BREAKING NEWS
Search

‘தலைவர் பேரை கெடுக்காம இருக்கணுமே…’- தில்லு முல்லு படத்தில் ரஜினி வேடத்தில் நடிக்கும் சிவா!

‘தலைவர் பேரை கெடுக்காம இருக்கணுமே…’- தில்லு முல்லு படத்தில் ரஜினி வேடத்தில் நடிக்கும் சிவா!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் க்ளாஸிக் காமெடிப் படம் தில்லுமுல்லுவின் ரீமேக்கில், ரஜினி வேடத்தில் நடிக்கிறார் சிவா.

கே பாலச்சந்தர் இயக்க, ரஜினி, மாதவி ஜோடியாக நடித்து 1981-ல் ரிலீசான படம் தில்லு முல்லு. தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன் என அருமையான கலைஞர்கள் கைகோர்த்திருந்தனர்.

க்ளைமாக்ஸில் கமல் ஹாஸன் கவுரவ வேடத்தில் வந்து கலக்கினார். ரஜினி மிகப் பெரிய ஆக்ஷன் ஹீரோவாக இருந்த காலகட்டத்தில், அவரால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி ரோலிலும் நடிக்க முடியும் எனக் காட்டிய படம் இது.

மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் இசையில், கவியரசர் கண்ணதாசன் வரிகளில் இப்படத்தில் இடம் பெற்ற ‘ராகங்கள் பதினாறு உருவான வரலாறு, தில்லு முல்லு தில்லுமுல்லு, தங்கங்களே தம்பிகளே…’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

தங்கங்களே தம்பிகளே பாடலில் எம்ஜிஆர், சிவாஜி, எம்ஆர் ராதா, கமல் போல அசத்தலாக இமிடேட் செய்திருப்பார் ரஜினி. கடைசியில் பில்லா ரஜினியாகவும் தோன்றுவார்.

இந்த படம் தற்போது ரீமேக் ஆகிறது. ரஜினி வேடத்தில் நடிக்க சிவாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழ் படம், சென்னை 28, சரோஜா, கலகலப்பு என காமெடிப் படங்களின் மூலம் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.

சிவாவிடம் இது குறித்து கேட்ட போது, “தில்லு முல்லு ரீமேக்கில் நான் நடிக்கப் போவது உண்மைதான். சூப்பர் ஸ்டார் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வந்த பிரமாதமான படம் இது. இன்னும்கூட அந்தப் படம் ஃப்ரெஷ்ஷாக உள்ளது. உண்மையில் ஒரிஜினல் ஸ்க்ரிப்டில் எந்த மாற்றமும் செய்யவேண்டிய அவசியமே இல்லை. இன்னிக்கு காலகட்டத்துக்குக் கூட பொருத்தமா இருக்கு.

ரஜினி நடிச்ச கதை.. அதில் எப்படி நான் நடிக்கப் போகிறேன் என்று நினைத்தாலே கொஞ்சம் திரில்லாகத்தான் உள்ளது. தலைவர் பேரை கெடுக்காம இருக்கணுமே!,” என்றார்.

அந்த ‘பயம்’ இருக்கணுமில்ல!

-என்வழி செய்திகள்
16 thoughts on “‘தலைவர் பேரை கெடுக்காம இருக்கணுமே…’- தில்லு முல்லு படத்தில் ரஜினி வேடத்தில் நடிக்கும் சிவா!

 1. palPalani

  எப்ப போட்டாலும் பார்க்குற படங்களில் தில்லு முள்ளு-வும் ஒன்று. அதில் வரும் ரஜினி மற்றும் தேங்காய் சீனிவாசன் கதா பத்திரங்களை யாரும் செய்ய முடியாது!

 2. Rajasekaran R

  நிச்சயம் இதை என்னால் ஏற்று கொள்ள முடியல, தையவு செய்து விட்டுடுங்க சிவா இந்த என்னத்தை… ரஜினி ரசிகர்களால் இதை ஏற்க முடியாது…

 3. raja

  இப்பவே சொல்லிவிடலாம் கண்டிப்பாக கேவலமாகத்தான் இருக்கும் …

 4. தேவராஜன்

  அய்யோ.. மீண்டும் ஆரம்பிச்சிட்டாங்கலா. கெடுக்காம விட மாட்டாங்க. பாலச்சந்தர் குடும்பத்துக்கு ஏன் இந்த விபரீத புத்தி?

 5. கணேசன் நா

  palPalani says:
  தொடங்கி

  தேவராஜன் says:
  வரை

  உள்ள கமெண்ட்னை ரிபீட்டு.

 6. கணேசன் நா

  இது ஒரு வேண்டாத வேலை.

  அதுவும் அலட்டல் சிவாவை இந்திரன் – சந்திரனாக யோசிக்கவே பயமா இருக்கு.

  தமிழ் திரையுலகில் இப்படி கதை பஞ்சமா ? கொல்றங்களே……………….. 🙁

 7. மிஸ்டர் பாவலன்

  `Power Star’ டாக்டர் ஸ்ரீனிவாசனை புக் செய்திருக்கலாம்னு தோணுது..
  ஹி..ஹி..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 8. sfan

  ஐயோ செம காமெடி தான் என்னது தலைவர் பேரை கெடுக்காம இருக்கணுமா அவ்வளோ சூப்பர் ஆக்ட் கொடுத்துருவீன்களா ஏய் ஏண்டா இந்த கொலை வெறி என்னமோ சின்ன பசங்க டீச்சர் ஸ்டுடென்ட், திருடன் போலீஸ் vilayaadara மாதிரி இருக்க போவுது அதுக்கு என்ன நம்பிக்கையில இப்புடி எல்லாம் ஸ்டேட்மென்ட் விடமுடியுது ??

 9. chenthil UK

  எந்த படத்த வேணும்னாலும் ரீமேக் பண்ணுங்க… ஆனா தயவு செஞ்சு படத்துக்கு புது பேரு மட்டும் வையுங்க … நாளைய தலைமுறை ஒரு படத்த தேடினா சரியாய் படம் பார்க்க முடியும்.. இல்லேன்னா… பில்லா , முரட்டு காளை னா… புது படம்னு நினச்சி.. கேவலமா பேசுவாங்க… atleast new name Pleaseeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

 10. மிஸ்டர் பாவலன்

  தேங்காய்-ரஜினி இன்டர்வ்யூ மறக்க முடியாத ஒரு காட்சி.

  அதை டிஜிட்டல் முறையில் ரீமேக் செய்து தமிழ்த் தொண்டாற்ற
  விரும்பும் நண்பர்களுக்காக ஒரு ஐடியா..

  சூப்பர் ஸ்டார் ரோலை ‘யூத் ஸ்டாரான’ பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு
  கொடுத்து தேங்காய் ரோலை அஷ்டாவதானி டி.ராஜேந்தருக்குக்
  கொடுத்தால் அந்த இன்டர்வியூ கட்சிக்காகவே படம் நூறு நாள்
  ஓடும். பவர் ஸ்டார் ஹீரோ என்றால் ஜோடியாக த்ரிஷா வேண்டாம்,
  இன்னும் பெரிய அளவில் மடானாவை கால் சீட் கேட்டுப் பார்க்கலாம் 🙂
  பவர் ஸ்டாரைப் போல் அவரும் ஒரு யூத் நடிகை/சிங்கர் தான்.
  மடானாவிற்கும் facebook-ல் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் 🙂

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 11. Manoharan

  தில்லு முல்லுவில் ஆரம்பம் முதல் கடைசிவரை ரஜினியின் எனர்ஜி லெவல் அபாரமாக இருக்கும். எப்போது பரபரப்பாக சுறுசுறுப்பாக இருப்பார். அந்த ஸ்டைலுக்கு இன்னொருவரை கற்பனை கூட செய்யமுடியவில்லை. முரட்டுக்காளை போல இதுவும் ப்ளாப்தான்.

 12. enkaruthu

  ஏனெப்ப உங்களுக்கு கொலைவெறி.இந்த இன்டர்நெட் உலகிலும் ஒரு பட கதையை சுடுவதற்கா பஞ்சம்.ஐயோ சாமி எப்பொழுது பாரு ரஜினி பட தலைப்பை வைக்கவே அலைகிறார்கள்.

  //தலைவர் பேரை கெடுக்காம இருக்கணுமே!,” என்றார்.//

  இப்படித்தானே விஜய் முதற்கொண்டு தன் ஆரம்ப கலை வாழ்கையில் சொல்கிறீர்கள்.ஆனால் ஒரு படம் ஹிட்டனவுடன் நான்தான் அடுத்த superstar என்று பீத்தி கொள்கிறீர்கள். போங்கப்பா நல்ல மனது படைத்த தலைவரும் அவரின் ரசிகர்களும் என்றும் வெகுளிதான் .

 13. Murali

  இந்த பல பரிட்சை தேவை இல்லைனு நினைக்கின்றேன் சிவா அவர்களே ..விட்டு விடுங்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *