கோச்சடையானில் ரஜினியுடன் சரத்குமார்!
Tuesday, January 24, 2012 at 10:27 pm | 1,100 views
கோச்சடையானில் ரஜினியுடன் சரத்குமார்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் குறித்து அநேகமாக ஒரு நாளைக்கு ஒரு புதிய செய்தி அல்லது ஆதாரப்பூர்வமற்ற தகவல் வந்தவண்ணம் உள்ளது.
காரணம், படத்தின் இயக்குநரான சௌந்தர்யா ட்விட்டரில் தகவல் தந்துவிடுகிறார். இன்னொரு பக்கம் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் தன்னிடம் படம் குறித்து விசாரிக்கும் பத்திரிகையாளர்களிடம் உள்ளதை உள்ளபடியே சொல்கிறார்.
இது ஒருவகையில் படத்துக்கு சாதகமும்கூட. தேவையற்ற எதிர்ப்பார்ப்பை தவிர்க்க உதவும்.
ஆரம்பத்தில் அனிமேஷன் 3 டி படம் என்ற அளவுக்கு இருந்த கோச்சடையான் இப்போது ஒரு மெகா படமாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்தப் படத்தில் ஏற்கெனவே பெரிய நட்சத்திரங்கள் ரஜினியுடன் கை கோர்த்துள்ள நிலையில், இப்போது புதிதாக இணைந்துள்ளார் நடிகர் சரத்குமார். ரஜினிக்கு அடுத்து முக்கிய பாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார்.
‘கோச்சடையான் ‘ படத்தின் இயக்குனரான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் இணையத்தில் ” கோச்சடையான் படத்தில் சரத்குமார் அங்கிள் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறோம். ” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் நாம் கேட்டபோது, “ஆமா… முக்கியமான ரோல் பண்றேன்.. ரஜினி சார் கூட நடிக்கிறது சந்தோஷமா இருக்கு..” என்றார்.
ஏற்கனவே ‘ ராணா ‘ படத்திலும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சினேகா ரஜினிக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஏற்கெனவே ஆதி, சினேகா உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. கேத்ரீனா நாயகியாக நடிக்கிறார்.
வடிவேலு?
இந்தப் படத்தில் நகைச்சுவையை வடிவேலு கவனித்துக் கொள்வார் என்கிறார்கள். ஆனால் இது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
ராணாவில் வடிவேலுதான் முதலில் காமெடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின் அவர் நீக்கப்பட்டார். உடல்நிலை சரியாகி சென்னை திரும்பிய ரஜினி, தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் வடிவேலுவுக்கு ராணாவில் வாய்ப்பளித்தார். எனவே கோச்சடையானில் வடிவேலு நடிக்கக் கூடும் என்கிறார்கள். பார்க்கலாம்!
-என்வழி ஸ்பெஷல்





அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்




இந்த படத்தின் மீது கொஞ்சம் ஈடுபாடு இல்லாமல் இருந்தது…..ஆனால் தினம் வரும் ஒவ்வொரு செய்தியும் மனதை குதூகலிக்க வைத்துவிட்டது. எதிர்பார்ப்பை எகிரவைத்துவிட்டது. சரத்குமாரும் ஆதியும் ராஜா அல்லது தளபதி வேடத்தில் தலைவரோடு சேர்ந்து பட்டையை கிளப்ப போகிறார்கள். படம் சீக்கிரம் வர வேண்டும்.
அன்புடன் ரவி.
யார் இந்த ஆதி?