BREAKING NEWS
Search

கோச்சடையான் வெற்றி விருந்து… சவுந்தர்யா, ஏஆர் ரஹ்மான் பங்கேற்பு!

கோச்சடையான் வெற்றி விருந்து… சவுந்தர்யா, ஏஆர் ரஹ்மான் பங்கேற்பு!

kochadaiiyaan-success

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் வெற்றியை சென்னையில் விருந்தளித்துக் கொண்டாடினார் இயக்குநர் சவுந்தர்யா ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க, கேஎஸ் ரவிக்குமார் கதை, திரைக்கதை, வசனத்தில், சவுந்தர்யா இயக்கத்தில் உருவான படம் கோச்சடையான் -தி லெஜன்ட்.

6 மொழிகளில் உருவான இந்தப் படம் பெரும் பிரச்சினைகளைத் தாண்டி கடந்த மே 23-ம் தேதி உலகெங்கும் 4000க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியானது.

இந்தியில் சரியாகப் போகாவிட்டாலும், தமிழ், தெலுங்கில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தமிழில் பிரமாண்ட ஓபனிங் கிடைத்தது இந்தப் படத்துக்கு. இன்னும் நூற்றுக்கும் அதிகமான அரங்குகளில் படம் ஓடிக் கொண்டுள்ளது தமிழகத்தில். சென்னை மற்றும் சுற்றுப் புறங்கலில் இன்றைக்கும் 60 அரங்குகளில் கோச்சடையான் ஓடிக் கொண்டிருப்பது, சமீப காலத்திய புது சாதனை என்கிறது கோடம்பாக்கம்.

இந்த தேதிவரை படம் அனைத்து வழிகளிலும் ரூ 170 கோடியைத் தாண்டி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸில் தெரிவித்துள்ளனர். பாக்ஸ் ஆபீஸ் டோடல் என்ற தளம், கோச்சடையான் 26 நாட்களில் 200 கோடிக்கும் மேல் வசூலித்ததாக் கூறுகிறது.

10464165_10201841844477175_1009532294752276139_n

ஆனால் படத் தயாரிப்பாளர்கள் இதுபற்றி எதுவும் அறிக்கை வெளியிடவில்லை. இந்த வாரம் கோச்சடையானின் வசூல் பற்றி அதிகாரப்பூர்வ அறிக்கை தரவிருக்கிறது ஈராஸ் நிறுவனம். ரூ 125 கோடி செலவில் இந்தப் படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இந்த வெற்றியை சென்னையில் விருந்தளித்துக் கொண்டாடினார். இந்த விருந்தில், படத்தின் இயக்குநர் சவுந்தர்யா ரஜினி, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், படத்தில் பணியாற்றிய இயக்குநர் ஆர் மாதேஷ், ரஹ்மானின் சகோதரி ஏஆர் ரெஹானா மற்றும் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பங்கேற்றனர்.

ஆக, தலைவர் ரஜினி தன் ரசிகர்களைச் சந்திப்பது உறுதியாகிவிட்டது!

-என்வழி




5 thoughts on “கோச்சடையான் வெற்றி விருந்து… சவுந்தர்யா, ஏஆர் ரஹ்மான் பங்கேற்பு!

  1. jegan n

    happy to hear kochadaiyan s success.but still not satisfied when compared to enthirans success

  2. Rajagopalan

    i had also seen boxofficetotal.com
    they are saying till date 210 Crores.
    Please confirm that Vino…
    I want that to be true…

  3. srikanth1974

    நம் அன்புத்தலைவர்,ஹிந்தியில் 25 படத்திற்குமேல் நேரடி படமாகவே நடித்திருக்கும் சூழ்நிலையில் கோச்சடையானை ஒரு மொழிமாற்று படமாக
    வெளியிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.இத்தனைக்கும் இப்படத்தில்
    நடித்திருக்கும் நடிகர்கள் நம் தலைவர் உட்பட சரத்குமார்,ஜாக்கிஷெராப் ,தீபிகாபடுகோன்,நாசர் ஆகிய அனைவருக்கும் ஹிந்தி நன்றாகப் பேசவரும்.
    அப்படி அவர்களையே அவர்களின் கதாப்பாத்திரத்திற்கு சொந்தக் குரலில்
    பேசவைத்திருந்தால் அங்கேயும்,நேரடிப்படமாக வந்திருக்கும் நல்ல வியாபாரமும்,நல்ல வசூலும்,நல்ல வரவேற்பும்,கிடைத்திருக்கும்.ஆனால் ஏன் அப்படிச்செய்யவில்லை? என்று தெரியவில்லை. கோச்சடையான் ஹிந்தியில் சரியா போகாததற்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
    நன்றி.
    அன்புடன் ஸ்ரீகாந்த்.ப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *