BREAKING NEWS
Search

ஷங்கரின் புதிய மெகா பட்ஜெட் படம் ‘ஐ’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஷங்கரின் புதிய மெகா பட்ஜெட் படம் ‘ஐ’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

னது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக ‘ஐ’ எனப் பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

இந்தப் படத்தில் ஷங்கருடன் இணைபவர் விக்ரம். நாட்டின் தலையாய பிரச்சினையான தேர்தல் முறைகேடுகள் பின்னணியில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது அரசியல் படம் அல்ல… ரொமான்ட்டிக் த்ரில்லர் என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.  பிசி ஸ்ரீராமுடன் முதல்முறையாக ஷங்கர் இணையும் படம் இது.

படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக அவர் மணிரத்னம் படத்தை துறந்ததோடு, மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம்.

இந்தப் படத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகனும் பிரபல தயாரிப்பாளருமான ராம்குமார் முக்கிய வேடத்தில் நடிப்பது. ராம்குமார் இதற்கு முன் அறுவடை நாள் படத்தில் கிட்டத்தட்ட ஹீரோவுக்கு இணையாக நடித்தார். அதன் பிறகு நடிக்கவில்லை.

பரடத்தின் இன்னொரு பிரதான வேடத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடிக்கிறார்.

காமெடிக்கு சந்தானம் கைகோர்க்கிறார்.

ஐ என்பதற்கு – ஐந்து என்பதைத் தவிர, அழகு, அரசன், ஆசான், வியப்பு, மேன்மை, எழுத்து, எசமானன், நுண்மை, அம்பு, ஐயம் என பல பொருள்கள் உள்ளன. இவற்றின் கலவையாக இந்தப் படம் உருவாகிறது, என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில் மென் இன் பிளாக் சீரிஸ் படங்களில் பணிபுரிந்த மேரி வாட், கதாபாத்திரங்களுக்கு பிரத்யேகமான உடைகளை வடிவமைக்கிறார்.

ஹாரிபாட்டர் சீரிஸ் படங்களில் பணியாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரைசிங் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் விஷுவல் எஃபக்ட்ஸ் பகுதிகளை உருவாக்குகிறது.

ஹாலிவுட் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்களும் இந்தப் படத்தில் பணிபுரிகிறார்கள்.

சண்டைக் காட்சிகளை அனல் அரசுவும், சீனாவைச் சேர்ந்த பீட்டர் மிங்கும் இணைந்து அமைக்கிறார்கள்.

படத்தின் படத்தொகுப்புப் பணியை ஆண்டனி ஏற்றுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கபிலன் எழுதி விஜய்பிரகாஷ் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

இந்த படத்துக்கு வசனம் எழுதுவதன் மூலம் இரட்டை எழுத்தாளர்கள் சுபா முதல் முறையாக ஷங்கருடன் இணைகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

-என்வழி

 
4 thoughts on “ஷங்கரின் புதிய மெகா பட்ஜெட் படம் ‘ஐ’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 1. Rajagopalan

  Then what about Rajini & Shankar Joining again? Previously u published both r joining again?
  __________
  மீடியாவில் வந்த உறுதிப்படுத்தப்படாத செய்தி அது. ஷங்கர் அதை மறுக்கவில்லை என்பதால் நாம் வெளியிட்டோம். இப்போது இந்த செய்தி மூலம், அடுத்த இரு ஆண்டுகளுக்கு ரஜினி- ஷங்கர் கூட்டணிக்கான வாய்ப்பில்லை என்று உறுதியாகிவிட்டது.
  -வினோ

 2. பாவலன்

  //இப்போது இந்த செய்தி மூலம், அடுத்த இரு ஆண்டுகளுக்கு ரஜினி- ஷங்கர் கூட்டணிக்கான வாய்ப்பில்லை என்று உறுதியாகிவிட்டது.-வினோ//

  ரஜினி-கே.வி. ஆனந்த் கூட்டணி படம் பற்றி ஏதாவது புதிய செய்தி?
  இதுவும் இன்னும் confirm ஆகலை?

  -பாவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *