BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார்… என்றும் மாறாத இளமைக்குச் சொந்தக்காரர்!

சூப்பர் ஸ்டார்… என்றும் மாறாத இளமைக்குச் சொந்தக்காரர்!

lingaa-thalaivar

யதாக ஆக இளமை கூடிக் கொண்டே போகும் அதிசயம் வரம் வாங்கி வந்தவர் என்றால் அவர் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியாகத்தான் இருக்க முடியும்.

லிங்காவில் அவரது தோற்றத்தைப் பார்க்கும் யாரும் அவருக்கு என்ன வயதிருக்கும் என்று கணிப்பதில் குழம்பிப் போவார்கள்.

அத்தனை இளமையாகவும், ஸ்டைலாகவும் காட்சி தருகிறார் ரஜினி. குறிப்பாக அந்த முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியான போது, இன்றைய இளம் ஹீரோக்கள் அல்லது அவரது இடத்தைக் குறிவைத்து காய் நகர்த்தும் அத்தனை பேரும் அதிர்ந்து நின்றார்கள்.

எழுபதுகளில் ஆரம்பித்தது சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்பயணம். இதோ.. நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ நாயகிகள் அவருடன் ஜோடி சேர்ந்துவிட்டனர்.

ரஜினிக்கு ஆரம்ப நாட்களில் ஜோடியாக நடித்த நடிகைகளே.. பின்னாளில் அம்மாவாக மாறிய கதையும் நடந்தது. எழுபதுகளில் ஜோடி சேர்ந்த ஸ்ரீவித்யா, சுஜாதா, எண்பதுகளில் ஜோடி சேர்ந்த அம்பிகா… இப்படி அது ஒரு பட்டியல் போகிறது.

ஒரு விழாவில் பேசும்போது, என்னுடன் ஜோடியாக நடித்த நடிகைகளே பின்னாளில் அம்மாவாகவும் நடித்துள்ளார்கள். அந்த வகையில் மீனாவும் சேரக்கூடும் என ரஜினியே சொல்ல, மீனா வெட்கப்பட்டு, ‘நான் மாட்டேன்’ என்றார். ஆனால் இன்றோ, அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் தாராளமாக நடிப்பேன் என்று அறிவித்துள்ளார்.

தலைவரோட இன்னொரு கெட்டப்!

தலைவரோட இன்னொரு கெட்டப்!

ஆனால் ஸ்ரீப்ரியா மட்டும் இன்னும் அப்படி நடிக்கவில்லை. அன்றைய நாட்களில் ரஜினியுடன் அதிகப் படங்களில் நடித்த நடிகைகளில் ஸ்ரீதேவிக்கு அடுத்த இடம் ஸ்ரீப்ரியாவுக்குத்தான்.

சமீபத்தில் இந்த இரு நடிகைகளும் ரஜினியை லிங்கா படப்பிடிப்பில் சந்தித்துப் பேசினர். தங்களது எவர்கிரீன் ஹீரோவுடன் இருவரும் இணைந்து நின்று படம் எடுத்துக் கொண்டனர். ரஜினியுடன் தங்களது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இருவருக்கும் ரஜினி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். வாழ்த்து எதற்கு என்கிறீர்களா? ஸ்ரீப்ரியா இயக்கத்தில் மீனா – வெங்கடேஷ் நடித்த த்ரிஷ்யம் படத்தின் தெலுங்குப் பதிப்பு பெற்ற வெற்றிக்குத்தான்!

-என்வழி
4 thoughts on “சூப்பர் ஸ்டார்… என்றும் மாறாத இளமைக்குச் சொந்தக்காரர்!

 1. Elango

  \\வயதாக ஆக இளமை கூடிக் கொண்டே போகும் அதிசயம் வரம் வாங்கி வந்தவர் என்றால் அவர் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியாகத்தான் இருக்க முடியும்.

  யோகாவை பற்றி அவர் அடிகடி சொன்னாலும் …அவருடைய தீய பழக்கங்களால் சற்று சோர்ந்து போய் இருந்தார்!

  ஆனால் அவைகளை எல்லாம் இபொழுது விடோழித்து விட்டு …இபொழுது உடலில் மட்டும் கவனம் செலுத்துவது …அவரின் இளமையின் ரகசியம்!

  எல்லா இளைஞர்களும் இதை பின் பற்ற வேண்டும்!

  அதற்கு நடிகர் சிவகுமார் தான் முதல் உதாரணம்! பிறகு கமல் ஹாசன்!!

  அந்த ரகசியம் இதோ ..!

  1. உடலுக்கு தேவையானவை இரண்டு ..ஒன்று பிராணவாயு …மற்றொன்று பிராணசக்தி!

  2. பிராணவாயு …நாம் சுவாசிக்கும் காற்றிலேயே நிறைய இருகின்றது …சரியான மூச்சு பயிற்சியை செய்தால் கிட்டிவிடும்! அதுவும் பிரம்மா முஹுர்த்தத்தில் செய்வது நல்லது! “கபால பாதி” முதலில் செய்யவேண்டும் ..பிறகு அனுளோம் விளோம் ..செய்ய வேண்டும்

  3. பிராணசக்தி நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைகின்றது …உணவு உட்கொள்ளும் முறையாவது …

  * பசித்த பின் பூசி (பசி எடுக்காமல் உண்ணும் அனைத்தும் விஷமாக மாறும் ..ஜீரணம் ஆகாது)
  * சாப்பாட்டிற்கு முன் அரை மணி நேரதிற்குளாக தண்ணீர் குடிக்க கூடாது
  * சாப்பிடும் பொழுது குடிக்க கூடாது
  * சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து தான் குடிக்க வேண்டும்
  * உணவை வாயில் உமிழ் நீரால் நன்கு அசை போட்டு கரைத்து சாப்பிட வேண்டும்

  இந்த ரகசியங்களை நம் சித்தர்கள் எளிமையாக சொன்னார்கள் …”மருந்தே உணவு ….உணவே மருந்து” என்று!

  இந்த ரகசியங்களை கையாண்டால் …உணவு நன்கு ஜீரணமாகி ….உணவே மருந்தாவது சத்தியம்…அனைவரும் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *