BREAKING NEWS
Search

பொன்னியின் செல்வன் – ஆரம்பித்த வேகத்தில் முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்!

பொன்னியின் செல்வன் –  செல்வராகவனின் கனவு!

பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் ஆசை கொள்வதும், பின்னர் சிலபல காரணங்களுக்காக கைவிடுவதும் வாடிக்கையான செய்தி ஆகிவிட்டது கோடம்பாக்கத்தில்.

அமரர் எம்ஜிஆர் இந்தப் படத்தை எடுக்க முயற்சித்தார். அதற்கு இயக்குநர் மகேந்திரனை வைத்து முழுமையாக திரைக்கதை வசனத்தைக் கூட எழுதிவிட்டார்.

ஆனால் அவர் அந்தப் படத்தை எடுக்க ஆரம்பித்தபோது, அரசியலில் மகா பரபரப்பாகிவிட்டார். படம் நின்றது.

பின்னர் கமல்ஹாஸன் முயற்சி செய்வதாகக் கூறினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இயக்குநர் மணிரத்னம் இந்த நாவலைக் கையிலெடுத்தார். விஜய், விக்ரம், ஆர்யா, மகேஷ்பாபு என பலர் நடிப்பதாகக் கூறப்பட்டது. மைசூர் லலிதமகாலில் ஷூட்டிங் நடத்த தேதியெல்லாம் குறித்த நிலையில், படத்தைக் கைவிட்டுவிட்டு, ‘கடலு’க்குச் சென்றுவிட்டார் மணிரத்னம்.

இந்த நிலையில், அடுத்து செல்வராகவன் இந்தப் படத்தை எடுக்க ஆர்வமாக உள்ளதாகவும் தன்னால் இந்தப் படத்தை எடுக்க முடியும் என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

‘இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு, விக்ரம், ஆர்யா மற்றும் ஜீவா போன்றோரை வைத்து இந்தப் படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

‘இராஜ இராஜ சோழனாக’ விக்ரமும், ‘ஆதித்த கரிகாலனாக’ ஆர்யாவும், ‘வல்லவரையன் வந்திய தேவனாக’ ஜீவாவும் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். குந்தவை, நந்தினி வேடங்களுக்கு இவரது சாய்ஸ்… காஜல் அகர்வால் மற்றும் நயன்தாராவாம்!!

ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் இதே செல்வராகவன், ‘பொன்னியின் செல்வன் எடுக்க வேண்டும் என்பது என் கனவுதான். இதுக்குத்தான் நான் எதைப் பத்தியும் வெலியில் பேசுவதே இல்லை’ என்றும் கூறியுள்ளார். அதாவது ஆரம்பித்த வேகத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ஒருவேளை ஒரு நல்ல சரித்திர நாவல் கெட்டுவிடக்கூடாது என்றுதான் தள்ளித் தள்ளிப் போகிறதோ!!
-என்வழி செய்திகள்




6 thoughts on “பொன்னியின் செல்வன் – ஆரம்பித்த வேகத்தில் முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்!

  1. மிஸ்டர் பாவலன்

    //‘இராஜ இராஜ சோழனாக’ விக்ரமும், ‘ஆதித்த கரிகாலனாக’ ஆர்யாவும், ‘வல்லவரையன் வந்திய தேவனாக’ ஜீவாவும் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். குந்தவை, நந்தினி வேடங்களுக்கு இவரது சாய்ஸ்… காஜல் அகர்வால் மற்றும் நயன்தாராவாம்!!//

    வானதி வேடத்திற்கு த்ரிஷா பொருத்தமாக இருப்பார்.

    விக்ரம்-த்ரிஷா வெற்றி ஜோடியும் கூட..

    -== மிஸ்டர் பாவலன் ===-

  2. s venkatesan, nigeria

    மிஸ்டர் பாவலன் அவர்களே,

    த்ரிஷாவுக்கு வயதாகி விட்டது. (உடனே எனக்கும்தான் வயதாகி விட்டது பரவாயில்லை என்று சொல்ல கூடாது)

  3. karthik

    @ ஒருவேளை ஒரு நல்ல சரித்திர நாவல் கெட்டுவிடக்கூடாது என்றுதான் தள்ளித் தள்ளிப் போகிறதோ!!

    – நாவல் அல்ல.. செல்வராகவன் சரித்திரதயே கேடுதிவிடுவார்.. ஏற்கனவே சோழர்களை கேவலபடுதிவிட்டு.. சோழர்கள் அப்படி இருந்திருக்க மாடங்கனு உங்களுக்கு தெர்யும, நீக பதின்கலன்னு கெடவருதான்…

  4. மிஸ்டர் பாவலன்

    ///த்ரிஷாவுக்கு வயதாகி விட்டது./// (வெங்கடேஷ்)

    எந்திரன் படத்தில் “வயதான” ஐஸ்வர்யா ராய் நடிக்கலையா?

    -== மிஸ்டர் பாவலன் ===-

  5. s venkatesan, nigeria

    ‘///த்ரிஷாவுக்கு வயதாகி விட்டது./// (வெங்கடேஷ்)
    எந்திரன் படத்தில் “வயதான” ஐஸ்வர்யா ராய் நடிக்கலையா?
    -== மிஸ்டர் பாவலன் ===-‘ – நான் சும்மா இருந்திருக்கலாம்.

  6. மிஸ்டர் பாவலன்

    //நான் சும்மா இருந்திருக்கலாம்./// (வெங்கடேசன்)

    ஹி..ஹி..ஹி..

    -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *