BREAKING NEWS
Search

தனியார் துறைகளில் புறக்கணிக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள்!

இந்தியாவின் தனியார் துறைகளில் புறக்கணிக்கப்படும் எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினர்!

டெல்லி: தீண்டாமைக்கு பெயர் ‘போன’ இந்தியாவில், இன்னும் அந்தக் கொடுமை இம்மியளவும் குறையாத நிலை நீடிக்கிறது.

நாட்டின் வேலைவாய்ப்புக்கு முக்கிய ஆதாரமாகத் திகழும் தனியார் துறையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படும் நிலைதான் இப்போதும் உள்ளது.

நாட்டில் முதன் முறையாக எடுக்கப்பட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்புதான் இந்த சமூக அநீதியை வெளிப்படுத்தியுள்ளது.

தனியார் தொழிற்சாலைகள் நிறைந்திருக்கும் பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கான வேலை வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளதாக இந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது.

தமிழ்நாடு பரவாயில்லை…

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளது. இவர்களில் 18 சதவீதம் பேருக்கு தனியார் துறைகளில் சாதாரண வேலைகள் அளிக்கப்படுகின்றன. அதாவது உயர் வகுப்பினர் ஈடுபட விரும்பாத வேலைகள்!

ஆனால் மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் பெரும்பான்மையாக இந்த மக்களுக்கு தனியார் துறையில் மிகக் குறைந்த அளவே, அதுவும் சாதாரண கூலி வேலைகள் வழங்கப்படுகின்றன.

மஹாராஷ்டிராவில் மொத்த மக்கள் தொகையில் 19.1% தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர். ஆனால் அவர்கள் தனியார் துறைகளில் பெற்றுள்ள வேலை வாய்ப்பு விழுக்காடு 5 விழுக்காடுதான். இதுவும் கூட கூலி மற்றும் அதற்கு சமமான வேலைகள்தான்!

குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தொகையினர் 22% மற்றும் 23%. ஆனால் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இவர்கள் பெற்றுள்ளதோ வெறும் 9 விழுக்காடு கூலி வேலைகளே.

இதைவிட கொடுமை என்னவெனில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. அதற்கேற்ப மக்கள் தொகையில் 43.4 விழுக்காடு மக்கள் பழங்குடியினர். சரி இவர்களுக்கு இந்த தனியார் தொழிற்சாலைகளில் எவ்வளவு வேலை வாய்ப்பு? 20 சதவீதத்துக்கும் குறைவு. இந்த வேலைகள் அனைத்துமே உடல் உழைப்பு சார்ந்த சாதாரண வேலைகள்தான்!

நாட்டின் கிழக்கு மாநிலங்களில்தான் அதிகளவு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர்.

கேரள மாநிலம் 100 விழுக்காடு கல்வி கற்ற மாநிலம். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களின் விழுக்காட்டைவிட கூடுதலாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

வட மாநிலங்களில் டெல்லி மற்றும் ஹரியானாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவருக்கு தனியார் துறையில் ஓரளவுக்குதான் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவரின் விகிதத்தைவிட அவர்களுக்கு தனியார் துறையில் கிடைத்திருக்கு வேலை வாய்ப்பு விழுக்காடு கணிசமாக குறைந்தே இருக்கிறது.

தனியார்துறையிலும் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்பது தமிழகத்தின்  நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதில் குறியாக உள்ளனர் ஆதிக்க சாதியினர். அவர்களின் கட்டுப்பாட்டில்தான் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் உள்ளனர்.

நான் சாதி முறைக்கு எதிரானவன். சாதிய ஒடுக்குமுறை எனக்குப் பிடிக்காது என்று கூறிக் கொள்ளும் இந்த சாதீய சக்திகள், இட ஒதுக்கீட்டை ஒழிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் உள்ளுக்குள் இரட்டை டம்ளர் முறைகளை ஆதரிப்பவர்களாகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கு நிகரான பதவிகளை தனியார் துறையில் பெற்றுவிடக் கூடாது என்பதில் குறியாகவும் உள்ளனர்.

-என்வழி செய்திகள்




5 thoughts on “தனியார் துறைகளில் புறக்கணிக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள்!

  1. Karthikeyan

    Hi, i dont understand where all these coming from….. IT companies are the best since they have no quota system and they wont even ask you while applying for interview.

    Before writing make sure you interpret the data properly. Same data/info can be twisted to make it a good as well as bad news.

    Can you have this info? Among those unemployed do you know how many are eligible with skills & fluency in English for being an IT engineer? completing degree alone will not make then eligible. (i assume when you say unemployed, you mean the degree holders)

    also can you provide some source?

    i have some good opinion about this envazhi site. pls dont spoil it by posting baseless stories…..

  2. மிஸ்டர் பாவலன்

    ///IT companies are the best since they have no quota system and
    they wont even ask you while applying for interview./// (Mr. Karthikeyan)

    I fully agree with your view.

    -=== Mr. Pavalan ===-

  3. பசுமை வளவன்

    I experienced this in my own career. இந்த நாட்டில் தனியார் நிறுவனங்கள் என்றதும் ஐடி கம்பெனிகள்தான் பலருக்கும் நினைப்பு வருகிறது. ஆனால் ஐடி என்பது 6 சதவீதம் கூட கிடையாது. மற்ற நிறுவனங்கள், தனியார் வங்கிகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றில் சாதி பார்த்தே வேலைக்கு எடுக்கிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தால், அவன் எஸ்ஸி என்று தெரிந்த பின்னும் உணவகத்தில் வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்களா? 90 சதவீத மதிப்பெண் வைத்திருந்தாலும் எந்த ஐடி நிறுவனத்திலாவது உயர் பதவியில் அமர்ந்திருக்கும் எஸ்ஸி அதிகாரியைக் காட்ட முடியுமா. நிச்சயம் இல்லை. இங்கே இன்டர்வியூ நடக்கும்போது தரவாக வடிகட்டிதான் எடுக்கிறார்கள். உயர்ஜாதிக்காரர்கள் சாதியெல்லாம் இல்லை. இட ஒதுக்கீடு எதற்கு என்று கூமுட்டை நியாயம் பேசுவது இப்போது அதிகமாகிவிட்டது.

    ஒருவன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன். அதிக மதிப்பெண் வைத்திருக்கிறான். நல்ல தகுதிகள் இருக்கின்றன. அவனுக்கு இணையான மதிப்பெண்ணுடன் இன்னொரு உயர் சாதி மாணவன் வந்தால், யாருக்கு வாய்ப்பு கிடைக்கிறது தனியார் நிறுவனங்களில்? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே..

  4. uday

    நான் ஒரு கம்பெனி வைத்து இருகிறேன் அதற்கு ஒருவனிடம் திறமைதான் முக்கியம் அப்படின்னு தான் எல்லா interview la ஆள் எடுகிறர்கள்., நீங்கள் சொல்வது போல சாதி யாரும் பார்ப்பதில்லை.. மற்ற மாநிலத்தில் ஒப்பிட்டு பார்த்திர்கள் தமிழ் நாட்டில் எப்படி இருக்குனு சொல்லவே இல்லை. தனியார் என்பது நீ, நான் தான் உனக்கு உன் கம்பெனி மேல வரணுமுன்னு என்ன பண்ணிவீர்கள் .. நீங்கள் மற்றவர்களுடைய talent தான் பார்பிர்கள் .. உங்களுடைய சாதி பேசாது. எல்லா sc & st இப்போ நல்ல நிலைமையில் தான் இருக்கார் ஆ.ராசாவை போல

  5. dinesh

    இதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை…
    நான் கடந்த 7 வருடங்களாக 3 தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து விட்டு தற்போது சுய நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன்… நீங்கள் சொல்வது போல் எந்த தனியார் நிறுவனத்திலும் எனது ஜாதியை பற்றி கேட்கவில்லை… எனக்கு தெரிந்த என்னுடன் படித்த பல தலித் நண்பர்கள் இன்று நல்ல நிலையில் தனியார் மற்றும் அரசாங்க வேலையில் இருக்கிறார்கள், உணவகங்களில் கூட…
    எனது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் என்ன ஜாதி என்று எனக்கு தெரியாது… நான் கேட்டது கிடையாது… நேர்முக தேர்வை நான் தன செய்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *