BREAKING NEWS
Search

இன்று சிவாஜி 3 டி அடுத்த ட்ரைலர்…. ‘டால்பி அட்மாஸ்’ தொழில் நுட்பத்தில் வெளியீடு!

இன்று சிவாஜி 3 டி அடுத்த ட்ரைலர்…. ‘டால்பி அட்மாஸ்’ தொழில் நுட்பத்தில் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் பரிசாக வரும் சிவாஜி 3 டி படத்தின் புதிய ட்ரைலர் இன்று மாலை சத்யம் திரையரங்கில் வெளியாகிறது.

டால்பி அட்மாஸ் எனும் புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சத்யம் அரங்கில் இந்த ட்ரைலர் பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கும் என்பதால் நிகழ்ச்சிக்கு தலைவர் உள்ளிட்ட அனைவரும் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 500 அரங்குகளுக்கும் மேல் வெளியாகும் சிவாஜி 3டி, ஜப்பானில் மட்டும் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

தமிழகத்தில் 3டி வசதியுடன் கூடிய அரங்குகள் 65 மட்டுமே உள்ளன. சிவாஜிக்காக மேலும் 60 அரங்குகள் வரை 3 டி வசதி செய்யப்பட்டு வருகிறது.

-என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *