BREAKING NEWS
Search

என் தென்னிந்திய திரைப்பயணம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஆரம்பமாவது மகிழ்ச்சியாக உள்ளது! – சோனாக்ஷி சின்ஹா

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் என் தென்னிந்திய திரைப்பயணம் ஆரம்பமாவது மகிழ்ச்சியாக உள்ளது! – சோனாக்ஷி சின்ஹா

sonakshi-6 copy

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் என் தென்னிந்திய திரைப்பயணம் ஆரம்பமாவது மிக மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் சோனாக்ஷி சின்ஹா.

‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்தான தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன.

இரண்டு நாயகிகள்

கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ள படத்தில் இரண்டு நாயகிகள் உண்டு என்றும் அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்கா என இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது.

சோனாக்ஷி சின்ஹா இந்தியில் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார். இவருக்கு வயது 27. தன்னை விட மிகவும் வயது குறைந்த சோனாக்ஷியுடன் நடிப்பதற்கு ரஜினி முதலில் தயக்கம் காட்டினார்.

sonakshi-5

ஆனால் ரஜினி – சோனாக்ஷி ஜோடியின் வயது வித்தியாசத்தை நியாயப்படுத்துவது மாதிரி கதையில் சில மாறுதல்களை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் செய்த பிறகு ரஜினி சம்மதம் தெரிவிக்க, அதன் பிறகே சோனாக்ஷியிடம் பேசினார்களாம். அவரும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து சோனாக்ஷி தனது ட்விட்டரில், “சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் படத்தின் மூலம் எனது தென்னிந்திய திரைப்பயணம் ஆரம்பமாவது மகிழ்ச்சியாக உள்ளது,” என கூறியுள்ளார்.

பின்னர் மும்பையில் அளித்த பேட்டியில் இந்தப் படத்தில் தான் நடிப்பது குறித்து இப்படி கூறியிருந்தார்:  “ஒரு வழியாக தென்னிந்திய மொழி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். எனது முதல் படமே சிறந்த படமாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரஜினி சாருக்கு ஜோடியாக ஒரு நல்ல கதையில் நான் நடிக்க இருக்கிறேன். இப்படத்தினைத் தொடர்ந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் அமையும் என்று நம்புகிறேன்!”

-என்வழி




6 thoughts on “என் தென்னிந்திய திரைப்பயணம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஆரம்பமாவது மகிழ்ச்சியாக உள்ளது! – சோனாக்ஷி சின்ஹா

  1. srikanth1974

    முதல் பயணம் முத்தான பயணமாக அமைய எங்களின் வாழ்த்துக்கள்.

  2. மிஸ்டர் பாவலன்

    தமன்னா பெரிய நடிகர்கள் படங்களில் ஒப்பந்தம் ஆகாதது
    ஆச்சரியமாக உள்ளது. வீரம் படத்தில் மிக அழகாக
    இருந்தார். விரைவில் சூப்பர் ஸ்டார், உலக நாயகன்
    படங்களில் தமன்னா ஒப்பந்தம் ஆக நம் வாழ்த்துக்கள்!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  3. kumaran

    தலைவர் ரசிகர்களுக்கு(மக்களுக்கும் ) விருந்தாக அமைய பிரார்த்திகிறேன்

  4. kumaran

    sonaackshi சின்ஹா (செய்து வைத்த சிலை )மிக அழகு

  5. குமரன்

    சோனாக்ஷி சின்ஹா இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் !

    மிஸ்டர் பாவலன் அவர்களின் பார்வை இப்போது கலைச்செல்வி திரிஷாவிடம் இருந்து
    தமன்னா பக்கம் திரும்பி உள்ளது.
    கலைச்செல்வி
    திரிஷாவின் மார்க்கெட் கடந்த இரண்டாண்டுகளில் சரிந்து வந்து, இப்போது காணாமல் போய் உள்ளது கவனத்துக்கு வந்தது.
    அடுத்த கலைச்செல்வி
    தமன்னா மார்க்கட் நிலை குறித்துக் கவலையாக உள்ளது.

  6. மிஸ்டர் பாவலன்

    //மிஸ்டர் பாவலன் அவர்களின் பார்வை இப்போது கலைச்செல்வி திரிஷாவிடம் இருந்து தமன்னா பக்கம் திரும்பி உள்ளது.// (குமரன்)

    வீரம் படம் பார்த்ததில் இருந்து நான் தமன்னா ரசிகர் ஆகி விட்டேன்.
    தமன்னாவின் அடுத்த தமிழ் படம் காண ஆவலாக உள்ளேன்.
    தலை, ரஜினி, உலக நாயகன் போல பெரிய நடிகர்கள் உடன் தமன்னா
    நடித்தால் அவருக்கு சிறப்பு.

    //தமன்னா மார்க்கட் நிலை குறித்துக் கவலையாக உள்ளது.// (குமரன்)

    தமன்னாவுக்கு நல்ல மார்க்கட் உள்ளது. நன்றி.

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *