Breaking News

‘எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க…’ – அட… ஹன்ஸ்ராஜ் சக்சேனா!

Monday, July 30, 2012 at 1:49 am | 1,857 views

‘எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க…’ – அட… ஹன்ஸ்ராஜ் சக்சேனா!

டவுள் இல்லையென்பவர்கள் கூட, ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்வார்கள்… ‘காலம் இப்படியே போகாது தம்பி..’

மிகச் சமீபத்திய உதாரணம் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா!

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் தாவூத் இப்ராகிம் என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு இவர் மீதான பயங்கள், குற்றச்சாட்டுகள் ஒன்றா இரண்டா…

குற்றச்சாட்டுகளை விடுங்கள். அது உண்மையா பொய்யா வெறும் அரசியலா என்பதை சட்டமும், பாயும் அல்லது ஏற்கெனவே பாய்ந்துவிட்ட கோடிகளும் தீர்மானிக்கட்டும்!

ஆனால் இந்த மனிதர் திமுக ஆட்சியின் இறுதிக் காலங்களில் நடந்து கொண்ட விதம்… சன் தவிர்த்த மீடியாவை எட்டி உதைக்காத குறையாக நடத்திய முறை. அதை கதை கதையாக எழுதலாம்!

‘இது சன் டிவி படம். இங்க வேற மீடியாவுக்கு என்ன வேலை? உங்களை எவன் கூப்பிட்டான்…’ – சன் டிவி படங்கள் ரிலீஸின் போதெல்லாம் மீடியாக்காரர்கள் எதிர்நோக்கிய அவமானம் இது. அதிலும் எந்திரன் நேரத்தில் உதாசீனத்தின் உச்சத்துக்கே போய்விட்டார்கள். சக்ஸேனாவின் கால்கள் அப்போது தரையைவிட்டு ஒரு அடி மேலேதான் இருந்தன!

தமிழ் சினிமாவின் முன்னணி பிஆர்ஓ ஒருவரின் பெயரைச் சொல்லி, “அவர் கேட்கச் சொன்னார்.. எந்திரன் ஸ்டில்கள் உள்ளனவா என ஒரு நிருபர் கேட்டதற்கு, ‘அப்படி எவனையும் எனக்குத் தெரியாது,’” என்று அவர் கூறியதும் நடந்தது!

ஆனாலும் மற்ற மீடியாக்காரர்களில் பெரும்பாலானோர் தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை. எந்திரன் தொடர்பாக நல்லவிதமாகவே எழுதினர். எந்திரனை எந்த திரைப்பட விழாவுக்கும் எடுத்துச் செல்ல குறைந்தபட்சம் அவர்கள் முயற்சிக்காத நிலையில், முதல் முறையாக நார்வேயின் த்ராம்சோ நகரின் சிறப்பு மிக்க திரைப்பட விழாவில் பங்கேற்கச் செய்தார் நமது நண்பர். அதையும் நாம்தான் தெரிவித்தோம். அவர் கண்டுகொள்ளவே இல்லை.  அந்த செய்தியை அவர்கள் மீடியாவே வெளியிடாமல் விட்டுவிட்டன. மற்ற நாளிதழ்கள் வெளியிட்டன.

இத்தனை ‘சிறப்பு மிக்க’ சக்ஸேனாவின் கால்கள் மண்ணைத் தொட்டது, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ‘அய்யோ அடிச்சே கொன்னுடுவாங்க போலிருக்கே,’ என, தன் சகா அய்யப்பனோடு கதறியபோதுதான்!

இருக்கட்டும்…

காலம் அப்படியே இருந்துவிடுவதில்லையே…

இதோ மீண்டும் வந்திருக்கிறார் சக்ஸேனா. சன் பிக்சர்ஸிலிருந்து ராஜினாமா செய்த பின், சில மாதங்கள் அமைதியாக இருந்தவர், இப்போது தன் பெயரில் சாக்ஸ் பிக்சர்ஸ் என்று புது நிறுவனம் தொடங்கியுள்ளார். சன்டிவியிலிருந்து வெளியேற்றப்பட்ட தன் சகாக்களோடு இணைந்து இந்த நிறுவனத்தை நடத்துகிறார்.

ப்ரியாமணி நடித்த சாருலதா என்ற படத்தை இந்த நிறுவனத்தின் சார்பில் முதலில் வெளியிடுகிறார் (சூர்யாவின் மாற்றானுக்கு போட்டி என்ற பரபரப்பு விளம்பரத்தைப் வர்த்தகமாக்கும் முயற்சி!). அடுத்து தமிழ் – தெலுங்கு இருமொழிப் படமொன்றையும் தயாரிக்கிறார்.

இவற்றுக்கெல்லாம் யார் பிஆர்ஓ தெரியுமா… யாரை தனக்குத் தெரியாது என்று கடந்த ஆண்டு சொன்னாரோ அவரேதான்!

இன்று ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சக்சேனாவை அதே பிஆர்ஓவும் அவரது உதவியாளர்களும்தான் மீடியாவுக்கு அறிமுகப்படுத்தினர்.

அப்போது சக்ஸேனா சொன்னது:

“கடந்த ஆண்டுகளில் நான் எப்படி இருந்தேன் என்று உங்களுக்கே தெரியும். இப்போது புதிதாக வந்திருக்கிறேன். முன்பு நான் மீடியாவை ஒதுக்கியது உண்மைதான். பலர் மனமும் இதில் எவ்வளவு புண்பட்டிருக்கும் என உணர்கிறேன். நான் ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க.. நான் உங்க வீட்டுப் பிள்ளை,” என்றார்!

அப்படிப் போடு!!

-என்வழி செய்திகள்

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

8 Responses to “‘எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க…’ – அட… ஹன்ஸ்ராஜ் சக்சேனா!”
 1. குமரன் says:

  திரைத் துறை ஊழியர்களும் எப்படியோ. மக்கள் இப்படிப்பட்ட பொது மன்னிப்புகளை வழங்கி விடுகிறார்கள்.

  ஆனால் நிலை உயரும்போது அகந்தையுடனும் மமதையுடனும் நடந்து கொள்ளும் சக்சேனா போன்றவர்கள், பிரச்சினைகளுக்குள் சிக்கிய பின்னால் இப்படித்தான் இறங்கி வந்து மன்னிப்புக் கேட்பார்கள், பிரசினை தீர்ந்து மேலே வந்ததும் ஏறி வந்த ஏணிகளை உதைப்பார்கள், ‘பழைய குருடி, கதவைத் திறடி’ என்ற கதைதான்.

  சக்சேனாக்களை நம்பாது இருப்பதே நல்லது.

 2. srikanth says:

  அய்ங்கரன் நிறுவனத்தை மிரட்டி எந்திரன் படம் தயாரிக்கும் உரிமையை சன்டிவிக்கு பெற்றுதந்த புண்ணியவான் இந்த சக்சேனா மும்பை இல் உள்ள மார்வாடியை திருமதி லதாரஜினிக்கு எதிராக தூண்டிவிட்டு லதா அவர்களின் அலுவலகம் தாக்கப்பட காரணமாக இருந்த கருங்காலி இந்த சக்சேனா அதுவும் நம்ம தலைவர் உடல்நலம் இன்றி மருத்துவமனயில் இருந்த சமயத்தில் .

 3. Murali says:

  இந்த மன்னிப்பு கேட்கும் நோக்கம் ஒரு வியாபார நுணுக்கமே , இப்பொழுது மீடீயா பக்கம் திரும்புவதற்கு காரணம் அவர்களுடைய பேனாக்கள் உமது புதிய நிறுவணத்தை பாராட்டி எழுத வேண்டும் என்பதற்காக தான் .

 4. r.v.saravanan says:

  முன்பு நான் மீடியாவை ஒதுக்கியது உண்மைதான். பலர் மனமும் இதில் எவ்வளவு புண்பட்டிருக்கும் என உணர்கிறேன். நான் ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க..

  அடுத்து ஒரு வெற்றியை இவர் பெற நேர்ந்தால் இதே மன நிலையில் தான் இருப்பாரா ?

 5. r.v.saravanan says:

  முன்பு நான் மீடியாவை ஒதுக்கியது உண்மைதான். பலர் மனமும் இதில் எவ்வளவு புண்பட்டிருக்கும் என உணர்கிறேன். நான் ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க..

  அடுத்து ஒரு வெற்றியை இவர் பெற நேர்ந்தால் இதே மன நிலையில் தான் இருப்பாரா ?

 6. anbudan ravi says:

  கலாநிதியின் பினாமியாக மீண்டும் களத்தில் இறங்குகிறார் சாக்ஸ்சேனா…ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல, நேரடியாக களம் இறங்காமல் சாக்ஸ்சேனா வாயிலாக இறங்குகிறார்…..இருப்பினும் வாழ்த்துக்கள் – எந்திரனுக்காக.

  அன்புடன் ரவி.

 7. Kumar says:

  if you beleive in karunanidhi family and do all the attagasam this is the reality…

  konjamavada attagasam panninegha,oorai kollai adichu udapula pottenghaleda…

  makkal ellathukum theerpu kudupanghada…K.D brothers seincha kariyamellam summavada…

 8. மிஸ்டர் பாவலன் says:

  ///சக்சேனாக்களை நம்பாது இருப்பதே நல்லது./// (குமரன்)

  சக்சேனா மாறிவிட்டார் என நான் நம்பவில்லை. இது போன்ற நிகழ்வுகளில்
  என்னை விட பத்திரிக்கையாளர்கள் அதிகம் அறிவார்கள். அவர்கள் அதிகம்
  அனுபவப்பட்டவர்கள். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ===-

  பின்குறிப்பு: குமரன் வேறொரு தொடரில் கொடுத்த ஐடியாப் படி
  பாடல் எழுதலாம் என நினைத்து “மாணவர் என்பவன் தலைவன் ஆகலாம்”
  என ஒரு பாடல் – அண்ணா பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ் குரலில்
  ஜெமினி பாடியது – எழுதினேன். ஆனால் விமர்சனம் கடுமையாக
  இருந்ததால் “யாரும் அடிக்க வந்தால் எதற்கு ரிஸ்கு?” என நான் அதை
  போஸ்ட் செய்யலை. இப்போவாவது நான் பவர் ஸ்டார் இல்லை என
  நண்பர் AK புரிந்து கொண்டால் நல்லது.

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)