BREAKING NEWS
Search

சிவாஜி 3 டி சிறப்புக் காட்சி: டோக்கியோ சென்றார் ஸ்ரேயா!

சிவாஜி 3 டி சிறப்புக் காட்சி: ஜப்பான் தலைநகர் டோக்யோவில் ஸ்ரேயா!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட் படமான சிவாஜியின் 3 டி பதிப்பின் பிரிமியர் காட்சிக்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளார் படத்தின் நாயகியான ஸ்ரேயா.

தோல்விப் பட நாயகி என்ற முத்திரையோடு, தெலுங்குடன் ஒதுங்கிவிட்ட ஸ்ரேயாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையைத் தந்த படம் சிவாஜி. இந்தப் படம் வட மாநிலங்களில் பெற்ற பெரும் வெற்றி, ஸ்ரேயாவை இந்தியிலும் ஒரு ரவுண்ட் வர வைத்தது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் நடித்து வருகிறார்.

சிவாஜி வெளியாகி 5 ஆண்டுகள் கழித்து, இப்போது 3 டி வடிவில் வெளிவருகிறது. மிகப் பெரிய அளவில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஹாலிவுட் படங்களுக்கு சர்வதேச அளவில் பிரிமியர் காட்சிகள் வைப்போது போல, சிவாஜிக்கும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிறப்புக்காட்சி நடத்துகின்றனர்.


இதில் பங்கேற்க படத்தின் நாயகி ஸ்ரேயாவை அழைத்துச் சென்றுள்ளது ஏவிஎம் நிறுவனம்.  இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், “சிவாஜி 3 டி பிரிமியரில் பங்கேற்க டோக்யோ சென்றுகொண்டிருக்கிறேன். இந்தப் படத்தை டோக்கியோவில் பார்க்க பெரும் ஆர்வமாக உள்ளேன். சூப்பர் ஸ்டார் ரஜினி மீது ஜப்பான் மக்கள் பெரும் அன்பு வைத்துள்ளனர். அவர் படங்களை திரும்பத் திரும்ப பார்க்க விரும்புகின்றனர். முதல் முறையாக வெளியாகும் அவரது 3 டி படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது,” என்றார்.

-என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *