BREAKING NEWS
Search

‘ரஜினி-கமல் தொடர்ந்து முதல் நிலையில் இருப்பது பெருமையாக உள்ளது’ – ஸ்ரீதேவி

‘ரஜினி-கமல் தொடர்ந்து முதல் நிலையில் இருப்பது பெருமையாக உள்ளது’ – ஸ்ரீதேவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர், இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து முதல் நிலை நாயகர்களாகத் தொடர்வது எனக்கு பெருமையாக உள்ளது. அவர்களுடன் பல ஆண்டுகள் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது,”   என்றார் நடிகை ஸ்ரீதேவி.

ஒரு காலத்தில் ரஜினி – கமலுக்கு தொடர்ந்து ஜோடியாக நடித்துக் கலக்கியவர் ஸ்ரீதேவி. பின்னர் பாலிவுட் போய் கொடிகட்டிப் பறந்தார்.

14 ஆண்டுகளுக்கு முன் இந்திப் படத் தயாரிப்பாளர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை நாயகியாக்கும் முயற்சியிலும் உள்ளார் ஸ்ரீதேவி.

இந்த நிலையில் 14 வருடங்களுக்குப்பின் அவர், மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் ‘இங்கிலீஷ்-விங்கிலீஷ்’ என்ற படத்தின் மூலம் அவர் மறுபிரவேசம் செய்து இருக்கிறார்.

இந்த படத்தின் `டிரைலர்’ வெளியீட்டு விழா, சென்னை பி.வி.ஆர். தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி, நிருபர்களிடம் கூறுகையில், “இனி நிச்சயமாக தமிழிலும் நடிப்பேன். நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவள் அல்லவா? தமிழை எப்படி மறப்பேன்?

என் மகள்கள் இருவரும் சின்ன குழந்தைகளாக இருந்தார்கள். அவர்களை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. இப்போது அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன்,” என்றார்.

உங்களுக்கு ஜோடியாக நடித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இன்னமும் முதல் நிலை கதாநாயகர்களாக நடித்துக் கொண்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது, “பெருமையாக உணர்கிறேன்.. அவர்களின் இணையற்ற உழைப்பின் பலன் அது. அவர்களுடன் பல ஆண்டுகள் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?, என்று கேட்டபோது,

“நிச்சயமாக நடிப்பேன். இரண்டு பேரையும் சமீபத்தில் கூட சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நியாயமாக இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். பொருத்தமான சூழல் அமைய வேண்டும்,” என்றார்.

என்வழி சினிமா செய்திகள்




3 thoughts on “‘ரஜினி-கமல் தொடர்ந்து முதல் நிலையில் இருப்பது பெருமையாக உள்ளது’ – ஸ்ரீதேவி

  1. Manoharan

    கமலுக்கு ஸ்ரீதேவி ஜோடி, ரஜினிக்கு ஸ்ரீதேவி மகள் ஜோடி.
    _____________________

    🙂 🙂 🙂

  2. nutton

    வருங்கள இந்திய பிரதமர் , பேச்சளவில் உள்ள இந்திய வல்லரசு நாடு என்ற பெயரை உண்மையில் இந்தியாவை வல்லரசு நாடக்க இவரால் மட்டுமே முடியும் அதற்க்கு பிஜேபி அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் இந்திய மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

  3. vasanthan

    Manoharan says:கமலுக்கு ஸ்ரீதேவி ஜோடி, ரஜினிக்கு ஸ்ரீதேவி மகள் ஜோடி,நான் இதை அமோதிக்கிறேன் ,சூப்பர் ,…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *