BREAKING NEWS
Search

தற்கொலை செய்து கொள்வேன்..! – சிங்காரவேலனின் ‘அழுகாச்சி’ மிரட்டல்

தற்கொலை செய்து கொள்வேன்..! –  புது மிரட்டல் விடும் சிங்காரவேலன்

Thaanu-and-Singaravelan1

‘உங்களை எதிர்த்து என்னால ஒண்ணும் பண்ண முடியல. எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். அப்படி செய்து கொண்டால் உங்களையும் ரஜினி சாரையும் ‘உள்ளே’ உட்கார வைத்துவிடுவார்கள்.. பாக்குறீங்களா?’

-தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணுவுக்கு ஆடியோ மூலம் இப்படி புதிய மிரட்டல் விடுத்துள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.

லிங்கா படத்தின் திருச்சி – தஞ்சை விநியோக உரிமை பெற்ற விநியோகஸ்தர்களில் ஒருவரான சிங்காரவேலன், அந்தப் படம் வெளியான நான்காவது நாளிலிருந்து செய்து வரும் அழிச்சாட்டியங்கள், ஆர்ப்பாட்டங்கள், முரணான பிரச்சாரங்கள், மிரட்டல்கள், நாடகங்கள் திரையுலகம் அறிந்ததே. லிங்கா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரைப் பயன்படுத்தியே தன்னை ஒரு ஆளாகக் காட்டிக் கொண்டு வருகிறார் இந்த நபர்.

கிட்டத்தட்ட தினசரி பிரஸ் மீட் வைக்க ஆரம்பித்து, நாளும் ஒரு புகார், பொய்க் கணக்கு சொல்வதும், நஷ்ட ஈடு என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டுவதும் இன்றுவரை தொடர்கிறது.

லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு பெற்ற பிறகும், மேலும் மேலும் பணம் கேட்டுக் கொண்டிருந்தவர், இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கால்ஷீட் வேண்டும் எனக் கேட்க ஆரம்பித்துள்ளார்.

‘ரஜினிக்கு வயதாகிவிட்டது, அவர் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது’ என்றெல்லாம் பேட்டிகள் கொடுத்தவர் இந்த சிங்காரவேலன் என்பது நினைவிருக்கலாம்.

லிங்கா பிரச்சினை தீர்ந்துவிட்டது என அறிவித்து கலைப்புலி தாணுவுக்கு நன்றி கூறி நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து, போஸ்டர் ஒட்டிய இதே சிங்காரவேலன் இப்போது, மீண்டும் லிங்கா பிரச்சினை இழுக்க ஆரம்பித்துள்ளார்.

இவரது நடவடிக்கைகளுக்கு இப்போது திரையுலகில் முற்றிலும் ஆதரவில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், அதன்பிறகு தாணுவையும், ரஜினியையும் ‘உள்ளே’ வைப்பார்கள் என்றும் ஆடியோ வடிவில் தாணுவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் சிங்காரவேலன்.

அந்த ஆடியோவில் ஒரே அழுகாச்சிமயம்… தேர்ந்த நடிகர்களையே தோற்கடித்துவிடுவார் போலிருக்கிறது சிங்கு. அதில் அவர் கூறியிருப்பதன் சுருக்கம் இது (ரூ 35 லட்சத்தை வாங்கிக் கொண்டு, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷிடம் ஒரு காரையும் பிச்சையாகப் பெற்றுக் கொண்ட பிறகும், இந்த சிங்காரவேலன் பேராசை அடங்கவில்லை.):

தாணு அண்ணே, உங்களை நான் உயிருக்குயிரா நம்பினேன். நீங்க விநியோகஸ்தர்களுக்கு பணம் பெற்றுத் தருவீர்கள் என நம்பி நீங்கள் கொடுத்த ரூ 35 லட்சத்தை வாங்கிக் கொண்டேன். ஆனால் பிறகு மொத்த பணமும் தியேட்டர்காரர்களுக்கு போகும்படி செய்துவிட்டீர்கள்.

எங்களுக்கு நீங்கள் பணம் பெற்றுத் தருவது போல நடித்து மோசடி செய்துவிட்டீர்கள். உதவி செய்யற மாதிரி நடிச்சி ஏமாத்திட்டீங்க. நாங்க போராடறத கூட நீங்க உங்க அதிகாரத்தை வச்சி தடுக்கறீங்க.

மார்ச் மாசமே பணத்தைக் கொடுத்திருந்தா கூட நான் அந்த கங்காரு படத்தை நல்லபடியா ரிலீஸ் பண்ணியிருப்பேன். ஆனா அதை செய்யாம, கங்காரு தயாரிப்பாளரை வச்சி கேஸ் போடவச்சிட்டீங்க.

எங்க போராட்டத்துல யாரையும் கலந்துக்க விட மாட்டீங்கறீங்க.

உங்களையும் ரஜினி சாரையும் தண்டிக்க என்னால முடியும். என்கிட்ட அதிகாரமில்லாவிட்டாலும், நான் தற்கொலை பண்ணி உங்களுக்கு தண்டனை வாங்கித் தருவேன். நான் செத்துட்ட பிறகு உங்களையும் ரஜினியையும் உள்ளே வைத்துவிடுவார்கள்,” என்று கூறியுள்ளார்.

இதனை ஆடியோவாக பதிவு செய்து வாட்ஸப்பில் தாணுவுக்கு அனுப்பி வைத்துள்ளார் சிங்காரவேலன்.

தன்னுடன் செல்போனில் பேசும் அத்தனை பேரின் பேச்சுக்களையும் அவர்களுக்கே தெரியாமல் பதிவு செய்து வைத்துக் கொண்டு, நேரம் கிடைக்கும்போது, அதனை வாட்ஸப்பில் வெளியிடுவது அல்லது குறிப்பிட்ட நபருக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி வைப்பதை சிங்கார வேலன் வழக்கமாக வைத்துள்ளார். இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த தற்கொலை மிரட்டல் ஆடியோவை தாணுவுக்கே சிங்காரவேலன் அனுப்பியுள்ளார்.

இந்த ஆடியோ மற்றும் தற்கொலை முயற்சி மிரட்டல் இரண்டுமே சட்டவிரோதம். தாணு இந்த ஆடியோவை மாநகர போலீசில் புகாராக அளித்தாலே போதும், தற்கொலை முயற்சி மற்றும் பணம் கேட்டு மிரட்டல் போன்ற பிரிவுகளில் சிங்காரவேலனை உள்ளே தள்ள முடியும்.

-என்வழி
15 thoughts on “தற்கொலை செய்து கொள்வேன்..! – சிங்காரவேலனின் ‘அழுகாச்சி’ மிரட்டல்

 1. chenthil UK

  தயவு செஞ்சு சாவுடா சிங்கரவேலா …. ஒருத்தரால வாழ்ந்துட்டு அவரையே அழிக்க நினைக்கும் உன்னைய மாத்ரி B J ப கைக்கூலியை நாங்க எவ்ளவோ பாத்துட்டோம்

 2. arulnithyaj

  …கேவலமான ஆளு ..சீய் இதெக்கெல்லாம் காரணம் வேந்தர் மூவிஸ் தான் …அருவெறுப்ப இருக்கு அண்ணா

 3. மிஸ்டர் பாவலன்

  சூப்பர் ஸ்டார் மரியாதை நிமித்தமாக முதல்வர் அவர்களை
  சந்தித்து ‘மேடம், இந்த சிங்கார வேலன் தொல்லை தாங்க முடியலை”
  என ஒரு வார்த்தை சொன்னால் போதும்.. அம்மா ஒரே நாளில்
  சிங்காரவேலன் பயலை பிரச்சினை செய்யாத வகையில் பார்த்துக்
  கொள்வார்.. விரைவில் இது நடக்கலாம்..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 4. jegan N

  after all these problems.not even a single actor has raised voice against that fellow till date other than sarathkumar and thanu…no one has made a statement supporting thalaivar…..everyone wants rajini to fell down…..

  y thalaiver is not taking any action against this?y everyone is keeping their mouth shed on this issue?.

  is there any political reason behind this?

  y this silly person keep on talking bad about thalaiver again and again…..

  I m a rajini fan from my birth ….I have never seen any person who keeps on making trouble against rajini……old days no one have the courage to speak against rajini…..

  but now this is too much and still no action from thalaiver side and fans side

  rajini have lot of friends in cinema @ politics @ police department….etc.but still…..
  I don’t understand ways going on ……thalaiver told us that he ll make us proud….

  but now every rajini fan is teased by all because of this issue…..we are losers n helpless now….

 5. SENTHILKUMAR

  ரஜினி படம்னா கமர்ஷியல் மாஸ் என்டர்டெய்னர்.! ரஜினியோட பல படங்களை வாங்கி சம்பாதித்து நல்ல நிலைமையில் இருப்பவர்களை பார்த்து அவரது படம் நிறைய சம்பாரித்து கொடுக்கும் என நினைத்து தான் விலை அதிகமா கொடுத்து வாங்க பணப்பெட்டியோட வராங்க.! அப்படி அதிகமா கொட்டி கொடுக்குற அந்த பணம் எப்படி வந்தது பலரும் சொல்லமாட்டாங்க.? ஒரு சிலரை தவிர முறையா வரி கட்டி வந்து கணக்கு காட்டி சம்பாதிக்கிறவங்க பிஸினஸூம் இது இல்லை.! சில சமயம் பிச்சுக்கிட்டு ஓடும்.! பல சமயம் தியேட்டரை விட்டே ஓடிவிடும்.! பணம் போட்ட ஆள் காலி.?! படமெடுத்த பல பெரிய பணக்காரர்களை காவு வாங்கியதும் பல ஜமீந்தார்களை வறுமையின் பிடியில் கொண்டு போய் சினிமா தள்ளி விட்டதுண்டு.! பட விற்பனையில் மூன்று வகை.1 மினிமம் கியாரெண்டி விலை அதிகம் 2. ஓடுவதை வைத்து பேசி விலை பேசுவது பாதி விலை.! 3.படம் ஓடினா நீங்களா தருவது.?! இங்கே சிங்காரவேலன் குரூப் எந்த வகை.? அவர்கள் லிங்காவில் செய்த தகிடுதத்தங்கள் நாள்தோறும் அணி வகுக்கின்றன.?

 6. Gnanasekaran

  இதற்க்குப்பினால் ஒரு “புலி” இருக்கிறது. அதைபிடித்து கூண்டில் அடைத்தால் இந்த சிங்காரவேலர் ஆட்டம் நின்றுவிடும். அந்த புலிக்கு அரசியலில் குதிக்க ஆசை, சினிமாவிலும் பெரும் நட்சத்திரமாக வர ஆசை. அதனால் இல்லாத பொல்லாத வேலையெல்லாம் செய்யுது. அனால் இந்த புலியின் பாட்சா பலிக்காது. கூடிய விரைவில் ஊரில் இருந்து துரத்தப்பட்டு காட்டிற்கு செள்ளவேண்டியதிருக்கும்

 7. Prabhakaran

  இன்னுமா நீ சாகலை ? செத்து தொலைடா பாடு.

 8. நான் தமிழன்

  சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு சொக்கத்தங்கம் டா . அவர நெருங்க நினைத்தால் அழிந்து போய் விடுவதா . டேய் சிங்காரவேலன் பன்னாட பயலே ! இன்னுமா நீ சாகலை ? செத்து தொலைடா பாடு.

 9. மிஸ்டர் பாவலன்

  //இதற்க்குப்பினால் ஒரு “புலி” இருக்கிறது. //

  பின்னால் என்று சொல்கிறீர்களே நன்பரே!

  அது தான் குருவியுடன் சிங்காரவேலன் முன்னால் நின்று
  எடுத்து கொண்ட போட்டோவை நண்பர் வினோ இதே வலையில்
  வெளியிட்டுள்ளாரே!

  “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்”
  என்பார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

  மிகப் பெரிய ரசிகர் சாம்ராஜ்யம் வைத்துள்ள சூப்பர் ஸ்டார் – சிங்காரன்
  பயல் விவகாரத்தில் – மிகவும் பொறுமை காத்து வருகிறார். ரசிகர்கள்
  பொறுமை காப்பதும் ஆச்சரியமாக உள்ளது. எம்.ஜி.ஆரிடம் இது போல
  யாரும் விநியோகஸ்தர்கள் மோதியது இல்லது. இது வரலாற்று உண்மை.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 10. Deen_uk

  சிங்கரவேலனை அப்படியே அவர் ஆசைப்படி விட்டுடுங்க..அவர் தற்கொலை செய்து கொள்ள வாழ்த்துக்கள்..சீக்கிரம் செய்யுங்க சிங்காரம்..ஆசையா இருக்கு,அந்த சந்தோஷ செய்தி கேட்க ….

 11. rajagopalan

  I support what Mr jegan N says…

  I don’t know y no actors to give a statement in support but for their movies Thalaivar should provide voice & support…

  Enna Kodumai sir edhu?????????

 12. senthil

  சாவுடா நாயே.நீ செத்த பிறகு உன் பொண்டாட்டி சொல்வது என் அப்பாவிடம்இருந்து பணம் வாங்கி வர சொல்லி கொடுமை படுத்தினாய் கடவுள் பொறுத்து கொண்டார் ஆனால் அள்ளிதரும் கடவுளிடமே மேலும் பணம் கேட்டால் உன்னை மன்னிக்கமாட்டார்.இவன் மெண்டல் ஆவது உறுதி.

 13. arul

  என்னது தலைவரை உள்ளே வைப்பர்கலா எங்கே ஜார்ஜ் கோட்டையின் உள்ளவா .போடா காமெடி பீஸ் நீ எப்போ சாவபோறியோ சொல்லு நாங்க கும்மி அடித்து சிரிக்கணும் .ஏனென்றால் நீ ஒன்பதில் பிறந்தவநாமே.

 14. Ayyanarsamy

  டே சிங்காரவேலா… நீ சாகு நீ இல்லைன்னு யாரு அழுதா…

  …மராட்டியம் தந்த மாவீரன்….

  கர்நாடகம் வளர்த்து தந்த காவேரி…

  தமிழகமே தாங்கிபிடிக்கும் இறைவன்…

  அனைத்து மதத்தினரும் தரிசிக்கும் லிங்கா….

  மனித நேயத்தின் மறு உருவம்…

  உலக வரலாற்றிலே ஒரு நடிகன் தன்னால் யாரொருவரும் நஷ்டமடைய கூடாது என்று நினைக்கின்ற ஒரே நடிகன் ஒரே தலைவன் எங்கள் அன்பு உலக சூப்பர் ஸ்டார்…

  அவர்களின் மனிதாவிமானத்தை சோதிக்கின்ற செயலில் யார் இறங்கினாலும் கடவுள் சும்மா பார்த்து கொண்டிருக்க மாட்டார்….

  இது தான் கதி….

  நாயே… நீ சொன்னது நாளை நடக்கும இந்த பூலோக்கத்தில் இருக்க தகுதி இல்லாதவன் என்பதை மீண்டும் உன் மிரட்டல் மூலம் நிரூபித்துவிட்டாய்…

  இனி நீ சிங்காரவேலன் அல்ல செத்தவேலன் அல்லது சாவுவேலன்.

  நீ செத்த பிறகு உன் உடல் வேணும்னா இந்த மண்ணுக்குள் போகும்… ஆனால் மறந்து கூட எங்கள் தலைவர் உள்ளே(ஜெயிலுக்கு) போவார் என்று நினைக்காதே…

  உள்ளே போவார் ஜெயிலுக்குள் அல்ல இன்னும் கோடான கோடி மக்களின் இதயத்துக்குள்….

 15. srikanth1974

  திரு.அய்யனார்சாமி அவர்களுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *