BREAKING NEWS
Search

ரஜினி நடிக்க ‘இந்தியன் – 2!’ – ஷங்கரின் ‘சர்க்கரை பதில்’!

ரஜினி நடிக்க இந்தியன் – 2 சாத்தியமே! –  ஷங்கரின் ‘சர்க்கரை பதில்’!

நிறைய செய்திகள் வந்துவிட்டன, ரஜினி – ஷங்கரின் மூன்றாவது கூட்டணி பற்றி. இந்த கூட்டணியின் முக்கிய பார்ட்னர் ரத்னவேலுவும் கூட ஏற்கெனவே சொல்லிவிட்டார்.

ஆனால் சொல்ல வேண்டிய ரஜினியும் ஷங்கரும் அமைதி காத்திருந்தனர்.

இவர்களில் இரண்டாமவர் கொஞ்சம் சூசகமாக சொல்லிவிட்டார், அடுத்த கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருப்பதை.

எப்போது என்கிறீர்களா?

இந்த வாரம் விகடனில் ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்துள்ள பதிலும்:

கேள்வி: ”கமல் நடிக்க ‘இந்தியன் – பார்ட் 2’, ரஜினி நடிக்க ‘எந்திரன் – பார்ட் 2’ எது சாத்தியம் ஷங்கர்?”

பதில்: மாத்தி யோசி!

ரஜினி நடிக்க ‘இந்தியன் – பார்ட் 2’, கமல் நடிக்க ‘எந்திரன் – பார்ட் 2’ இதுவும் சாத்தியம்தான்!”

இன்னொரு கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் தலைப்புக்கு சம்பந்தமில்லைதான் என்றாலும், வந்தியத் தேவன் ரசிகர்களுக்கு சம்பந்தமுள்ளது.

எம்ஜிஆர் தொடங்கி, மணிரத்னம் வரை முயற்சி செய்து கைவிட்ட, பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் எண்ணம் ஷங்கருக்கும் இருப்பதுதான்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எந்திரன்’ படத்தப்போ எழுத்தாளர் சுஜாதாவோட பேசும்போது, ‘இதுக்கு நேர் எதிரா ஒரு பீரியட் படம் – ‘பொன்னியின் செல்வன்’ – பண்ணா எப்படி இருக்கும்?’னு கேட்டேன். ‘ரொம்ப நல்லாருக்கும். பண்ணுங்க ஷங்கர்’னு சொன்னார். அதுக்கு முன்னா டியே எப்பவோ ஏதோ தோணி, ‘பொன்னியின் செல்வன்’ அஞ்சு பாகமும் வாங்கி வெச்சிருக்கேன்.

ஜனவரி 23, என் திருமண நாளன்று மனைவியின் விருப்பத்துக்காக நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போயிருந்தேன். அங்கே வந்திருந்த மதிக்கத்தக்க பெரியவர் ஒருத்தர் என் கைகளைப் பிடிச்சிக்கிட்டு, ‘எனக்கு ரொம்ப நாள் ஆசை… நீங்க ‘பொன்னியின் செல்வன்’ கதையைப் படமா எடுக்கணும்’னு உங்களை மாதிரியே தன் விருப்பத்தைத் தெரிவிச்சார். மனசிலும் மண்டையிலும் விதை விழுந்திருக்கு. அது முளைச்சு பெரிசாகி முட்டுமேயானால், எந்த சமரசமும் இல்லாம சர்வதேசத் தரத்தில் இதைத் தயாரிக்க யாராவது ஆர்வம் காட்டினா, சந்தோஷமா எடுப்பேன்!” என்கிறார்.

தலைவரை வைத்து இந்தியன் -2, பொன்னியின் செல்வன் இரண்டுமே அடுத்தடுத்து அமையட்டும்!

-என்வழி ஸ்பெஷல்
4 thoughts on “ரஜினி நடிக்க ‘இந்தியன் – 2!’ – ஷங்கரின் ‘சர்க்கரை பதில்’!

 1. Jupin

  இந்த செய்தியைப் படித்து முதலில் அதிர்ச்சியடைந்தேன். கமலின் வியாபார உத்திதான் இது. தலைவர் இதில் நடிக்க வேண்டாம்.தசாவதாரத்தில் நெப்போலியனை கேவலப்படுத்திய மாதிரிதான் தலைவரையும் செய்வார். அவரை எப்படி அவமானப்படுத்துவது என வாய்ப்பு தேடும் நபர் கமல்.

  எப்படியோ, அவர் எதிர்ப்பார்த்த ஓசி விளம்பரம் அந்தப் படத்துக்கு கிடைத்துவிட்டது. இனி யாராவது தியாகி தயாரிப்பாளராக வருவார். லாபம் கமலுக்கு. பெயர் கெடுவது ரஜினிக்கு. நஷ்டம் தயாரிப்பாளருக்கு.

 2. மிஸ்டர் பாவலன்

  தசாவதாரத்தில் நெப்போலியனை என்ன
  கேவலப் படுத்தினார் கமல்? இது புதிய
  செய்தியாக எனக்கு இருக்கு! நண்பர்களே!
  எதுவும் தகவல் தெரியுமா இது பத்தி?

  அப்போது மினிஸ்டர் பதவியில் நெப்போலியன்
  இருந்ததால் சில இடங்களில் படப்படிப்பு நடக்க
  விசேஷ அனுமதி வாங்கிக் கொடுத்தார் என்பது தான்
  எனக்கு தெரிந்த தகவல்.

  -== மிஸ்டர் பாவலன் ===

 3. Prasath

  இப்பொழுது உள்ள சூழ்நிலையில் எந்திரன் 2 சரியாக இருக்காது …ஆனால் முதல்வன் 2 அ இந்தியன் 2 மிக பொருத்தமாக இருக்கும் ! சங்கர் சரியாகதான் சொல்லி இருக்கிறார் !

  அதைவிட பொன்னியின் செல்வனில் ரஜினி நடித்தால் சரித்திரம் பெருமை கொள்ளும்….

  சங்கர் அடுத்த படம் ரஜினி உடனா என்பதை கேட்டு சொல்ல முடியுமா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *