BREAKING NEWS
Search

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே படுதோல்வி.. புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே படுதோல்வி.. புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன

maithri

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே படுதோல்வியைத் தழுவி வருகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 49 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்ரிபால ஸ்ரீசேன முன்னிலை வகித்து வருவதால் இலங்கையின் அடுத்த அதிபராகிறார்.

மைத்ரிபாலவுக்கு 5 சதவீதமும்; ராஜபக்சேவுக்கு 44.6 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. அதிபராக உள்ள மகிந்த ராஜபக்சேவும் அவரை எதிர்த்து 49 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்ரிபால ஸ்ரீசேனவும் போட்டியிட்டனர்.

இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் 72சதவீத வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை. பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக தபால் வாக்குகளும் பின்னர் மக்கள் அளித்த வாக்குகளும் எண்ணப்பட்டன. தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மகிந்த ராஜபக்சேவுக்கு மிக மிகக் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன.

rajapaksa

மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கு மிக அதிக அளவில் தமிழர்கள் வாக்களித்துள்ளனர். சிங்களர் வாழும் பகுதிகளிலும் கூட ராஜபக்சே தோல்வியை சந்தித்துள்ளார். அங்கும் மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கே அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

இதனால் இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால ஸ்ரீசேன பதவி ஏற்பது உறுதியாகி விட்டது. அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமான இல்லமான அலரி மாளிகையைவிட்டு மகிந்த ராஜபக்சே இரவோடு இரவாக வெளியேறிவிட்டார். தற்போதைய நிலையில் மைத்ரிபாலவுக்கு 53சதவீத வாக்குகளும் ராஜபக்சேவுக்கு 45.6 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

ராஜபக்சேவின் ஊடக செயலாளர் விஜயானந்த ஹேரத் பேசுகையில், இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியை ஒப்புக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

மக்களின் விரும்பத்தின்படி, சுமூகமான முறையில் தேர்தல் முடிவை எதிர்க்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் ராஜபக்சே.

-என்வழி




3 thoughts on “இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே படுதோல்வி.. புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன

  1. JB

    அவன் தோற்றால் ஒன்றும் பெரிசாக பாதிப்பு இல்லை. Election முடியும் முன்னமே, சொத்து எல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பியாச்சு. குடும்பமும் Los Angeles இற்கு குடியேற ticket எடுத்தாச்சு.

    அதால இன்னமும் கொள்ளையடிக்க முடியாதே தவிர, கொள்ளையடிச்சது திரும்ப கிடைக்காது.

    இப்போது அதிபராக வந்து இருப்பவர், இரண்டு மாதத்துக்கு முதல் வரை, ராஜபக்சவின் தோழன். Election என்று இப்படி திடீர் மாற்றம். பார்ப்போம் எப்படி போகுது என்று. இனியாவது என்னுடைய தாய் நாட்டிற்க்கு விடிவு காலம் வரட்டும்.

  2. குமரன்

    அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

    ராஜபக்சே அன்று வான் வழிக் குண்டுகளை வீசித் தாக்கி 2 லட்சத்துக்கும் மேல் அப்பாவித்தமிழர்களைக் கொன்று குவித்தான்.

    இன்று ஒரு தேசத்தின் குடியரசுத் தலைவர் என்ற பதவியில் இல்லை, இனி சர்வதேச நீதிமன்றம் அவன் மீது தொடர் நடவடிக்கை எடுப்பதில் எந்தத் தடையும் இருக்க முடியாது. நிச்சயம் அவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை பெற்றுத் தரவேண்டும். வைகோவை எள்ளி நகையாடியவர்கள் கூசும்படிக்கு அவர் இதைச் செய்து முடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *