BREAKING NEWS
Search

கோச்சடையான் வெளியாகும் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி டாலர்!

கோச்சடையான் வெளியாகும் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி டாலர்!

1932484_619266064821704_1369206443_n

திருப்பூர்: கோச்சடையான் வெளியாகும் நாளில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கு ரஜினி படம் பொறித்த வெள்ளி டாலர் வழங்கப்படும் என திருப்பூர் ரஜினி ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமையில் ஆர்.வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் காந்தி வேடம், ரஜினி வேடம் அணிந்து மேடையில் தொண்டர்கள் தோன்றினர். 200க்கும் மேற்பட்டவர்கள் முகத்தில் கோச்சடையான் ரஜினியின் மாஸ்க் அணிந்திருந்தனர்.

கூட்டத்தில் கோச்சடையான் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் பிரமாண்டமான ரதம் தயாரித்து அதை தமிழகம் முழுவதும் பவனி வரச் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திரைப்படம் வெளிவரும் அன்று திருப்பூர் அரசு மருத்துவ மனையில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கு ரஜினிகாந்த் படம் பொறித்த வெள்ளி டாலர்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.

கோச்சடையான் திருட்டு சி.டி வெளிவராமல் தடுக்க ஆண், பெண் கொண்ட சிறப்பு குழுவை திருப்பூர் மாவட்டம் முழுவதும் அமைப்பது என்றும் முடிவு செய்துள்ளனர்.

-என்வழி




5 thoughts on “கோச்சடையான் வெளியாகும் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி டாலர்!

  1. udayan

    என் தலைவர் என்ன வெள்ளி தான் கொடுப்பார தங்கமே கொடுப்பார். அவருக்கு சுயநலம் இல்லாத மனித நேயம் இருக்கு. ஆனால் அவர் உடைய ரசிகனுக்கு இல்லையே.. தலைவர் மேல குறை சொல்லி என்ன பயன் நண்பா.. தலைவர் சொன்ன சொல்லை மதித்தவர் எத்தனை ரசிகன் இருகான்.. மிதித்தவன் தான் கலியுகத்தில் சொகுசா வாழ்றான்.. எல்லாம் பாபாஜி திட்சி பெற்ற நம் தலைவருக்க தெரியாதுன்னு நினைக்க வேண்டாம்..

  2. Basha

    Superb Thalaivar Rocks….

    KOCHADAIYAAN GAMES AVAILABLE IN ANDROID போன் / SMART போன் , GREAT To See THALAIVAR Kochadaiyaan GAMES … I feel Proud to BE தலைவர் Fan, Other Fans doesn’t have this proud ness ROCKS THE WORLD…!!!!!

  3. makkal neyam.. noble.t

    உதயன் சொல்வது உண்மை உண்மை உண்மை …. வாழட்டும் மனித நேயம் ( இறைவா).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *