BREAKING NEWS
Search

தலைவரைச் சந்தித்த சிவகார்த்திகேயனின் உற்சாக அனுபவம்!

தலைவரைச் சந்தித்த சிவகார்த்திகேயனின் உற்சாக அனுபவம்!

rajini-sivak

நேற்று இரவு (திங்கள்கிழமை) விஜய் டிவியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜை எதிர்கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சினிமாவில் குறுகிய காலத்தில் ஒரு நட்சத்திர ஹீரோ அந்தஸ்தும் கோடிகளில் சம்பளமும் கிடைக்கப்பெற்றவர். ஆரம்பத்திலிருந்தே தன்னை தலைவரின் வெறித்தனமான ரசிகன் என மார்த்தட்டி வருபவர். அதனாலேயே பல ரஜினி ரசிகர்களின் அன்புக்குப் பாத்திரமானவர்.

இந்த நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயனுக்குப் பிடித்த நடிகர், அவரைச் சந்தித்த அனுபவங்கள் குறித்து கேட்டார் பிரகாஷ் ராஜ்.

1991-ம் ஆண்டு தலைவரின் க்ளாஸிக் படங்களில் ஒன்றான தளபதியை ரூ 200 டிக்கெட் வாங்கிப் பார்த்தவராம் சிவகார்த்திகேயன். பேனர் கட்டுதல், முதல் நாள் முதல் காட்சி என ஒரு டிபிகல் ரஜினி ரசிகனாகவே இவர் வாழ்க்கை ஆரம்பித்திருக்கிறது.

தன் வாழ்க்கையின் உச்சபட்ச லட்சியமே தலைவரை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்பதுதான் என்ற சிவகார்த்திகேயன், அந்த அனுபவத்தை விவரித்தபோது, அதில் ஒவ்வொரு ரஜினி ரசிகனும் தன்னையே பார்த்திருப்பார் என்பது நிச்சயம்.

ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய 3 படத்தில் நடித்தபோதே தலைவரைப் பார்க்க ஒரு வாய்ப்பு பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டாராம். ஐஸ்வர்யாவும் உறுதி தெரிவித்துள்ளார்.

தலைவரின் சரித்திரப் புகழ்பெற்ற பிறந்த நாளான 12.12.12 அன்று அவரைச் சந்திக்க அரை மணி நேரம் ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். அவரைப் பார்க்க பூச்செண்டுக்கு ஏற்பாடு செய்துகொண்டு, நண்பருடன் வீட்டுக்குச் சென்றபோது, அன்றைய தினம் சந்திப்பது சந்தேகம் என்று ஐஸ்வர்யா சொல்ல, ஆடிப்போய்விட்ட சிவகார்த்திகேயன், கெஞ்சிக் கூத்தாடி அன்றே சந்திக்க வேண்டியிருக்கிறார்.

சரி வாங்க என்று ஐஸ்வர்யா கூறிய அடுத்த நிமிடம் தலைவர் வீட்டில் ஆஜராகியிருக்கிறார் சிவா.

வரவேற்பறையில் இன்று தலைவர் ரஜினியைச் சந்திக்கப் போகிறோம் என்ற மகா பரபரப்போடு காத்திருந்தாராம். கடவுளைச் சந்திக்கப் போகும் பக்தனின் பரபரப்புடன் காத்திருந்ததாக அந்த நிமிடங்களை வர்ணித்தார் சிவா.

அந்த நேரத்தில் தலைவர் ரஜினி தனக்கே உரிய சிரிப்புடன் ‘ஹாய் சிவா…’ என்று கூப்பிட, இவர் பதறித் துடித்து கண்ணீர் மல்க அவர் கையைப் பற்றினாராம். தொடர்ந்து சிவகார்த்தியேன் அப்போது நடித்துக் கொண்டிருந்த எதிர்நீச்சல் பற்றி விசாரித்தவர், ‘போட்டோ எடுத்துக்கலாமா’ என்று கேட்டு தோளில் ரஜினி கைபோட்டதும், தன் வாழ்நாளின் லட்சியம் நிறைவேறிவிட்டதை உணர்ந்ததாகச் சொன்னார் சிவகார்த்திகேயன்.

ரசிகனின் பெயர்கள் மாறினாலும், அந்த மாமனிதர் முன்பு நிற்கும்போது எல்லோருக்கும் ஒரே மாதிரி உணர்வுதான்.

ரசிகனின் மனதில் அவருக்கு போடப்பட்டிருப்பது வெறும் நாற்காலியல்லவே… அன்பு சாம்ராஜ்யத்தின் அதிபர் அல்லவா!

-என்வழி ஸ்பெஷல்
7 thoughts on “தலைவரைச் சந்தித்த சிவகார்த்திகேயனின் உற்சாக அனுபவம்!

 1. Deen_uk

  நேற்று இரவு தான் இந்த வீடியோ பார்த்தேன்.இன்று காலை வீடியோ லின்க்குடன் இந்த செய்தியை அனுப்பவேண்டும் என நினைத்திருந்தேன்.வினோ சார் முந்திட்டாங்க! இந்த வீடியோ பார்க்கும்போது ,சிவகார்த்திகேயன் பேசும் போது ஒவ்வொரு ரஜினி ரசிகனும் தன்னையே பார்த்திருப்பார் என வினோ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!எனக்கு என்னவோ தலைவரின் புது படம் பார்த்தது போன்ற ஒரு சந்தோசம் அனுபவித்தேன்!.தலைவரின் ரசிகன் சிவகார்த்திகேயன் மென்மேலும் வளர்ந்து ஒரு நிரந்தர இடம் பிடிக்க மனதார வாழ்த்துகிறேன்.
  வீடியோ லிங்க்.:
  http://www.dailymotion.com/video/xzu3ub_13nvok2_fun?start=716#.UZJZe7WG3u3

  நீங்களும் இந்த வீடியோ பார்த்து அனுபவியுங்கள்!! தலைவர் பற்றி 03.55 நிமிடத்தில் ஆரம்பிக்கும்.

 2. மிஸ்டர் பாவலன்

  மனோகரன் அவர்களே..உலக நாயகனை நீங்களும் நானும்
  போய் ஆழ்வார்பேட்டை அலவலகத்தில் சந்தித்து வரலாமா?
  என்ன சொல்றீங்க?!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 3. srikanth1974

  பட்டை முருகன் பட்டையைக் கிளப்பிட்டீங்க.
  அருமை நண்பர் திரு.deen uk .அவர்களுக்கும்,எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  என்றும் உங்கள் அன்பு சகோதரன்
  ஸ்ரீகாந்த்.

 4. Gobi

  சூப்பர்:

  // பேனர் கட்டுதல், முதல் நாள் முதல் காட்சி என ஒரு டிபிகல் ரஜினி ரசிகனாகவே இவர் வாழ்க்கை ஆரம்பித்திருக்கிறது

  //தன் வாழ்க்கையின் உச்சபட்ச லட்சியமே தலைவரை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்பதுதான் என்ற சிவகார்த்திகேயன்.

 5. Kokki Kumar

  1. ரஜினிகாந்த் இன்று சுடப்பட்டார்… நாளை குண்டுக்கு இறுதிச் சடங்கு

  2. பாகிஸ்தானில் இருந்த தீவிரவாதியை ரஜினிகாந்த் ப்ளூடூத் மூலம் கொன்றார்.

  3. 100 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ரஜினி முதலாவதாக வந்தார். ஆனால் ஒளி இரண்டாவதாக வந்ததைப் பார்த்து ஐன்ஸ்டீன் இறந்துவிட்டார்.

  4.அலெக்சாண்டர் கிரகாம் பெல் முதன்முதலாக தொலைபேசியை பயன்படுத்தியபோது அதற்கு ஏற்கனவே ரஜினி 2 மிஸ்ட் கால் கொடுத்ததை கண்டுபிடித்தார்.

  5.நியூட்டன் மீது விழுந்த ஆப்பிளை எறிந்ததே ரஜினி தான்.

  6.இந்தியாவில் இருந்து மும்பைக்கு அனுப்பப்பட்ட இமெயிலை அமெரிக்காவில் நிறுத்திவிட்டார் ரஜினிகாந்த்.

  7.ரஜினி 5 மொழிகளில் விசில் அடிப்பார்.

  8.தனது காதலி செய்த தவறை ஒப்புக்கொள்ள வைக்க ரஜினியால் மட்டுமே முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *