BREAKING NEWS
Search

ரூ 40000 கோடி சொத்தில் எந்த தனிப்பட்ட நபருக்கும் பங்கில்லை… எல்லாம் மக்களுக்கே! – சாய் பாபாவின் உயில்

ரூ 40000 கோடி சொத்தில் எந்த தனிப்பட்ட நபருக்கும் பங்கில்லை… எல்லாம் மக்களுக்கே! – சாய் பாபாவின் உயில்


ஹைதராபாத்: தனது அறக்கட்டளையின் ரூ 40 ஆயிரம் கோடி சொத்துகளில் ஒரு பைசா கூட எந்த தனிப்பட்ட நபருக்கோ, உறவினர்களுக்கோ கிடையாது. அனைத்தும் மக்களுக்கே சேர வேண்டும், என மறைந்த மகான் ஸ்ரீசத்யசாய் பாபா எழுதியுள்ளார்.

சத்ய சாய்பாபாவின் உயில் இப்போது வெளியாகியுள்ளது. ரூ. 40,000 கோடி சொத்துக்கள் கொண்டது சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மறைந்ததையடுத்து அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது என்பது குறித்த பிரச்சனைகள் எழுந்தன.

இந் நிலையில் 1967ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி சாய் பாபா எழுதி வைத்த உயில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சாய் பாபாவின் உதவியாளரான சத்யஜித் சாலியன் அதை நேற்று ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் இயக்குனர் குழுவிடம் சமர்பித்தார்.

அதில், “எனது பக்தர்களால் தரப்பட்ட எல்லா நன்கொடைகளும் மக்கள் நலப் பணிகளுக்கே செலவிடப்பட வேண்டும். சொத்துக்களில் எந்தப் பகுதியும் வேறு எந்த தனிப்பட்ட நபருக்கும் இல்லை. எனக்கு என்று எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை. எனது குடும்பத்தினரின் சொத்துக்களிலும் கூட எனக்கு பங்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்,” என்று கூறப்பட்டுள்ளது.

தனது அறக்கட்டளையின் உறுப்பினரும் சார்ட்டர்ட் அக்கெளண்டன்டுமான இந்துலால் ஷா, மும்பை உயர் நீதிமன்ற சொலிசிட்டராக இருந்த டிஐ சுக்லா ஆகியோரை சாட்சிகளாக வைத்துக் கொண்டு இந்த உயிலை எழுதியுள்ளார் பாபா. இதில் இந்துலால் மட்டுமே இப்போது உயிரோடு உள்ளார்.

இந்த உயில் வெளியானதன் மூலம் பாபாவின் அறக்கட்டளையின் சொத்துக்களில் அவரது குடும்பத்தினருக்கு எந்த பங்கும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

சாய்பாபாவின் அறக்கட்டளை புட்டபர்த்தியில் பல்கலைக்கழகம், மருத்துவமனை, மியூசியம், கோளரங்கம், ரயில் நிலையம், விமான நிலையம், விளையாட்டு அரங்கம், பெங்களூரில் மருத்துவமனை, ஆசிரமம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல குடிநீர்த் திட்டங்கள், கொடைக்கானல் ஆசிரமம், நாடு முழுவதும் பல கல்வி நிலையங்கள், சுகாதார மையங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் 165 நாடுகளில் இந்த அறக்கட்டளைக்கு ஆசிரமங்கள் உள்ளன. இன்னும் அதற்கு உலகம் முழுவதும் இருந்தும் நன்கொடைகள் வங்கிகள் மூலமாக வந்து கொண்டுதான் உள்ளன.

இவை அனைத்தையும் மக்கள் நலப் பணிகளுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்பது சத்யசாய் பாபாவின் விருப்பம். இதனை அவர் 45 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாபா மறைவுக்குப் பிறகு நடந்த பிரஸ் மீட்டில், அவர் உயில் எதையும் எழுதி வைக்கவில்லை என்று அறிவித்தது நினைவிருக்கலாம். இப்போது ஒன்றரை ஆண்டு கழித்து இந்த உயிலை வெளியிட்டிருப்பதால் பல கேள்விகள் எழுந்துள்ளன.

-என்வழி செய்திகள்




2 thoughts on “ரூ 40000 கோடி சொத்தில் எந்த தனிப்பட்ட நபருக்கும் பங்கில்லை… எல்லாம் மக்களுக்கே! – சாய் பாபாவின் உயில்

  1. chozan

    உண்மையை சொல்வதென்றால் எனக்கு சாய் பாபா மீது எந்த ஈர்ப்பும் இதுவரை இருந்தது இல்லை இப்பொழுது ஏற்படுகிறது.

  2. enkaruthu

    // தனது அறக்கட்டளையின் ரூ 40 ஆயிரம் கோடி சொத்துகளில் ஒரு பைசா கூட எந்த தனிப்பட்ட நபருக்கோ, உறவினர்களுக்கோ கிடையாது. அனைத்தும் மக்களுக்கே சேர வேண்டும், என மறைந்த மகான் ஸ்ரீசத்யசாய் பாபா எழுதியுள்ளார்.//

    உண்மையாலுமே பாராட்ட பட வேண்டிய ஒரு உண்மையான குரு செய்ய வேண்டிய விஷயம்.

    //ஆனால் பாபா மறைவுக்குப் பிறகு நடந்த பிரஸ் மீட்டில், அவர் உயில் எதையும் எழுதி வைக்கவில்லை என்று அறிவித்தது நினைவிருக்கலாம். இப்போது ஒன்றரை ஆண்டு கழித்து இந்த உயிலை வெளியிட்டிருப்பதால் பல கேள்விகள் எழுந்துள்ளன.//

    வேறு என்ன சார் இந்த சொத்தை ஆட்டையை போடுவதற்கு என்ன வழி என்று இவர்கள் பல வழிகளிலும் சிந்தித்து ஒன்றும் எடுபடாமல் போனதால் வேறு வழி இல்லாமல் இதை ஒத்துகொண்டிருக்கிரார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *