BREAKING NEWS
Search

கோச்சடையான்… விவரங்களை நானே விரைவில் அறிவிக்கிறேன்! – சௌந்தர்யா

rajini-kochadaiyaan

சென்னை: கோச்சடையான் படம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். நானே சீக்கிரம் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் படத்தின் இயக்குநரான சௌந்தர்யா.

கோச்சடையான் திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் பரவியுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் என்றாலே, படம் தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்பே பரபரப்பு எகிறிவிடும்.

இதற்கு கோச்சடையானும் விலக்கல்ல. ஆரம்பத்தில் கோச்சடையான் எந்த மாதிரி படம் என்பதில் பலருக்கும் குழப்பம் இருந்ததது. எனவே எதிர்ப்பார்ப்பும் இல்லாமலிருந்தது. ஆனால் பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சமில்லை. இதுவும் கூட நல்லதுதான் என்றே ரஜினியும் கருதினார்.

ஆனால் அவரது படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால், தலைவரின் அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். கோச்சடையான் சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ளதாக இயக்குநர் சௌந்தர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கூறிவருவதால், அவதார், டின் டின் ரேஞ்சுக்கு இப்போது எதிர்ப்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீடு இதோ அதோ என தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. எப்படியும் இந்த மாதத்துக்குள் படத்தின் முன்னோட்டம் வெளியாகிவிடும் என்று கோச்சடையான் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே கோச்சடையான் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதாகவும் படத்தின் புரமோஷன் வேலைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

படத்தின் டீஸர், ‘மேக்கிங் ஆஃப் கோச்சடையான்’, டிரெய்லர், பாடல்கள் உருவான விதம், கோச்சடையான் செல்போன் என இதுவரை எந்தப் படத்துக்கும் செய்யாத அளவு விளம்பரங்கள் இனி அணி வகுக்கப் போகின்றனவாம்.

தீபாவளியன்று கோச்சடையான் ரிலீஸ் செய்து ரசிகர்களை டபுள் தீபாவளி கொண்டாட வைக்கத் திட்டமிட்டுள்ளதாக சில தினங்களாக செய்தி வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.

“கோச்சடையான் படம் தொடர்பான வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம். நானே உங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு விவரங்களை அறிவிக்கிறேன்!”

-என்வழி ஸ்பெஷல்

கோச்சடையான் படம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். நானே சீக்கிரம் அறிவிக்கிறேன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *