BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாரின் பிறந்த தினத்தில் சிவாஜி 3 டி – ஏவி எம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டாரின் பிறந்த தினத்தில் சிவாஜி 3 டி – ஏவி எம் அறிவிப்பு


3 டியில் தயாராகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடி வெற்றிப் படமான சிவாஜி – தி பாஸ், ரஜினியின் பிறந்த நாளான 12.12.12 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதனை ஏவி எம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய சினிமாவின் வர்த்தக சரித்திரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் படம் சிவாஜி. ரஜினி – ஸ்ரேயா நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம், 2007 வரையிலான அத்தனை சினிமா சாதனைகளையும் தகர்த்து புதிய சாதனை படைத்தது.

வெளிநாடுகளில் ஒரு இந்தியப் படத்துக்கு அதுவரை இப்படியொரு கூட்டம் வந்ததில்லை என்று சொல்லும் வகையில் வசூல் அமைந்தது.

பிரிட்டனின் டாப் 10 சினிமாவில் இடம்பெற்ற ஒரே தமிழ்ப் படம் என்ற பெருமையும் கிடைத்தது. இந்தப் படத்துக்குப் பிறகுதான் உலகச் சந்தையில் இந்திய படங்களுக்கே தனி அந்தஸ்து கிடைத்தது.

சிவாஜி படத்தின் நேரடி தமிழ்ப் பதிப்புக்கு வட இந்தியாவில் கிடைத்த வரவேற்பு  அனைவரையும் திகைக்க வைத்தது.

இந்தப் படம் வெளியான 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அதனை 3 டி வடிவில் உருவாக்கியுள்ளனர் ஏவி எம் நிறுவனத்தினர்.

இந்த 3 டி சிவாஜியை, சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான 12.12.12 அன்று உலகம் முழுவதும் திரையிடப் போவதாக அறிவித்துள்ளது ஏவி எம் நிறுவனம்.

உலகத் தரத்தில் இந்த 3 டி வடிவம் அமைந்துள்ளதால், ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் படத்துக்காக காத்திருக்கின்றனர்!

சிவாஜி ரிலீஸ் குறித்து ஏவிஎம் விடுத்துள்ள அறிவிப்பு:




12 thoughts on “சூப்பர் ஸ்டாரின் பிறந்த தினத்தில் சிவாஜி 3 டி – ஏவி எம் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *