BREAKING NEWS
Search

சங்கரன் கோயில் ஸ்பெஷல்: வைகோ நம்பிக்கையும் அழகிரி ஜோசியமும்!

சங்கரன் கோயிலுக்கு மட்டும் ‘தனி லைனில்’ மின்சாரம்? – இடைத்தேர்தல் ஸ்பெஷல்

ன்றிலிருந்து முறைப்படுத்தப்பட்ட மின்வெட்டு அமலுக்கு வந்திருக்கிறது. ஊரகப் பகுதிகளில் 4 மணி நேரம் மின்வெட்டு. சென்னைக்கு 2 மணி நேரம்.

கொடுமை பாருங்க… மின்வெட்டு என்று அறிவித்தது பிற்பகல் 12 முதல் 2 வரை. ஆனால் காலை 6 மணிக்கே வெட்டிவிட்டார்கள். இரண்டு மணிநேரம் ‘நோ பவர்’.

மீண்டும் பிற்பகல் 12 முதல் 2 வரை அதிகாரப்பூர்வ வெட்டு. என்னமா யோசிக்கிறாங்க.

சென்னையில் இந்த நிலை என்றால் வெளியூரில் கேட்க வேண்டுமா… அங்கு அதிகாரப்பூர்வமாக 4 மணிநேரம், திருட்டுத்தனமாக நான்கைந்து மணி நேரம் என ‘பொழப்பு சிரிக்கிறது’!

ஆனால் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் சங்கரன்கோயில் தொகுதிக்கு மட்டும் 2 மணிநேரம்தான் மின்வெட்டு!

இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகாரை விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது ஆணையம். எப்படியும் இடைத்தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு விசாரணை முடிவைச் சொல்லிவிடுவார்கள் என நம்பலாம்!

15000 -20000 வாக்குகளில் திமுக ஜெயிக்கும் – அழகிரி

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என மத்திய அமைச்சர் முக அழகிரி தெரிவித்தார்.

இன்று பிற்பகல், மின்வெட்டு அமலில் இருந்த நேரமாக பார்த்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த வேட்பு மனு தாக்கலின்போது ஆயிரக்கணக்கான திமுகவினர் மு.க.அழகிரி தலைமையில் திரண்டு வந்திருந்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்குப் பின்னர் அழகிரியை சந்தித்த செய்தியாளர்கள் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்துக் கேட்டனர். அதற்கு அழகிரி பதிலளிக்கையில்,  15,000 முதல் 20,000 வாக்கு வித்தியாசத்தில் ஜவஹர் சூரியக்குமார் வெற்றி பெறுவார் என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், மனுத் தாக்கல் செய்யும்போது மின்சாரம் இல்லை. இதை முன்னிறுத்தியே மக்களிடம் பிரசாரம் செய்வோம். மின்தடையால் தேர்தல் அலுவலர் மனுவை மிகுந்த சிரமப்பட்டு படித்துப் பார்க்க நேர்ந்தது. மின்தடையால் மக்கள் படும் அவதியை தேர்தல் பிரசாரத்தில் முன்னிறுத்துவோம், என்றார்.

கடந்த திமுக ஆட்சியில் 11 இடைத்தேர்தல்கள் நடந்தன. அத்தனையிலும் திமுக வென்றது. பெரும்பாலும் இந்த தேர்தல்கள் அனைத்துக்குமே அழகிரிதான் பொறுப்பேற்றிருந்தார். ஒவ்வொரு முறையில் இத்தனை ஆயிரம் வாக்குகளில் ஜெயிப்பேன் என்று சொல்லி, கிட்டத்தட்ட அந்த அளவு ஓட்டு வாங்கி ஜெயிக்க வைத்தார். ஜெயலலிதாவே ஒரு கட்டத்தில் கடுப்பாகி, அதெப்படி அழகிரி சொன்ன அளவுக்கே வாக்கு வித்தியாசம் அமைகிறது என்று கேள்விகூட எழுப்பினார் ஜெயலலிதா.

இந்த முறையும் அழகிரி வெற்றி வித்தியாசத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டார். ஆனால் இதற்கு முன்பிருந்த நிலைமை வேறு. இந்த தேர்தலில் அழகிரி சொல்வது வெறும் ஜோசியம்தான். பலிக்குமா என்பது தெரியாது!

கோட்டையை சங்கரன்கோயிலுக்கு மாற்றிவிட்டாரா ஜெ? – வைகோ

சென்னை கோட்டையை சங்கரன்கோவிலுக்கு மாற்றி விட்டாரா என்று முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார் வைகோ.

இந்த இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தாலும், தேர்தல் வேலைகளை எல்லோருக்கும் முன்பாகவே தொடங்கியது வைகோவின் மதிமுகதான்.

இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதலிலேயே ஆரம்பித்துவிட்டவரும் வைகோதான்.

சங்கரன் கோயிலில் நேற்று நடந்த கூட்டத்தில், தனது மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை அறிமுகப்படுத்தி அவர் பேசியது:

தமிழ்நாட்டில், ஊழல், அதிகாரம் இல்லாத ஆட்சி தொடர வேண்டுமா அல்லது அண்ணா வழி ஜனநாயகம் வேண்டுமா என்று தீர்பளிக்கும் விதத்தில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதிமுகவுக்கு சட்டமன்றத்தில் ஒரு உறுபபினர் கூட இல்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வெற்றி எங்களுக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

கோட்டை மாற்றமா?

தமிழக முதல்வர் 32 அமைச்சர்களை உள்ளடக்கிய 43 பேரை கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார். சென்னை கோட்டையை சங்கரன்கோவிலுக்கு மாற்றி விட்டாரா என்று நான் முதல்வரை கேட்கிறேன்.

அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. 2 ஆயிரம் யூனிட் மணல் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என நிர்ணயித்து கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த கொள்ளையெல்லாம் தடுக்க இந்த ஆட்சிக்கு நீங்கள் மூக்கணாங்கயிறு கட்ட வேண்டும். அதற்காக நீங்கள் சதன் திருமலைக்குமாருக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களியுங்கள். அதி்முக பிரேக் இல்லாத வாகனமாக செல்கிறது. அதை இயக்குபவர் சதன்திருமலைக்குமாராகத்தான் இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

-என்வழி செய்திகள்
4 thoughts on “சங்கரன் கோயில் ஸ்பெஷல்: வைகோ நம்பிக்கையும் அழகிரி ஜோசியமும்!

 1. குமரன்

  சங்கரன் கோவிலில் இந்த முறை மதிமுக வென்றால் ….
  அதுதான் …..
  கோட்டை சங்கரன் கோவிலுக்கு மாறிவிட்டதன் அறிகுறி ….

 2. ஆனந்த்

  சங்கரன் கோயிலில் ஒரு சாம்பிள் பிரச்சாரம் ((கற்பனை):

  “தமிழகத்தில் எந்த தொகுதிக்கும் கிடைக்காத வாய்ப்பு
  அனைத்துத் துறை அமைச்சர்களும் எனது தொகுதிக்கு வந்து
  தங்களின் ஒன்பது பத்து மாத ஆட்சியின் சாதனைகளை
  சிறப்பாக எடுத்துரைக்க வந்திருக்கின்ற மாண்புமிகு
  அமைச்சர் பெருமக்களுக்கும் எனது மனமார்த்த நன்றியை
  தெரிவித்துகொள்கிறேன்.

  சாதனை-1: பால்வளத்துறை பால் விலையை விண்ணை முட்டும்
  அளவிற்கு ஏற்றி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு
  கசப்பான விலையில்ல மருத்தினை வழக்கி தமிழகத்தின் அனைத்து
  குடும்பங்களிலும் பாலை வார்த்து சாதனைகளை படைத்து
  கொண்டிருக்கும் பால்வளத்துறையின் தற்போதைய அமைச்சர்
  மாண்புமிகு திரு V. மூர்த்தி அவர்களின் நிர்வாகத் திறமையை மெச்சி,
  அவர் இல்லை என்றால் இந்த இடைத்தேர்தல் முழுமையடையாது
  என்று, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், அவரை இங்கே அனுப்பி
  வைத்திருக்கிறார்கள்.

  சாதனை-2: போக்குவரத்துத்துறை பேருந்தை விட வேகமாக சென்று
  ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வறுவாயில் பெரும் தொகையை
  பேருந்து கட்டணமாக பெற்று மக்கள் சேவாயே பெரிதான நினைத்து
  சீரொடும் சிறப்போடும் செயல்பட்டுவரும் போக்குவரத்துத் துறையின்
  அமைச்சர் மாண்புமிகு திரு V. செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுத்
  திறனை முதல்வர் மட்டும் அறிந்தால் போதாது நாமும் அறிந்து கொள்ளவேண்டும் என்று அவரை இங்கே அனுப்பி
  வைத்திருக்கிறார்கள்……

  சாதனை-3 : அடுத்து குறிப்பிட்ட நேரத்தில் மின்வெட்டு பற்றி பேச
  மாண்புமிகு மின்துறை அமைச்சர் …. ..(நீங்களே பூர்த்தி செய்க!)

  -ஆனந்த்

 3. மிஸ்டர் பாவலன்

  ///சீரொடும் சிறப்போடும் செயல்பட்டுவரும் போக்குவரத்துத்
  துறையின் அமைச்சர் மாண்புமிகு திரு V. செந்தில் பாலாஜி
  அவர்களின் அறிவுத் திறனை முதல்வர் மட்டும் அறிந்தால்
  போதாது, நாமும் அறிந்து கொள்ளவேண்டும் என்று..//// (ஆனந்த்)

  சூப்பர் ! இவர் தான் அமைச்சர் என்பது உங்கள் பதிவைப்
  பார்த்த பின் தான் தெரிந்தது 🙂

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 4. Titus

  Gret post. I was checking continuously this blog and I’m impressed!
  Extremely helpful info particularly the last part 🙂 I care for such info a lot.
  I was seeking this particular info for a long time. Thank you and
  good luck.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *