BREAKING NEWS
Search

மாநில அளவில் மாநாடு… ரசிகர்கள் மனசைப் பிரதிபலித்த எஸ்பி முத்துராமன், சரத்குமார்!

மாநில அளவில் மாநாடு… ரசிகர்கள் மனசைப் பிரதிபலித்த எஸ்பி முத்துராமன், சரத்குமார்!

rajini-fans-meet

சென்னை: ரஜினியை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் தவமிருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு முறை மாநில அளவில் ரசிகர்கள் மாநாடு நடத்த வேண்டும், என இயக்குநர் எஸ் பி முத்துராமன் கேட்டுக் கொண்டார்.

கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ் பி முத்துராமன் பேசுகையில், ”

சூப்பர் ஸ்டார் ரஜினியோடு அதிக நேரம் இருந்தவன் நான்தான். அவருக்கு திருமணம் நடந்தது எனது படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான். அவருக்கு குழந்தைகள் பிறந்ததும் எனது படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான்…

எனக்கு பெங்களூரில் அண்ணன் சத்யநாராயணா இருக்கிறார், இங்கே சென்னையில் என் உடன் பிறக்காத அண்ணனாக எஸ்பி முத்துராமன் இருக்கிறார் என்று என்னை கவுரவப்படுத்தியிருக்கிறார் ரஜினி.

ரஜினியின் ரசிகர்களை அவர் சார்பில் இன்றைக்கும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர் சார்பில் பல ஊர்களுக்கும் போய் ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருப்பவன் நான்தான். ரசிகர்கள் அத்தனை பேரும் அவரை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என துடிக்கிறார்கள்.

எவ்ளோ நாளைக்குதான் உங்களையே பார்ப்பது.. ரஜினி சாரை வரச் சொல்லுங்க என்று என்னிடம் கேட்கிறார்கள். இப்போது அவர்கள் சார்பாக நான் ரஜினியிடம் கேட்பது இதுதான்.. ஒரு முறை மிகப் பெரிய அளவில் ஒரு மாநில மாநாடு மாதிரி ரசிகர்கள் மாநாட்டைக் கூட்ட வேண்டும். அத்தனை ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்,” என்றார்.

பின்னர் பேசிய சரத்குமாரும் இதே கோரிக்கையை ரஜினியிடம் வைத்தார். அதுவும் ஒரு ரஜினி ரசிகராக இதை அவரிடம் கோருவதாக சரத்குமார் தெரிவித்தார்.

இதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்ட தலைவர், தான் பேசும்போது, “கோச்சடையான் வெற்றி விழாவில் அதிகம் பேசுகிறேன். அந்த விழாவை நீங்கள் கேட்டுக் கொண்டபடி ரசிகர்கள் விழாவாகவே நடத்தி, ரசிகர்களைச் சந்திக்கிறேன்,” என்றார்.

எந்திரன் படம் தொடங்கும் முன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சூப்பர் ஸ்டார் ரஜினி சந்தித்தார். அதன் பிறகு தன் பிறந்த நாளையொட்டி சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் பெரிய மாநாடு போல நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அடுத்து கோச்சடையான் விழாவையே ரசிகர் மன்ற மாநாடாக நடத்தப் போவதாக அறிவித்துள்ளதால், ரசிகர் மன்றத்தினர் பெரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

-என்வழி




4 thoughts on “மாநில அளவில் மாநாடு… ரசிகர்கள் மனசைப் பிரதிபலித்த எஸ்பி முத்துராமன், சரத்குமார்!

  1. jayakumar

    Dear Sankar,

    Where is K.S.Ravikumar’s speech. We would like to know what he spoke.

    Regards,
    Jayakumar

  2. Thalaivar fan

    Hmm…nadthulla ‘red chip’ madthikitthu niraiya per alaiyarangga.
    Tappitavari kudhe nalla yennam varathu.
    Rasigargal maanadum vetri vizha-um orey naali kondadurathulle yenna tappu irukku?
    Vetri vizha rasigargaludan kondaduvathu tan sirappu.
    Yen, ithu varaikkum avarai santhitha rasigargalidam ippadiya korukkai vidthar? Padam nadikkamal irumbothu kudhe yetahanaiyo rasigargal avarudan pugaipadam pidithargal. Ithellam yarukkum teriyatha?
    Arivuillamal yaro yetho seithal, athai inge vanthu comment adikka tevai illai.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *