BREAKING NEWS
Search

சென்னையில் ஆளுநர் மாளிகை, இலங்கை தூதரகம் முற்றுகை- ஏராளமான மாணவர்கள் கைது

சென்னையில் ஆளுநர் மாளிகை, இலங்கை தூதரகம் முற்றுகை- மாணவர்கள் கைது

KAVV

சென்னை: தனி தமிழீழம் கோரி, சென்னை நகரில் மாணவர்கள் நடத்திய திட்டமிட்ட போராட்டத்தால் தமிழக அரசே ஸ்தம்பித்து நிற்கிறது.

கிண்டி ஆளுநர் மாளிகையான ராஜ்பவன், நுங்கம்பாக்கம் இலங்கை தூதரகம், மீனம்பாக்கம் விமான நிலையம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் 3 அணிகளாக பிரிந்து முற்றுகைப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

students-protest-rajbhavan

சென்னையில் உள்ள 25 கலை, பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஒன்று திரண்டு முழக்கங்களை எழுப்பியவாறு ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்றனர்.

அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். இதனால் தென் சென்னை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை மாணவர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

KAV1

இந்த இரண்டு போராட்டங்களைத் தொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தையும் 500 மாணவர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை கல்லூரி வளாகங்களுக்குள் போராட்டம் நடத்திய மாணவர்கள் தற்போது வீதிக்கு வந்து அணி அணியாக கைதாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாணவர் போராட்டங்களால் உந்தப்பட்டு சிறு சிறு கிராமங்களில் உள்ள மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தனித் தமிழீழம், போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தண்டனை ஆகியவற்றை வலியுறுத்தி சாலையோரங்களில் உண்ணாவிரதம், சாலை மறியல் என போராடி வருகின்றனர்.

KAVVV

ஒரு பெரும் மக்கள் போராட்டமாக இது உருவெடுத்துள்ளது தமிழக அரசையும் போலீசையும் திகைக்க வைத்துள்ளது. தமிழர் உணர்வை மதிக்காவிட்டால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே நெருக்கடி ஏற்படும் சூழலை மாணவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

புதுவையிலும் கல்லூரிகள் விடுமுறை..

தமிழகத்துக்கு நிகராக, புதுவை மாநிலத்திலும் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் தமிழீழம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அனைத்துக் கல்லூரிகளுக்கும் கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

-என்வழி செய்திகள்




One thought on “சென்னையில் ஆளுநர் மாளிகை, இலங்கை தூதரகம் முற்றுகை- ஏராளமான மாணவர்கள் கைது

  1. Mahe

    ஒரு குறை மட்டுமே உள்ளது. ஒரு குரல் ஒரே ஒரு முறை ஒலித்தால் போதும். இன்னும் பற்றி எறியும் இந்த நெருப்பு. தலைவா உன் தமிழ் இனத்திற்காக செய்ய மாட்டாயா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *