BREAKING NEWS
Search

ஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் விரிவாகக் கூறியுள்ளோம்… -ஸ்டாலின்

ஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் விரிவாகக் கூறியுள்ளோம்… -ஸ்டாலின்

சென்னை: ஈழத் தமிழரின் இன்னல்கள் மற்றும் அவலமான வாழ்க்கை குறித்து ஐ.நா.விடமும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் சிறப்பாக விளக்கியுளள்ளோம். நாங்கள் சொன்னதை அவர்களும் கவனத்துடன் கேட்டு, நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர், என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஐ.நா. சபையிடமும், ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்திடமும் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை அளித்து விட்டு  இன்று சென்னை திரும்பினார் ஸ்டாலின்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா.சபையில் உள்ள மனித உரிமைகள் கழகத்தில் வழங்குவதற்காக நானும், டி.ஆர்.பாலுவும் சென்றோம். ஐ.நா.சபை மனித உரிமை கழகத்தில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை வழங்கி இலங்கை தமிழர்களின் இன்னல்கள் பற்றி எடுத்து கூறினோம்.

இதுவரை அவர்களுக்குத் தெரியாத பல விஷயங்களை விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம்.

பின்னர் லண்டனில் நடை பெற்ற உலகத் தமிழர்கள் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை தமிழர்களின் நிலைமைகள் பற்றி எடுத்துக் கூறினோம்.

இந்த பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய எங்களுக்கு சிறப்பான வர வேற்பு அளித்த தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் கழக அமைப்பு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் ஸ்டாலின்.

பாராட்டு விழா

ஐநா. சபை மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கும் சென்று சென்னை திரும்பியுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு இன்று சென்னையில் பாராட்டு விழா நடத்துகிறது திமுக.

மாலை 6 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

பொதுச் செயலாளர் அன்பழகன், தி.க. தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

DMK treasurer M.K.Stalin is hopeful of solution to Eelam Tamils after his return from New York.




3 thoughts on “ஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் விரிவாகக் கூறியுள்ளோம்… -ஸ்டாலின்

  1. Devaraj

    Welcome Mr. Stalin . Remember to continue your good work, one day you will be rewarded to rule the state.
    May God bless you Sir.
    Cheers
    Dev.

  2. srikanth

    மானாட,மயிலாட,குயில் கூவ,ஜால்ராக்களின்,தலையாட, ம்ம்ம்ம்’ஆடுங்கப்பா,என்னச்சுத்தி .வாழ்த்துப் பாடுங்கப்பா,என்னப்பத்தி.இதவிட,தமிழர்களை,யாராலும் காயப்படுத்த முடியாது.நீங்க;டெசோ,தீர்மானம் போட்டதுக்குப் பதிலா ,இறங்கல்த் தீர்மானம்,போட்டு இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *