BREAKING NEWS
Search

நிதி நெருக்கடி: ஷங்கரின் ஐ படத்துக்கு நீதிமன்றம் தடை!

நிதி நெருக்கடி: ஷங்கரின் ஐ படத்துக்கு நீதிமன்றம் தடை!

I-manoharudu

ங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐ படத்தின் ரிலீஸை திடீரென தடை செய்துள்ளது.

கடன் பிரச்சினை தொடர்பான வழத்தில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

2012 ஜூலை 15ல் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்ட பிரம்மாண்ட படம் ‘ஐ’. தீபாவளி,  பொங்கல் என ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு தள்ளிப் போனது. இந்த முறை பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டு, தியேட்டர்கள் பெயர்களோடு விளம்பரங்களும் வந்தன.

இந்நிலையில், பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனத்திடம் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடன் வாங்கியுள்ளதாகவும் தங்களுக்கு கடனாக செலுத்த வேண்டிய பணத்தை இன்னும் தரவில்லை. அதனால் அவர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ‘ஐ’ படத்தை தடை செய்ய வேண்டும்” என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஐ’ படம் வெளியிடுவதற்கு 3 வாரங்கள் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

வாங்கிய கடனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் விரைவில் திருப்பித்தர வேண்டும். மேலும் ஜனவரி 30ம் தேதிக்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பதில் தர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையே, ஐ படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தாலும், கடன்காரர்களிடம் சுமூகமாகப் பேசி வருவதாகவும், ஜனவரி 14-ம் தேதிக்குள் பிரச்சினையை முடித்துவிடுவோம் என்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு இன்னும் தணிக்கைத் துறையினர் யு சான்று தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பொங்கல் ரிலீஸில் மேலும் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஆம்பள’, ‘டார்லிங்’ இரு படங்களும் இப்போது உறுதியாகியுள்ளன. ஏற்கெவே பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட என்னை அறிந்தால் படம் ஜனவரி 29-ம் தேதிக்கு தள்ளிப் போய்விட்டது.

எனவே ‘காக்கி சட்டை’, மற்றும் ‘கொம்பன்’ படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளனர். இந்நிலையில் ‘எனக்குள் ஒருவன்’ படமும் விரைவில் என விளம்பரபடுத்தப்பட்டு வருகிறது.

என்வழி செய்தி




One thought on “நிதி நெருக்கடி: ஷங்கரின் ஐ படத்துக்கு நீதிமன்றம் தடை!

  1. மிஸ்டர் பாவலன்

    லிங்கா படம் ஐம்பது நாள் பல திரை அரங்குகளில் ஓட இது வழி வகுக்கும்..

    பொங்கல் வருவதற்குள் லிங்கா படத்தை திரை அரங்குகளில் இருந்து
    தூக்குவதற்கு சிங்கார வேலன் போன்றோர் உடன் ஒரு பறவை செய்து வரும்
    சதி இதனால் முறியடிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது..

    மறைமுகமாக சூப்பர் ஸ்டாரை சிங்கார வேலன் மிரட்டுவதாக
    எனது நண்பர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்..

    -== மிஸ்டர் பாவலன் ==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *