BREAKING NEWS
Search

ஒரு எளிமையான சூப்பர் ஸ்டார்! – ரஜினி குறித்து பல்மருத்துவ நிபுணரின் கட்டுரை

ஒரு எளிமையான சூப்பர் ஸ்டார்!


ன்று ஆச்சார்யா பல் மருத்துவமனை ஆச்சர்யத்தால் அதிர்ந்து கொண்டிருந்தது.. “ரஜினி சார் வருகிறார்”.

ஆம்… அவர் வந்தார். அன்று நல்ல வெயிலடிக்கும் புதன் கிழமை. திரு. ரஜினிகாந்த் மருத்துவமனைக்குள் நுழைந்தார். சாதாரண வெள்ளை நிற ஜிப்பா அணிந்திருந்தவர் உடனே வழக்கமாக வரும் நோயாளிகள் போல் தனது பிரச்னைகள் குறித்து பேசத் துவங்கிவிட்டார்.

நான் மற்ற நோயாளிகளைப் போல் அல்லாமல், “நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” எனக்கு இல்லாத வித்தியாசமான தொனியில் கேட்க, சட்டென யோசிக்காமல், “உங்களுக்கு எது சிறந்தது என தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்,” என்றார். மற்ற பிரபலங்கள் போல் இல்லாமல் மருத்துவர் மேல் அவருக்கிருக்கும் நம்பிக்கையை அதில் உணர்த்தினார்.

இந்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறான கூட்டம் அவர்களது விருப்ப நாயகனைக் காண வெளியில் அலைமோதியது. நோயாளிகள் பார்வையாளர்கள் மட்டுமின்றி, எங்கள் மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் கூட அவரை ஒரு முறையாவது பார்த்துவிடக் காத்திருந்தார்கள்.

எப்போதும் பிரபலங்கள் தங்களைப் பொதுமக்கள் மத்தியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வசதியாகவும், தனியாகவும் சந்திக்கவே விரும்புவார்கள்.

மேலும் கூட்டத்தைத் தவிர்க்க பல குறிப்புகளும் எங்களுக்குக் கொடுப்பார்கள். நாங்களும் அதைப் பின்பற்றுவோம். ஆனால் ரஜினிகாந்த் அப்படியில்லை. அவர் சென்று திரும்பும் போது வாசல் வரை மக்கள் கூட்டம். மேலும் வழி நெடுக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டி கேட்டுக்கொண்ட மக்கள் என அனவைருக்கும் சற்றும் முகம் சுளிக்காமல் நின்று அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

‘எங்கு சென்றாலும் உங்களைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதை எப்படி நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள்?’ எனக் கேட்டபோது, “இதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, எனக்கு இது சந்தோஷமே… ரொம்ப வசதியாகவே உணர்கிறேன்,” என்றார்.

“அப்படியே ஒரு அமைதி வேண்டுமானால் இமயமலை போன்ற இடங்களுக்குச் சென்று விடுவேன்,” எனக் கூறிவிட்டு என்னையும் சேர்த்து எல்லாருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பைப் போலவே அவர் வைத்திருக்கும் அன்பும் உண்மையானது.

சூப்பர் ஸ்டார் என்ற மிகப்பெரிய பட்டத்தை மிக எளிமையாக வைத்திருக்கிறார். அவர் சூப்பர் ஸ்டாராகப் பிறப்பதில்லை, உருவாக்கப்பட்டுள்ளார். நல்ல மனிதருக்கு ஒரு எடுத்துக்காட்டு வேண்டுமாயின் அது சூப்பர் ஸ்டார் ரஜினிதான். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு தன்னைச் சரியாக வடிவமைத்துக் கொண்ட மனிதர். எளிமையான பேச்சு, நடவடிக்கை ஒருபக்கம் எனில், கெட்டதை வெல்லும் நல்ல சக்தியாக அவர் ஏற்கும் நல்ல நல்ல பாத்திரங்கள் அவரது இன்னொரு பலம்.

எப்படி உங்கள் புகழும் உங்கள் மேலுள்ள ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது எனக் கேட்டபோது, “எல்லாம் கடவுளின் கருணை”, என்றார்.

-ஆச்சார்யா பல்மருத்துவமனையின் பெண் மருத்துவர், ரஜினி தங்கள் மருத்துவமனைக்கு வந்து சென்றதைப் பற்றி எழுதியுள்ள வலைப்பதிவு இது.

இதனை சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்மதத்துடன் வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




3 thoughts on “ஒரு எளிமையான சூப்பர் ஸ்டார்! – ரஜினி குறித்து பல்மருத்துவ நிபுணரின் கட்டுரை

  1. srikanth1974

    ரஜினி என்ற சொல்லுக்கு எளிமை என்றும் பொருள்.

  2. Sekar

    சூப்பர் ஸ்டார் ரஜினியை பிடிக்காதவர்கள் இந்த மண்ணில் உண்டா ?
    அப்படி பிடிக்கவில்லை என்று சொன்னால் அவன் இன்னும் மனிதனாக ஆகவில்லை என்று பொருள்.
    வாழ்க கலியுக கடவுள் ரஜினி அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *