BREAKING NEWS
Search

நீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாறு படைக்கும் தமிழக மாணவர்கள்… மவுனம் இனியும் கைகொடுக்காது பாரதமே!

நீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாறு படைக்கும் தமிழக மாணவர்கள்… மவுனம் இனியும் கைகொடுக்காது பாரதமே!

bharathidasan

ப்படியொரு போராட்டத்தை இதுவரை தமிழகம் கண்டதில்லை. அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என்ற பேதமில்லாமல், பார்க்கும் இடமெல்லாம் தமிழ் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி கேட்டும், தமிழீழம் மலர பொதுவாக்கெடுப்பு கோரியும், ரத்தம் குடித்த கொலைவெறியன் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரியும்… அனைத்து மாணவர்களும் கொந்தளித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

லயோலா கல்லூரியில் சில மாணவர்கள் மூட்டிய போராட்டத் தீ இன்று உலகை தகிக்கத் தொடங்கியிருக்கிறது. மன்மோகன் சிங்கும், சோனியாவும் இன்ன பிற காங்கிரஸ் தலைவர்களும் வழக்கம் போல மவுனம் காத்து தமிழர் உணர்வை அவமானப்படுத்தி வருகின்றனர். தமிழகத் தலைவர்களோ எப்படி இந்தப் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது என்று கணக்குப் போட்டு வருகின்றனர்.

பாலச்சந்திரன் என்ற அந்த பாலகன், தன் உடலில் வாங்கிக் கொண்ட துப்பாக்கிக் குண்டுகள் இன்று இறுக மூடிக் கொண்டிருக்கும் நீதியின் கதவுகளை துளைக்க ஆரம்பித்துள்ளன.

அரசியல் பின்னணி, ஊடக பிரச்சாரம் ஏதுமின்றி தன்னெழுச்சியாய் தொடங்கிய மாணவர் போராட்டம், இன்று மக்கள் போராட்டமாக மாறி அரசின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்துள்ளது.

இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய கடந்த திமுக அரசைப் போலவே, இப்போதைய ஜெயலலிதா அரசும் பல தந்திரங்களை, அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. அனைத்துக் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறையை அறிவித்து, தேர்வுகளையும் ரத்து செய்துள்ளார்.

அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களை மேலும் தீவிர போராட்டத்துக்கு தள்ளியுள்ளது. இப்போது பெற்றோர் சம்மதத்துடன் பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தை அடக்குமுறையாலோ அல்லது திமிரான பிடிவாதத்தாலோ புறந்தள்ளிவிடலாம் என மத்திய மாநில அரசுகள் நினைக்கலாம். அது அத்தனை எளிதானதல்ல..

கோவையில்... கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்ட பிறகும்...

கோவையில்… கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்ட பிறகும்…

திருப்பூரில் அனைத்துக் கல்லூரி மாணவர் சார்பில்...

திருப்பூரில் அனைத்துக் கல்லூரி மாணவர் சார்பில்…

 

திருச்சி கல்லூரி மாணவிகள்...

திருச்சி கல்லூரி மாணவிகள்…

பாலச்சந்திரன்கள்...

பாலச்சந்திரன்கள்…

ஜெயின் கல்லூரி மாணவர்கள்...

சென்னை டிபி ஜெயின் கல்லூரி மாணவர்கள்…

மாணவர்களை மிஞ்சிய மாணவிகள்...

மாணவர்களை மிஞ்சிய மாணவிகள்…

காந்தி சிலை எதிரில் அறப்போர் நடத்திய மாணவர்களிடம் போலீஸ் அராஜகம்...

காந்தி சிலை எதிரில் அறப்போர் நடத்திய மாணவர்களிடம் போலீஸ் அராஜகம்…

முழங்கால் போட்டு மனித சங்கிலி நடத்திய திருவண்ணாமலை மாணவர்கள்...

முழங்கால் போட்டு மனித சங்கிலி நடத்திய திருவண்ணாமலை மாணவர்கள்…

 

எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவன ஊழியர்களின் ஆதரவு...

எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவன ஊழியர்களின் ஆதரவு…

மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக தாய்மார்கள் - இடிந்தகரையில்...

மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக தாய்மார்கள் – இடிந்தகரையில்…

மாணவர் போராட்டத்தை ஆதரித்து செங்கல்பட்டு ஆனூர் கிராமத்தில் பொதுமக்கள் திரள்...

மாணவர் போராட்டத்தை ஆதரித்து செங்கல்பட்டு ஆனூர் கிராமத்தில் பொதுமக்கள் திரள்…

மதுரையில்...

மதுரையில்…

ஹைதராபாதில் தடையை மீறி...

ஹைதராபாதில் தடையை மீறி…

பெங்களூரில்...

பெங்களூரில்…

போராட்டத்தில் குதித்த கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மாணவர்கள்...

போராட்டத்தில் குதித்த முதல் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்…- கன்னியாகுமரி

ராமேஸ்வரத்தில்....

ராமேஸ்வரத்தில்….

சென்னையில் மாணவர்களை ஆதரித்து பீகார் எம்எல்ஏ சோம் பிரகாஷ்... ராஜபக்சே கயா வந்தபோது கொல்காரனே உன் கால் இந்த மண்ணில் படக்கூடாது என போர்க்குரல் எழுப்பியவர்...

சென்னையில் மாணவர்களை ஆதரித்து பீகார் எம்எல்ஏ சோம் பிரகாஷ்… ‘ராஜபக்சே கயா வந்தபோது கொல்காரனே உன் கால் இந்த மண்ணில் படக்கூடாது,’ என போர்க்குரல் எழுப்பியவர்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




3 thoughts on “நீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாறு படைக்கும் தமிழக மாணவர்கள்… மவுனம் இனியும் கைகொடுக்காது பாரதமே!

  1. srikanth1974

    அனைத்துக் கல்லூரி மாணவர்களின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிப் பெற எனது ஆதரவையும்,வாழ்த்துக்களையும்,தெரிவித்துக்கொள்கிறேன்.
    எழுகவே படைகள் எழுகவே
    விடியவே இரவு விடியவே
    ஆட்டம்போட்டக் கூட்டம் இங்கு
    ஆட்டங்கானப் போகுது
    கேள்வி கேட்டு வேள்வி செய்ய
    வேளை வந்தது. [எழுகவே]

  2. குமரன்

    இனப்படுகொலையில் ராஜபக்சேவின் கூட்டாளி, சொக்கத் தங்கம், தியாகத் திருவிளக்கு அன்னை சோனியா காந்தி தலமையிலான மத்திய அரசு தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்து வருகிறது.

    இப்போதும் கூட ஐ.நா வில் இலங்கைக்குசாதகமாக, இலங்கையைப் பாராட்டி ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

    செய்தி இதோ:

    நன்றி: 2-வது சுற்று காலமுறை ஆய்வறிக்கை தாக்கல் செய்ததற்காக இலங்கைக்கு நன்றி.

    பாராட்டு: யுத்தம் தொடர்பாக இலங்கை அரசே மேற்கொண்ட விசாரணை அறிக்கையின் (எல்எல்ஆர்சி) பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை இலங்கை ஏற்றதை பாராட்டுகிறோம்.

    சிறப்பு செயல்பாடு: அத்துடன் மறுவாழ்வு பணிகள், வடக்கு மாகாணத்தில் படைகளை குறைத்தல் போன்றவற்றையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எதிர்பார்ப்பு: இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து சுதந்திரமாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    வலியுறுத்தல்: தமிழர்கள் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு பணிகள் வேகமாக நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    வரவேற்பு: வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற இலங்கையின் உறுதிமொழியை வரவேற்கிறோம்.

    வாழ்த்து: மறுவாழ்வு பணிகள் தொடர்பான பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் இலங்கை வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

    இதுதான் இந்தியா தாக்கல் செய்துள்ள அறிக்கையின் ஹைலைட்டுகள்.

    போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டுமென எந்த கோரிக்கையும் அறிக்கையில் இடம்பெறவில்லை. இலங்கை அரசுத் தரப்பில், “எமது மூத்த சகோதரன் இந்தியா எம்மை கைவிடாது” என்று கூறப்பட்டதன் அர்த்தம், இதுதான்!

    இந்நிலையில், வரும் 20, 21-ம் தேதிகளில் அமெரிக்காவின் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்றும், அதை இந்தியா ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் இலங்கையை நிர்ப்பந்திக்கும், அல்லது இலங்கைக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் அம்சங்கள் எதுவும் அந்த தீர்மானத்தில் இடம்பெற சான்ஸ் மிக குறைவு.

  3. c.muthu

    முன்பு மாணவர் புரட்சியால் ஹிந்தி விரட்டியடிக்க பட்டது தமிழ் நாட்டில் இருந்து இன்று மாணவர்களின் புரட்சி காங்கரஸ்காரன்களை தமிழகத்தில் இருந்தும் மத்தியில் ஆட்சியில் இருந்தும் விரட்டியடித்து கொலைகாரன் ராஜபக்சேயை தூக்கிலிட முன்வரும் அரசாங்கம் அமையவும் தமிழ் ஈழம் மலரவும் வழிவகுக்கும்… வாழ்க மாணவர் புரட்சி… வெள்ளமென அணிதிரள்க மாணவ கண்மணிகளும் மானமுள்ள தமிழ் இனமும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *