சௌந்தர்யா… இந்தியப் பெண் இயக்குநர்கள் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வினுக்கு இந்த ஆண்டு பிறந்த நாள் மறக்க முடியாதது. இந்திய பெண் இயக்குநர்கள் யாருக்குமே அமையாத வாய்ப்பைப் பெற்றுள்ளவர் இவர் ஒருவர்தான்.
காரணம் அவரது கன்னி முயற்சியான கோச்சடையான். அதுவும் இந்தியாவின் ஆனானப்பட்ட இயக்குநர்களே தவம் கிடக்கும் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கியுள்ள அவரது முதல்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகப் போகிறது.
அந்த மகிழ்ச்சி மற்றும் பரபரப்புடன் தனது பிறந்த தினத்தை இன்று கொண்டாடினார் சௌந்தர்யா.
ஒரு கிராபிக் டிசைன் மேற்பார்வையாளராக தனது கேரியரைத் தொடங்கிய சௌந்தர்யா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன், எந்திரன் என ரஜினியின் படங்களில் கிராபிக் டிசைனராகப் பணியாற்றினார்.
அதே காலகட்டித்தில் ரஜினியை வைத்து அனிமேஷன் படமாக சுல்தான் – தி வாரியரைத் தொடங்கினார். ஆனால் பல காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
பின்னர் கோவா என்ற படத்தைத் தயாரித்த சௌந்தர்யா, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகுதான் கோச்சடையானுக்கு இயக்குநராக அறிவிக்கப்பட்டார்.
இந்தியாவின் முதல் பர்பார்மன்ஸ் கேப்சரிங் 3 டி படம் என்ற பெருமையுடன் வெளியாகவிருக்கும் கோச்சடையானின் படப்பிடிப்பை முடித்துவிட்ட சௌந்தர்யா, இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளார்.
வரும் டிசம்பர் 12 அல்லது 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வந்துவிடும் என்றவர்கள், இப்போது கொஞ்சம் யோசனையாகவே சொல்கிறார்கள்.
இருந்தாலும் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக மொழிகள் மற்றும் அரங்குகளில் கோச்சடையானை வெளியிடவிருக்கிறார் சௌந்தர்யா.
27 வயதில் இதுவரை எந்த இந்தியப் பெண் இயக்குநருக்கும் அமையாத வாய்ப்பு இது!
-என்வழி சினிமா செய்திகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள். எங்கள் தலைவரை வடை பாயாசத்துடன் விருந்து சாப்பிட காத்திருக்கிறோம் கோச்சடயானில்.
தீபாவளி கொண்டாடப்போவது கோச்சடையான் வெளியாகும் அன்றுதான் என்று என் குடும்பமே சபதம் எடுத்திருக்கிறது. வாழ்க தலைவர்.
அன்புடன் ரவி.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்…..உங்கள் பகிர்வுக்கு நன்றி…..
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வாழ்த்துக்கள்
என்ன அப்படி ஒரு பெரிய வாய்ப்பு, தகப்பன் பிள்ளை படம் எடுப்பது பெரிய வாய்ப்பா? ஒன்றும் விளங்கவில்லை