமை அதைவிட மோசம். நேற்றிரவு 9 மணிவரைதான் அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதையடுத்து கோயம்பேடு பஸ்நிலையத்தில் ஏராளமான மாணவர்கள் பஸ்களுக்காக காத்திருப்பதை நேற்றிரவு காணமுடிந்தது.

  அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், “இங்கு சுமார் 60 மாணவிகள் கேரளாவை சேர்ந்தவர்கள். அடுத்த இரு தினங்களுக்கு கேரளா செல்ல எந்த ரயிலிலும் முன்பதிவு கிடையாது. செவ்வாய்க்கிழமை காலைக்குள் நாம் எப்படி புறப்படுவது என்று தெரியவில்லை” என்றார்.

 30. Ganesh Shankar

  நண்பர் கிருஷ்ணா அவர்களே,

  நல்ல பதிவுகள்.என் கருத்தோடு மிகவும் சார்ந்து இருப்பதனால் அல்ல சில விடயங்களில் உங்களின் கருத்துக்களோடு நான் மாறுபடுகிறேன்.
  விடயத்தோடு மற்றும் யதார்தத்தோடு இருப்பதனால்.. மேலும் இந்த பக்கம்,அந்த பக்கம் என்று சாயாமல் இருப்பதனால்…

  இது ஆரோகியமான பதிவுகளுக்கு கண்டிப்பாக வழிவகுக்கும்…மிகவும் நன்று…

 31. மிஸ்டர் பாவலன்

  ///என் கருத்தோடு மிகவும் சார்ந்து இருப்பதனால்// (கணேஷ் ஷங்கர்)

  நண்பர் கணேஷ் அவர்களே.. நீங்கள் ‘என் கருத்தோடு மிகவும்
  சார்ந்து இருப்பதாக’ குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் ‘என் கருத்து’ என
  என் வழியில் எழுதும் ‘என் கருத்து’ அவர்களைக் குறிப்பிடுகிறீர்களா?
  அல்லது, உங்கள் கருத்தை (your view) குறிப்பிடுகிறீர்களா? நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 32. மிஸ்டர் பாவலன்

  //// “சிச்சுவேஷன்” நிறையத் தருவேன், மிஸ்டர் பாவலன்
  பாட்டு அல்லது ஸ்கிட் எழுத! ////

  நண்பர் குமரன் அவர்கள் ஒரு முடிவோடு இருக்கிறார் போல் இருக்கிறது!
  மகாபாரதம் கதைகளை என் பாணியில் தரலாம் என இருக்கிறேன்.
  இவற்றில் கந்தசாமி, ரகுநாத் ஐயர், மனோ, ராஜன், கணேஷ், “முருகன்” எனப்
  பலரும் கலந்து கொள்வார்கள் எனவும் நினைக்கிறேன்.

  அரசியல் கருத்துக்கள் நான் எழுதி ரொம்ப மாசம் ஆகி விட்டது என
  பலரும் அறிவார்கள். இது நல்ல மாற்றம். இது தொடரும். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் =-

 33. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  ஒரு ரகசியம்!

  கருணாநிதி நல்லவர், வல்லவர் என்று அவர் புகழ் பாடினால் எனக்கு வருத்தம் வந்து இத்தாலிக் காரியுடன் சேர்ந்து அவர் செய்த ஈழத் துரோகம் பற்றி எழுதுவேன்.

  ஜெயலலிதா நல்லவர், வல்லவர் என்று யாராவது கூறி அவர் புகழ் பாடினால் அவர் செய்யும் மக்கள் விரோத ஆட்சி, அடக்குமுறை அராஜகம் பற்றி எழுதுவேன்.

  அவ்வளவுதான்!

  (நான் அமைதியாக இருக்கவேண்டும் என யாரும் விரும்பினால், இவர்கள் இருவர் பற்றியும் புகழாமல் இருந்தால் போதும்!)

 34. மிஸ்டர் பாவலன்

  நன்றி திரு கிருஷ்ணா, குமரன், கணேஷ் ஷங்கர் அவர்களே..

 35. தினகர்

  “இலங்கை கடற்படையின் கொலைவெறி தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள் : மன்மோகனுக்கு ஜெ’ மீண்டும் கடிதம்”

  கருணாநிதிக்கு கடிதம் மட்டுமே எழுதத் தெரியும் என்று சொன்னவர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?

 36. Krishna

  ஜெயலலிதா டெல்லி சென்று கோரிக்கைகளை தெரிவித்தால் மணி அடிக்கிறார்கள், கடிதம் எழுதினால் கண்டு கொள்வதில்லை, அவர் வேறு என்ன தான் செய்ய முடியும்? இந்திரா காந்தி காலத்திலிருந்தே காங்கிரஸ் தன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளை ஒரு மாதிரியும் கூட்டணியில் இல்லாதவர்களை வேறு மாதிரியும் நடத்துகிறது. இது தான் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி தலைவர் வெறும் கடிதம் எழுதுவதற்கும் கூட்டணியில் இல்லாத (காங்கிரசின்) எதிரி கட்சி தலைவர் கடிதம் எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.

 37. மிஸ்டர் பாவலன்

  //கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி தலைவர் வெறும் கடிதம் எழுதுவதற்கும் கூட்டணியில் இல்லாத (காங்கிரசின்) எதிரி கட்சி தலைவர் கடிதம் எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு.// (கிருஷ்ணா)

  இப்படி யாராவது ஒரு பதில் கொடுத்தால் -?!?!?!?!

  “ஆளும் கட்சி” என்பதிலும், “எதிர் கட்சி” என்பதிலும் மொத்தம்
  ஆறு எழுத்து தான் இருக்கிறது! 🙂 🙂

  ஆனால் – “திமுக” என்பதில் மூன்றெழுத்து, “அதிமுக” என்பதில்
  நான்கெழுத்து என்பதை அறிந்தவர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?

  -== மிஸ்டர் பாவலன் ==-

 38. தினகர்

  “ஜெயலலிதா டெல்லி சென்று கோரிக்கைகளை தெரிவித்தால் மணி அடிக்கிறார்கள்”- வாட்?

  மாமியார் உடைச்சா மண்குடம், மருகள் உடைச்சா பொன்குடம் என்பதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.

  இதெல்லாம் அடுத்தவரை கை நீட்டி குத்தம் சொல்றதுக்கு முன்னாடி தெரிஞ்சிருக்கனும்.

  அது என்னமோ மணியோ, சங்கோ – யாரும் அடிச்சிட்டா, ஊதிட்டா சும்மா இருந்துடுவாங்களா? அவ்வளவு தான் வீராப்பா? இங்கே கேட்க வந்ததே. அவருக்கு கடிதம் மட்டும் தான் எழுதத் தெரியும் என்ற குற்றச்சாட்டை சொன்னவர்களின் நிலை என்ன? என்பது தான்.

 39. குமரன்

  கருணாநிதிக்குக் கடிதம் மட்டும்தான் எழுதத் தெரியும் என்று நான் சொல்லவே இல்லை!

  அவருக்கு சக்கர நாற்காலியிலானும் தில்லிபோய் பத்து நாள் இருந்து தனது மகன், பேரன், மகளுக்காக என்று ஆ.ராசா உள்ளிட்டவர்களுக்கு மத்திய மந்திரிப் பதவியும் வாங்கத் தெரியும், அதிலும் குறிப்பாக தொலைத் தொடர்புத் துறையைத் தனது பேரனுக்கோ, மகளது ஏஜண்டுக்கோ வாங்கத் தெரியும்.

  அதிலும் கூட கொத்துக் குண்டுகளால் லட்சம் பேருக்கும் மேல் ஈழத்தில் தமிழர்கள் கொள்ளப்படும் அதே நேரத்தில் தில்லியில் சொக்கத் தங்கம் தியாகத் திருவிளக்கு அன்னை என்றெல்லாம் இனப்படுகொலைகாரன் ராஜபக்சேவின் கூட்டாளி சோனியாவைப் புகழ்ந்து பாடி, செத்துப் பத்து நாளுக்குள் தம் குடும்பத்தாரைப் படாவி ஏற்க வைக்கவும் தெரியும்.

  இந்த விஷயம்தான் அவர் மீது வெறுப்புக் கொள்ள வைக்கிறது.

 40. தினகர்

  அட அவரு சரியில்லேன்னு தானே ஓட்டு போட்டு அவரை ஆட்சியில் விட்டு இறக்கினார்கள். வந்தவரும் அதே தானே செய்யுறாரு. அவருக்கு கூஜா, ஜால்ரா இன்ன பிற வகையாறக்களை செய்து வருபவர்களின் நிலை என்ன? அது தான் கேள்வி..

 41. Krishna

  “மாமியார் உடைச்சா மண்குடம், மருகள் உடைச்சா பொன்குடம் என்பதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை.

  இதெல்லாம் அடுத்தவரை கை நீட்டி குத்தம் சொல்றதுக்கு முன்னாடி தெரிஞ்சிருக்கனும்.

  அது என்னமோ மணியோ, சங்கோ – யாரும் அடிச்சிட்டா, ஊதிட்டா சும்மா இருந்துடுவாங்களா? அவ்வளவு தான் வீராப்பா? இங்கே கேட்க வந்ததே. அவருக்கு கடிதம் மட்டும் தான் எழுதத் தெரியும் என்ற குற்றச்சாட்டை சொன்னவர்களின் நிலை என்ன? என்பது தான்.”

  மத்தியில் தமிழக பிரதிநிதி சொல்வதை தடுக்கும் வகையில் மணி அடித்து விட்டு, தமிழகத்துக்கு வர வேண்டிய திட்டங்களுக்கு சங்கு ஓதுபவர்களை மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டார்கள் என்பது தான் உண்மை. அவர்களுக்கு மக்கள் சங்கு ஊதுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

  “அட அவரு சரியில்லேன்னு தானே ஓட்டு போட்டு அவரை ஆட்சியில் விட்டு இறக்கினார்கள். வந்தவரும் அதே தானே செய்யுறாரு. அவருக்கு கூஜா, ஜால்ரா இன்ன பிற வகையாறக்களை செய்து வருபவர்களின் நிலை என்ன? அது தான் கேள்வி..”

  இன்னும் ஆட்சியை விட்டு இறக்கவில்லையே – அதாவது மத்தியில். கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மந்திரி சபையில் தொற்றிக்கொள்பவர்கள் தமிழகத்துக்கு உருப்படியாக மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வந்தார்களா? ரயில்வே திட்டங்கலாகட்டும், காவிரி, முல்லைபெரியார் பிரச்சினைகளாகட்டும், தமிழகம் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. இவர்களின் சம்பந்தம் துளியும் இல்லாத ஒரு மத்திய அரசு வரும்போது தான் தமிழகத்துக்கு முழு விடிவுக்காலம் பிறக்கும்.

 42. naarathar

  குருடர்கள் கூட்டத்தில் ஒற்றைக்கண்ணன் ராஜாவாம்…

  இது இரு பெரிய கட்சிகளிடத்தே பொருத்தமானது என்றுதான் சொல்லவேண்டும் . இதில் யார் குருடர்,யார் ஒற்றைக்கண் உடையவர் என்று புரிந்துகொண்டால் சரி…..

  நாராயணா…நாராயணா….

 43. தினகர்

  “இன்னும் ஆட்சியை விட்டு இறக்கவில்லையே ”

  2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை விட்டு இறக்கியது யாரை?. மீனவர் பிரச்சனைக்கு கருணாநிதி கடிதம் மட்டும் தான் எழுதுவார் என்று இங்கே கொதித்தது யார்? இன்று ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் ‘ கடிதம் மட்டுமே எழுதும் அவலம் தொடர்கிறதே’!. அவர் கடிதம் எழுதியது போதாது என்று கூக்குரலிட்டவர்கள் இன்றைய கடிதங்களுக்கு என்ன பதி சொல்கிறார்கள். அன்று கொந்தளித்தவர்களின் இன்றைய நிலை என்ன? என்று கேட்டால், ’சுண்டைக்காய் விலை முக்கால் பணம்’ என்ற ரீதியில் பதில் சொல்வதிலேயே தெரிந்து விட்டது.அவர்களின் ஒற்றை வரி லட்சியம். .

  வாழ்க ஜனநாயகம்..வளர்க தமிழர்கள்..

 44. Boss

  தமிழனுக்கு எதிர்காலம் உண்டா ??? என்றால் காங்கிரஸ் கட்சியின் வேர் அறுபடும் வரை எதிர்காலம் இல்லை ..இரண்டு கேரளா மீனவர்களை சுட்ட இட்டாலியன் குற்றவாளி,ஆனால் 600 தமிழ் மீனவர்களை சுட்டு ,இன்னும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சிங்களவன் ரத்தினக்கம்பள விருந்தாளி ????…???????? மீனவனுக்கு மரணம் / துன்பம் மட்டும் தான் வரமா???

 45. Krishna

  “2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை விட்டு இறக்கியது யாரை?. மீனவர் பிரச்சனைக்கு கருணாநிதி கடிதம் மட்டும் தான் எழுதுவார் என்று இங்கே கொதித்தது யார்? இன்று ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் ‘ கடிதம் மட்டுமே எழுதும் அவலம் தொடர்கிறதே’!. அவர் கடிதம் எழுதியது போதாது என்று கூக்குரலிட்டவர்கள் இன்றைய கடிதங்களுக்கு என்ன பதி சொல்கிறார்கள். அன்று கொந்தளித்தவர்களின் இன்றைய நிலை என்ன? என்று கேட்டால், ’சுண்டைக்காய் விலை முக்கால் பணம்’ என்ற ரீதியில் பதில் சொல்வதிலேயே தெரிந்து விட்டது.அவர்களின் ஒற்றை வரி லட்சியம். ”

  மீண்டும் சொல்கிறேன், அதிமுகவுக்கு பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்கள் கிடைத்திருந்தால் வெறும் கடிதங்கள் எழுதுவதோடு நிறுத்தியிருக்க மாட்டார் முதலவர். மீனவர் பிரச்சினையை வெளியுறவு துறையை கையில் வைத்து கொண்டிருக்கும் மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். 2009 தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா “கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு வழிகாட்டி வருகிறார்” என்று தான் பிரச்சாரம் செய்தார். அப்படியென்றால் மீனவர்கள் தாக்குதலை கண்டு கொள்ளாதீர்கள் என்று “வழி” காட்டினாரா என்பதை சோனியா தான் விளக்க வேண்டும்.

 46. Krishna

  மீனவர்கள் மேல் நடக்கும் தாக்குதலை மத்திய அரசு தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதரவு விளக்கி கொள்ளப்படும் என்று ஜெயலலிதாவால் சொல்ல முடியுமா? அவர் தான் மத்திய அரசுக்கு ஆதரவே கொடுக்கவில்லையே. மத்திய அரசை மிரட்டி பணிய வைக்க வேண்டியவர்கள் ஊழல் புகார்களால் மிரண்டு போய் பேசாமல் இருந்ததால் தானே மீனவர்கள் மீதான தாக்குதல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 47. மிஸ்டர் பாவலன்

  ///இன்னும் ஆட்சியை விட்டு இறக்கவில்லையே – அதாவது மத்தியில். ///
  (கிருஷ்ணா)

  மார்ச் 21 அன்று இரவு 10 மணிக்கு இந்த பதிவு செய்துள்ளீர்கள்.
  இந்த நேரத்தில் இந்த கருத்து ஏற்கத்தக்கதல்ல. தி.மு.க. கூட்டணியில்
  இருந்து விலகி, மந்திரி பதவிகளை சம்பந்தப்பட்டவர்கள் இரு அணியாக
  ராஜினாமா கடிதம் கொடுத்ததை நீங்கள் அறிவீர்கள்!

  இதே சமயம் உங்கள் பதிவில் உள்ள “அதாவது மத்தியில்” என்ற இரு
  சொற்களையும் ஒருவர் அரசியல் சாணக்கியமாக edit செய்து ஒரு பதில்
  கொடுத்துள்ளார். அதற்கு நான் பதில் தர விரும்பவில்லை. அவர் edit
  செய்து பதில் கொடுத்துள்ளதை மட்டும் உங்களுக்கு சுட்டிக் காட்ட
  விரும்புகிறேன். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 48. தினகர்

  //தமிழனுக்கு எதிர்காலம் உண்டா ??? என்றால் காங்கிரஸ் கட்சியின் வேர் அறுபடும் வரை எதிர்காலம் இல்லை //

  நாடாளுமன்றத்தில் இலங்கை படுகொலை குறித்து தீர்மானம் கொண்டுவரக்கூடாது என்று எதிர்த்தவர்கள் பா.ஜ .க . Think about it also Boss.

 49. தினகர்

  “அவர் எடிட் செய்து பதில் கொடுத்துள்ளதை மட்டும் உங்களுக்கு சுட்டிக் காட்ட
  விரும்புகிறேன்.”

  போட்டுக் கொடுக்கும் பாவலரே.. இதற்கு எங்க ஊரில் இன்னொரு ஈனத்தனமான தொழிலை உதாரணம் காட்டுவார்கள். அவை நாகரீகம் கருதி அந்த வார்த்தையை சொல்ல் விரும்பவில்லை. உமது கருத்துக்கு நீர் விளக்கம் கேட்கலாம். அடுத்தவருக்கு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாதா? அல்லது புரிந்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு அறிவுத்திறன் இல்லை என்று சொல்ல வருகிறீரா? முடிந்தால் நேருக்கு நேராக விவாதம் செய்யவும். இல்லையென்றால் ஒதுங்கி இருக்கவும். அது நம் இருவருக்கும் நல்லது. நாம் கற்ற கல்விக்கு அழகு..

 50. தினகர்

  //மீண்டும் சொல்கிறேன், அதிமுகவுக்கு பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்கள் கிடைத்திருந்தால் வெறும் கடிதங்கள் எழுதுவதோடு நிறுத்தியிருக்க மாட்டார்//

  அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று சொல்வது போலிருக்கு உங்கள் பதில். கடிதத்தை தவிர இவருக்கும் வேறு வழி தெரியவில்லை தானே!. அதை ஒப்புக்கொள்ள மனம் இல்லை.. வீண் விவாதங்கள் தேவை இல்லை.

  மீண்டும் ஒரு பழைய சம்பவத்தை நினைவு படுத்துகிறேன். மத்திய அரசு தமிழகத்திற்கு அரிசி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து முதல்வர் எம்ஜிஆர்அண்ணா சதுக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆதரவாக கலைஞர் வள்ளுவர் கோட்டத்தில் அதே நேரத்தில் உண்ணாவிரதம் இருந்தார். சிவாஜி உள்ளிட்ட ஏனைய தலைவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். மத்திய அரசு பணிந்தது.

  ஒரு எழுச்சியை உருவாக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பொருட்டல்ல. லயோலா கல்லூரி மாணவர்களிடம் எத்தனை எம்.பிக்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு உலக அளவில் இடம் பெற்றிருக்கும் போராட்டத்திற்கு தீ மூட்டியது அந்த மாணவர்கள் தானே.

  அவர் கடிதம் எழுதினார். இவரும் எழுதுகிறார்.அவரை விட மீனவர் பிரச்சனைக்கு இவர் கூடுதலாக துறும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் உணமை.

  உங்கள் உள் எண்ணங்கள் உள்ளக்கை நெல்லிக்கனியாக விளங்கிவிட்டது. உங்கள் விவாதத்திற்கு நன்றி.

 51. Krishna

  “அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று சொல்வது போலிருக்கு உங்கள் பதில். கடிதத்தை தவிர இவருக்கும் வேறு வழி தெரியவில்லை தானே!. அதை ஒப்புக்கொள்ள மனம் இல்லை.. வீண் விவாதங்கள் தேவை இல்லை.”

  வேறு வழி தெரியவில்லை என்பதல்ல உண்மை. வேறு வழி இல்லை என்பது தான் உண்மை. கடலோர காவல் படையை வைத்திருக்கும் மத்திய அரசு தான் இதற்கு முடிவு எடுக்க வேண்டும்.1996-ல் இருந்து மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எப்படியாவது மந்திரி பதவிகளை பிடித்து விடுகிறவர்கள் இதற்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் ஓய்வு கொடுத்தது போல் பாராளுமன்ற தேர்தலிலும் ஓய்வு கொடுத்தால் நிலைமை சரியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

 52. தினகர்

  “பாராளுமன்ற தேர்தலிலும் ஓய்வு கொடுத்தால் நிலைமை சரியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.”

  அப்போது கூட உங்களால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. வாய்ப்பு இருக்கிறது என்று நழுவுகிறீர்கள். உங்கள் தலைவியை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறீர்கள்..நல்லது, வாழ்க வளமுடன்..

 53. Krishna

  நான் எந்த பதிவுகளிலும் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று சொல்லவில்லை. கருணாநிதி ஆட்சியை விட பரவாயில்லை என்று தான் சொல்லி வந்திருக்கிறேன். ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ சர்க்கரை என்று சொல்லுவார்கள். அது போல் தான் நானும் ஜெயலலிதா ஆட்சி பரவாயில்லை என்று சொல்லியிருக்கிறேன். ஜெயலலிதாவை தலைவியாக என்று கொள்கிறவர்கள் யாரேனும் ஜெயலலிதா ஆட்சி பரவாயில்லை என்று சொல்லுவார்களா என்பதை உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.
  “அப்போது கூட உங்களால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. வாய்ப்பு இருக்கிறது என்று நழுவுகிறீர்கள். உங்கள் தலைவியை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறீர்கள்..”

  நாளை நடப்பதை யார் அறிவார்கள். 1999, 2004, 2009 என்று தொடர்ந்து திமுகவுக்கு மத்தியில் வாய்ப்பு கொடுத்ததால் எந்த பலனும் இல்லை. ஆகவே ஒரு முறை ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு கொடுத்தால் குடி முழுகி விடாது என்று தான் சொல்கிறேன். அதை தான் “நிலைமை சரியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்று சொல்கிறேன்.

 54. தினகர்

  //ஜெயலலிதாவை தலைவியாக என்று கொள்கிறவர்கள் யாரேனும் ஜெயலலிதா ஆட்சி பரவாயில்லை என்று சொல்லுவார்களா என்பதை உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.//

  உங்கள் கருத்துக்களை தொடர்ந்து படித்துவரும் என்வழி வாசகர்கள் முடிவுக்கே விட்டுவிடலாம்.

 55. சென்னை வீரன்

  பாவலண்ணே! அந்தாண்டை ரெண்டு பேரு அட்சிக்கினா
  நீ ஏன்பா குறுக்க போற? கூட்டத்துல அடி வாங்கறதுக்கா?
  நீ இந்தாண்டை வா! ரெண்டு பாட்ட எடுத்து விடு! கூட
  ரெண்டு ஜோக்சை கலந்து விடு! அத்தொட்டு பஞ்சாயத்து
  வேலை, சுட்டறது, கட்டறது இதெல்லாம் விட்டுத் தள்ளு!
  வீரன் சொன்னா அது கரீட்டா இருக்கும்! உஜாரா இருக்கோணும்!

  -வீரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *