BREAKING NEWS
Search

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

sanjay-1மும்பை: 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

முக்கிய குற்றவாளியான யாகூப் மேனனுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.

1993-ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இதில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயமடைந்தனர். ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 28 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் சேதமடைந்தன.

இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக தாவூத் இப்ராஹிம், டைகர் மெமோன், அவனது தம்பி அயூப் மெமோன் ஆகியோர் உட்பட 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 12 பேர்களுக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தடா கோர்ட் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் சௌகான் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.

1993-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேனனின் தூக்கு தண்டனையை உறுதி செய்யப்பட்டது.

இந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்திற்கு தடா நீதிமன்றம் வழங்கிய 6 ஆண்டுகள் சிறை தண்டனையை 5 வருடங்களாகக் குறைத்தது. இவர் 18 மாதங்களை சிறையில் கழித்துவிட்டார். இதனால் மீதி காலத்தை மட்டும் இவர் சிறையில் கழிப்பார். இவர் 4 வார காலத்தில் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்றரை ஆண்டுகள் ஜெயிலில் இருக்க வேண்டிய சூழல் சஞ்சய் தத்துக்கு ஏற்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பைக் கேட்ட சஞ்சய் தத் கண்ணீர் விட்டு அழுதார்.

குற்றம் என்ன?

மும்பையில் குண்டு வைத்து 257 பேரைக் கொன்ற தீவிரவாதிகளின் ஆயுதங்களை தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்தார் என்பதுதான் சஞ்சய் தத் மீதான குற்றச்சாட்டு.

இந்த தீர்ப்பு கிடைத்ததும், சஞ்சய் தத் வழக்கறிஞர் கூறுகையில், “சஞ்சய் தத் அடுத்த மூன்றரை ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டி வரும். அதற்கு அவரை தயார்ப்படுத்தி வருகிறோம்,” என்றார்.

-என்வழி செய்திகள்




One thought on “மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

  1. HARISH KUMAR

    தலைவர் இவருக்கு ஆதரவாக அறிக்கை ஏதோ கொடுத்திருக்கிராரமே, உண்மையாகவா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *