BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் சந்திப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் சந்திப்பு!

rajinikanth-and-shankar

சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்குநர் ஷங்கர் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது வெறும் நட்பு ரீதியிலான சந்திப்பா அல்லது புதிய படத்துக்கான கதை விவாதமா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வந்த எந்திரன் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தப் படத்தை ஷங்கர்தான் இயக்கினார். வசூலில் இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த இந்தப் படத்துக்கு இணையான வெற்றியை இதுவரை வேறு எந்தப் படமும் பெறவில்லை.

எந்திரனுக்குப் பின் ரஜினி நடிப்பதாக அறிவித்த இரு படங்கள் ராணா மற்றும் கோச்சடையான்.

இவற்றில் ராணா படம் தொடங்கிய அன்றே ரஜினி உடல் நிலை சரியில்லாமல் போனதும், அதன் பிறகு அப்படம் கைவிடப்பட்டதும் நினைவிருக்கலாம்.

அடுத்து ஆரம்பிக்கப்பட்ட படம் கோச்சடையான். இது மோஷன் கேப்சரிங் முறையில் 3 டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூன்று ஸ்டில்கள் மட்டும்தான் இதுவரை வெளியாகியுள்ளன. படத்தில் ரஜினி தன் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியுள்ளது நினைவிருக்கலாம்.

இதன் ட்ரைலர் வெளியீடு, பாடல் வெளியீடு போன்றவை குறித்து அவ்வப்போது செய்திகள் வந்தாலும், அவை வெளியாகும் தேதி உறுதியாக அறிவிக்கப்படவில்லை. இதனால் தலைவர் படம் எப்போது வரும் என்ற ஏக்கத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

இந்த நிலையில், ரஜினியி்ன் அடுத்த படம் குறித்து அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி கிளம்பிக்கொண்டே இருக்கிறது.

அவரை கேஎஸ் ரவிக்குமார் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது வேறொரு செய்தி..

சமீபத்தில் ரஜினியைச் சந்தித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அநேகமாக ஐ முடிந்த பிறகு ரஜினியை வைத்து ஷங்கர் மிகப் பிரமாண்டமான படம் ஒன்றை உருவாக்குவார் என்றும் அந்த சந்திப்புக்கு கை கால் இறக்கை வைத்து செய்தி உருவாக்கியுள்ளனர்.

இது நட்பு ரீதியிலான சந்திப்பாகவும் இருக்கலாம்… கோச்சடையான் ட்ரைலரை ஷங்கருக்குக் காட்டுவதற்காக ரஜினி அழைத்திருக்கலாம், என்றும் சொல்கிறார்கள்.

உண்மை என்னவென்பது சந்தித்த அந்த இருவருக்கு மட்டும்தானே தெரியும்!

-என்வழி செய்திகள்

 
8 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் சந்திப்பு!

 1. ananth

  இத கேட்டு கேட்டு போர் அடிசிரிச்சு,போங்கப்பா. இப்போ லோ பட்ஜெட் படங்களே நல்லா எடுக்கிறாங்க. சூது கவ்வும் , நடுவுல கொஞ்சம் , உதயம் NH 4, நேரம் எல்லாமே சூப்பர். பார்த்து சந்தோச படுங்க.

 2. Aryan

  ரஜினிக்கு சனி வெளியில இல்ல, வீட்டுகுள்ளயேதான் இருக்கு, உதவி இயக்குனரா வேல பார்குறேனு , சுரேஷ் கிருஷ்ணாவுக்கு தலை வலிய குடுத்து பாபா னு ஒரு மொக்க படத்தை எடுத்து ரஜினிய கவுத்தாரு அக்கா, இப்போ james cameron மாதிரி படம் எடுக்குறேன்னு 3 வருஷமா அப்பாவ வீடுகுள்ளயே வச்சிருக்குராறு தங்கச்சி. வெளங்கிரும், தல இன்னுமா இதுங்க ரெண்ட நம்பிகிட்டு இருக்குறீங்க ..? கே.எஸ். ரவிக்குமார் , மாதேஷ் இவங்க எல்லாரும் வந்தும் காப்பாத்த முடியாத கோச்சடையான ஷங்கர் சரி காப்பாத்துவாரானு பாப்போம். சுல்தான் தி வொரியர் , கோச்சடையன் ஆச்சு கோச்சடையன் என்னாகுமோ …? சாமி இப்பவே கண்ணா கட்டுதே …!

 3. Raj

  சூப்பர் நியூஸ். உண்மையாக இருந்தால் சந்தோஷம்.

 4. Chithamparam

  கோச்சடையான் படம் வெளிவருமா? என்கின்ற ரீதியில் இலங்கையில் பல இணையத்தளங்களும் பத்திரிகைகளும் செய்திகள் வெளியிட ஆரம்பித்துவிட்டன. இதற்கு மேலும் ரெய்லரோ,பாடல் வெளியீடோ குறைந்தபட்சம் ஸ்டில்களோ வெளியிடாமல் படத்தை கிடப்பில் போடுவது பாரதுாரமான விளைவுகளை ஏற்படுத்தும். சம்பந்தப்பட்டவர்கள் நிலமையைப் புரிந்து கொண்டு செயற்பட்டால் சரி

 5. raj

  100% True what Mr Aryan Says…
  Even if the film releases i dont think it will run..
  Many people had lost hope…
  Thalaiva Please Start a quicky with KS Ravikumar…

 6. Raja Boopathi

  தலைவரே நீங்கள் உங்க வேலைய பாருங்க ……நாங்க எங்க வேலைய பார்க்கிறோம் ……நீங்க எப்போ படம் வருதுன்னு மட்டும் சொல்லுங்க ((->next month வந்தாலும் சரி ..இன்னும் பத்து வருஷம் அப்புறம் வந்தாலும் சரி உண்மையான தொண்டன் அவசர படமாட்டான் ->)) ….அப்ப பாருங்க …இந்தியா பூராவும் தீபவளி தான்….அதனால டோன்ட் வொர்ரி be ஹாப்பி ………கூல் தலைவரே ………

  அன்புடன்
  பூபதி.

 7. M.ASHOKcivil.

  தலைவர் 5 வருடத்திற்க்கு 1 படம் நடித்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.

  ஏன்னா தலைவர் 1980 களில் 1வருடத்திற்க்கு 10 படத்திற்க்கு மேல் நடித்தது மற்றவர்களுக்கு நினைவில் இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *