BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட சரத்குமார் அணி

தலைவர் ஓட்டு யாருக்கு?

sarath

டிகர் சங்கத் தேர்தலில் தங்கள் அணியை ஆதரிக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டனர் சரத்குமார் தலைமையிலான அணியினர்.

நடிகர் சங்கத்துக்கு வரும் அக்டோபர் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதில் இப்போது பொறுப்பில் உள்ள சரத்குமார் தலைமையிலான அணியும், அவர்களை எதிர்த்து விஷால் தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றன.

அவரவர் அணிக்கு ஆதரவு திரட்டி தமிழகம் முழுவதும் உள்ள நாடக நடிகர்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர் இரு அணியினரும்.

திரையுலகின் முக்கிய நடிகர் நடிகைகளைச் சந்தித்தும் ஆதரவு கோரி வருகின்றனர்.

விஷால் அணியினர் ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு கோரினர். அனைத்து விஷயங்களையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட ரஜினி, அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அடுத்து இப்போது சரத்குமார் அணியினர் ரஜினியைச் சந்தித்தனர். நடிகர் சங்கப் பிரச்சினைகள் குறித்து ரஜினியுடன் பேசி, பிரச்சினைகள் தீர தங்களை ஆதரிக்குமாறு ரஜினியைக் கேட்டுக் கொண்டனர். சரத்குமார் அணியையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார் ரஜினி.

-என்வழி




4 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட சரத்குமார் அணி

  1. Tamil Thiratti

    மிக மிக சிறந்த பதிவு நண்பரே. உங்களின் இந்த பதிவை தமிழ் திரட்டியிலும் (http://tamilthiratti.com) இணைத்து இன்னும் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  2. Anu

    இந்த அணிக்கு சங்குதான் ……. எதனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !!! எல்லாரும் அ தி மு க கோஷ்டி ….

  3. மிஸ்டர் பாவலன்

    ரஜினி, கமல் இருவரும் சூட்டிங் அது, இது என ஏதாவது
    காரணம் சொல்லி வோட்டு போடாமல் ஒதுங்கி விடுவது
    இருவருக்கும் நல்லது! இது பாவலன் கருத்து! நன்றி!

    -=== மிஸ்டர் பாவலன் ==-

  4. enkaruthu

    பாவலன் சொல்வது சரிதான்.இரண்டு அணியுமே சுயநலம் மற்றும் ஈகோ காரணமாகவே தேர்தலில் நிற்கின்றன.பாவம் நாடக நடிகர்கள்தான்.இந்த தினமலம் பத்திரிகை தலைவர் இரண்டு வாழ்த்துதான் சொன்னார் என்று தெரிந்தும் சரத்துக்கு ரஜினி அதரவு என்று திரித்து எழுதுகிறர்கள்.என்னை பொறுத்தவரை தேடி வந்தவர்களை அது எதிரியாக இருந்தாலும் வாழ்த்துவது தலைவர் பண்பு.ஆனால் அந்த வாழ்த்தையே தலைவர் ஆதரவு என்று திரித்து கூறியவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் .அதனால் தலைவர் நான் எந்த அணியின் ஆதரவாளனும் இல்ல.ஒற்றுமையாக இருங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *