BREAKING NEWS
Search

ரஜினியிடம் கற்றதும் பெற்றதும்..! – இயக்குநர் ஷங்கர்

ரஜினியிடம் கற்றதும் பெற்றதும்..! – இயக்குநர் ஷங்கர்

ன் கண்ணுக்கு முன்னால தெரிஞ்சவங்க இருந்தா… பெரியவங்களோ, சின்னவங்களோ நானே முதல்ல போய் ‘ஹலோ’ சொல்லிடுவேன். இந்த விஷயத்தை நான் சூப்பர் ஸ்டார் ரஜினியிடமிருந்து கற்றுக் கொண்டேன், என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

ஆனந்த விகடன் இதழில் வாசகர் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் ஷங்கர்.

அவரிடம், ‘எந்திரன்’ படப்பிடிப்பு சமயம் ரஜினி யோடுதான் பெரும்பாலான நேரத்தைக் கழித்திருப்பீர்கள்… அப்போது நீங்கள் சொல்லி ரஜினி மாற்றிக்கொண்ட ஒரு விஷயமோ அல்லது ரஜினி சொல்லி நீங்கள் மாற்றிக்கொண்ட ஒரு விஷயமோ இருக்குமே… அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தனர்.

அதற்கு ஷங்கர் அளித்த பதில்:

” ‘எந்திரன்’ சமயத்துலனு இல்லை… அவரோட படம் பண்றதுக்கு முன்னாடியே அவர்கிட்ட இருந்து ஒரு நல்ல பழக்கத்தை நான் கத்துக்கிட்டேன்.

ஒரு விழாவுக்கு ரஜினி சார் வந்திருந்தார். எல்லாரும் அவரைப் போய்ப் பார்த்து ‘ஹலோ’ சொல்லிட்டு இருந்தாங்க. ‘நாம போய் ஹலோ சொல்லணுமா?’னு சங்கோஜத்தோட, தயக்கத்தோட, கொஞ்சம் தள்ளியே நின்னுக்கிட்டு இருந் தேன். ஆனா என்னைக் கவனிச்சவர், கிட்ட வந்து, ‘ஹலோ ஷங்கர்… எப்படி இருக்கீங்க?’னு கேட்டாரு. எனக்கு ‘ச்சே’னு ஆகிடுச்சு.

விழாக்களில் பலர் இப்படித்தான் நடந்துப்பாங்க. பக்கத்துலயே இருந்தாலும், நேருக்கு நேர் நின்னாலும், யார் முதல்ல ஹலோ சொல்றதுன்னு, யாரு நகர்ந்து கிட்ட போறதுன்னு, நீ பெரியவனா நான் பெரியவனான்னு உள்ளுக்குள்ள ஒரு பெரிய போராட்டமே நடக்கும். ஆனா, அதை வெளிக்காட்டிக்காம, கண்டுக்காம பக்கத்துல இருக்கிறவங்ககிட்ட சிரிச்சுப் பேசிட்டு இருக்கிற மாதிரி பாசாங்கு பண்ணுவாங்க. அதை உடைச்சவர் ரஜினி. அன்னைல இருந்து… என் கண்ணுக்கு முன்னால தெரிஞ்சவங்க இருந்தா… பெரியவங்களோ, சின்னவங்களோ நானே முதல்ல போய் ‘ஹலோ’ சொல்லிடுவேன்!

ஒரு தடவை ரஜினி சார்கிட்ட, நான் சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திட்டேன்னு சொன்னேன். அவரால நம்ப முடியலை. ‘எவ்ளோ நாளாச்சு?’னு கேட்டார். ‘அஞ்சு வருஷமாச்சு’ன்னேன். ‘எப்டி… எப்டி?’ன்னார். நான், ‘நிறுத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, முடியல. ஒரு தடவை எனக்கு மலேரியா வந்துச்சு. தினமும் ஊசி போட வேண்டியிருந்ததால நான் சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். 15 நாள் சிகரெட் பிடிக்கலை. 16-வது நாள் ‘இத்தனை நாள் விட்டதை மறுபடி ஆரம்பிக்கணுமா?’னு யோசிச்சு விட்டுட்டேன். அப்புறம் ஒரு மாசம்… ஆறு மாசம்… ஒரு வருஷம்னு, அஞ்சு வருஷம் பிடிக்கலே’னு சொன்னேன். ஏன்னா, ‘சும்மா ஆறு மாசம், ஒரு வருஷம் விட்டா சிகரெட் பழக்கத்தை விட்டதா அர்த்தம் இல்லை. அஞ்சு வருஷம் நிறுத்தினாதான் உண்டு’னு சுஜாதா சார் என்கிட்ட சொல்லி இருக்கார். அப்புறம் ரஜினி சாரும் படிப்படியா குறைச்சு, ஒரு நாளைக்கு மூணு… அப் புறம் ஒண்ணுங்கிற அளவுக்கு வந்துட்டார்!

‘எந்திரன்’ படத்துக்காக சிட்டி மேக்-அப் இங்கே செட் ஆகாததால, அமெரிக்கால ஸ்டேன்வின்ஸ்டன் ஸ்டுடியோவுக்கு மேக்-அப் டெஸ்ட்டுக்காகப் போயிருந்தோம். ரெண்டு நாளாகியும் அங்கேயும் செட் ஆகலை. லஞ்ச் பிரேக்ல நான் தனியா நின்னு டென்ஷன்ல டேபிளைக் குத்திக்கிட்டு இருந்தேன்.

என்னைக் கடந்து போன ரஜினி சார், ‘இந்தப் படம் முடியறதுக்குள்ள மறுபடி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுடுவீங்கனு நினைக்கிறேன்’னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே படம் முடியற நேரத்துல டென்ஷன் டெரா பைட்டுக்கு ஏறி சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, அப்புறம் சுத்தமா விட்டுட்டேன். அவரும் விட்டுட்டார்!”

விகடன் மேடையில் இயக்குநர் ஷங்கர்

-நன்றி: விகடன்
4 thoughts on “ரஜினியிடம் கற்றதும் பெற்றதும்..! – இயக்குநர் ஷங்கர்

  1. kumaran

    தினம் ஒரு நாலு ஐந்து முறை நம்ம வெப்சைட் open பண்ணுவேன் தலைவர் நியூஸ் பார்த்துட்டா உடம்பெல்லாம் விர்ருன்னு இரத்தம் பாயுது. இது நல்லதா இல்லையா ?

  2. Sanjev

    நான்கூட ஒரு நாளைக்கு 5 தடவை நம்ம சைட் வருவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *