BREAKING NEWS
Search

ஈழப் பிரச்சினை: பொள்ளாச்சி, மதுரையில் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!

ஈழப் பிரச்சினை: பொள்ளாச்சி, மதுரையில் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!

rajini-pollachi

பொள்ளாச்சி: பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் அமைத்தல், இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை.. இந்த இரு கோரிக்கைகளும்தான் இன்று தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.

மாணவர்களால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் இன்று மக்கள் கோரிக்கைகளாக மாறி பெரும் போராட்டக் களமாக தமிழகத்தை மாற்றியுள்ளது.

இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களும் இந்தப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். இரு தினங்களுக்கு முன் சோளிங்கர் நகரில் ரஜினி ரசிகர்கள் பெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அனைத்துக் கட்சியினரும் இதில் பங்கேற்றனர்.

rajioni-fans

அடுத்து இன்று பொள்ளாச்சி நகரிலும், மதுரையிலும் ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஏராளமான ரசிகர்களுடன் பொது மக்களும் இதில் பங்கேற்றனர். பல்வேறு நடிகர்களின் ரசிகர்களும் இந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மற்ற மாவட்ட ரசிகர்களும் வரும் நாட்களில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளனர்.

-என்வழி செய்திகள்

 

 




6 thoughts on “ஈழப் பிரச்சினை: பொள்ளாச்சி, மதுரையில் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!

  1. குமரன்

    இது குறித்த அறிவிப்புகள் முன்னதாக என்வழியில் வந்தால் அருகாமையில் உள்ளவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

  2. raja

    மாணவர்கள் போராட்டாம் பற்றி ஒரு பதிவும் இல்லை , ரஜினி ரசிகர்கள் போராட்டம் என்றவுடன் படத்துடன் செய்தி .. தமிழன்டா…

  3. itssp

    அபு சலிமிடம் AK 57 துப்பாக்கி வாங்கிய சஞ்சய் duttai மன்னிக்க சொல்லும் ரஜினி காந்த மாணவர்கள் போரட்டத்தின் போது வாய் திறக்காத காரணம் என்ன .

  4. Kannan

    ரஜினி மாணவர் போராட்டம் மற்றும் ஈழத் தமிழர் போராட்டம் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை ஆனால் சஞ்சய் தத் தீர்ப்பை பற்றி உடனே கருத்து சொன்ன ரகசியம் என்னவோ…….

  5. Ravi.S

    எல்லா வற்றிக்கும் ரஜினியை இழுப்பது சரியில்லை. இது ஜனநாயக நாடு. ரஜினி தன் மனதில் பட்டதை சொல்லியுள்ளார். அதில் தப்பு இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *