BREAKING NEWS
Search

நோ பால் போட பிக்ஸிங்… கறுப்புப் பணம்… பெண்கள் – ஐபிஎல் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய டிவி!

நோ பால் போட பிக்ஸிங்… கறுப்புப் பணம்… – ஐபிஎல் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய டிவி!


டெல்லி: ஐபிஎல் 5 போட்டித் தொடரில் சூதாட்டமும் கறுப்புப் பணமும் எந்த அளவுக்கு விளையாடுகிறது என்பதை  மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது இந்திய தொலைக்காட்சி ஒன்று.

கிரிக்கெட் என்பது விளையாட்டல்ல, மெகா சூதாட்டம் என்ற நிலை உருவாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகிவிட்டது. குறிப்பாக ஐபிஎல் வந்தபிறகு, அது பக்கா வியாபாரம் – சூதாட்டம் என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால் அந்த விளையாட்டு மீதுள்ள ஈர்ப்பு காரணமாக இந்த குற்றச்சாட்டுகளைச் சகித்துக் கொண்டு ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.

இந்த நிலையில், இந்தியா டிவி என்ற இந்தி சேனல், ஐபிஎல் வீரர்கள், நிர்வாகிகள் எந்த அளவு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும், இங்கு விளையாடும் கறுப்புப் பணத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ் போன்ற அணிகளில் விளையாடும் வீரர்கள் மூவர் ஸ்பாட் பிக்ஸிங் முறையில் பணம் பெற்றதை ரகசிய காமிரா மூலம் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று உள்ள வீரர் ஸ்ரீவத்சவா. இவர் ஐ.பி.எல். போட்டியில் நோபால் வீச ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். விதிமுறைப்படி சர்வதேச போட்டியில் பங்கேற்காத உள்ளூர் வீரர்கள் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் தான் பெற முடியும்.

பெண்களை வைத்து…

ஆனால் ஸ்ரீவத்சவாவுக்கு கறுப்பு பணமாக ரூ.70 லட்சம் வரை கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த சேனல் தெரிவித்து உள்ளது. இதுபோல வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்த பெண்களையும் பயன்படுத்த அவர் உதவி புரிந்துள்ளார்.

இடதுகை வேகப்பந்து வீரரான ஸ்ரீவத்சவாவுக்கு 5-வது ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்பட வில்லை. இவர் ஐ.சி.எல். போட்டியில் ஆடியவர். இதுபோல புனே அணியில் இடம் பெற்றுள்ள உள்ளூர் வீரரான மோனிஸ் மிஸ்ராவுக்கு அதன் உரிமையாளர்கள் ரூ.1.45 கோடி கொடுத்து தக்க வைத்துள்ளனர். இதில் ரூ.1 கோடி வரை கறுப்பு பணமாக கொடுத்து உள்ளனர்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர் சுசிந்திரா. இவர் கடந்த ஆண்டு நடந்த முதல் தர போட்டியில் டி.வி. சேனல் நிருபரின் விருப்பதற்கு ஏற்ப நோபால் வீசியுள்ளார். அந்த நிருபரிடம் ரூ.60 லட்சம் கொடுத்தால் அணி மாற தயார் என்று கூறியுள்ளார்.

தற்போதைய ஐ.பி.எல். தொடரில் ஒரு அணிக்கு கேப்டனாக உள்ள வெளிநாட்டு வீரர் ஒருவரும் “ஸ்பாட் பிக்சிங்” சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷாலாப் ஸ்ரீவாஸ்தவ்

டெக்கான் சார்ஜர்ஸ் அணி வீரர் டிபி சுதீந்திரா ஒரு நோ பாலுக்கு ரூ 40000 வாங்கியுள்ளார்.

இதுபோல வெவ்வேறு அணிகளில் ஆடும் 5 ஐபிஎல் ஆட்டக்காரர்கள் இந்த ரகசிய புலனாய்வில் சிக்கியுள்ளனர்.

கிரிக்கெட் மேனேஜர்கள் என்ற போர்வையில் வீரர்களிடம் பேசி இத்தனை தகவல்களையும் பதிவு செய்துள்ளனர் இந்தியா டிவி செய்தியாளர்கள்.

நேற்று இரவிலிருந்து இந்த செய்தி வெளியாக ஆரம்பித்ததும், சம்பந்தப்பட்ட வீரர்கள் மறுப்பு தெரிவித்தனர். பிசிசிஐயும் இதற்கு மறுப்பு தெரிவித்தது ஆரம்பத்தில்.

இப்போது வீரர்கள் கையும் களவுமாக மாட்டியிருப்பது உறுதியானதால், அவர்களை கிரிக்கெட்டின் அனைத்து வகை ஆட்டங்களிலிருந்தும் நீக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தியா டிவியின் டேப்பை வாங்கிப் பார்த்து மேலும் நடவடிக்கை எடுக்கப் போவதாக பிசிசிஐ தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லாவும் இதை உறுதிப்படுத்தினார்.

-என்வழி செய்திகள்
2 thoughts on “நோ பால் போட பிக்ஸிங்… கறுப்புப் பணம்… பெண்கள் – ஐபிஎல் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய டிவி!

 1. HOTLINKSIN.COM

  இந்த சேனல் மாதிரி நம்ம ஊர்ல ஏதும் சேனல் இல்லையா… கொள்ளை கொள்ளையா சுருட்டுறவங்களை கண்டுபிடிக்கலாமே…

  ……………..
  சப்போட்டா பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்கள்!
  http://www.hotlinksin.com/story.php?id=10732
  ……………….

  ஒன்பது சிம்பிளான அழகு குறிப்புகள்!
  http://www.hotlinksin.com/story.php?id=10763

 2. kalaivanan

  நீங்களும் IPL fever-ல தானே இருக்கீங்க…அப்புறம் எதுக்கு இந்த ‘செய்தி’ 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *