BREAKING NEWS
Search

சாம்சங் vs ஆப்பிள் : காப்புரிமை சண்டை – நஷ்டம் யாருக்கு?

சாம்சங் vs ஆப்பிள் : காப்புரிமை சண்டை – நஷ்டம் யாருக்கு?

ரெண்டு வாரங்களுக்கு முன்னாடி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா கோர்ட்டில் ஆப்பிள் கம்பெனி தொடர்ந்த காப்புரிமை வழக்கில் சாம்சங் கம்பெனிக்கு எதிரா தீர்ப்பளித்து கோர்ட் அந்த கம்பெனிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5,500/- கோடி ரூபாய் அபராதம் விதிச்சது நினைவிருக்கலாம்.

டெக்னாலஜி உலகில் ஆப்பிள் கம்பெனிக்கு ஆதரவான சாம்சங் கம்பெனிக்கு எதிரான இந்த தீர்ப்பு மிகவும் பரபரப்பா பேசப்பட்டு வருது.

எக்ஸாம்ல பிட்டடிக்கிற பழக்கம் இப்போ நாடு கடந்து டெக்னாலஜி வரைக்கும் பரவியிருக்கிறது நமக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது என்றாலும் இதிலிருக்கிற உண்மைத் தன்மையையும் நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கு.

‘நாங்கள் ஆப்பிளோட சாதனங்களை காப்பியடிக்கவில்லை’ என்று என்னதான் சாம்சங் தரப்பு சப்பைக்கட்டு கட்டினாலும் ஆப்பிள் அதற்கு எதிராக அடுக்கி வைத்த ஃப்ரூப் எல்லாமே ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்ததால் சாம்சங்கால இதிலிருந்து ஈஸியா தப்பிக்க முடியல.

ஆதாரம் 1

டெக்னாலஜி உலகில் ஜாம்பவானாக இருக்கும் ஆப்பிள் கம்பெனி மொபைல் மார்க்கெட்ல நுழைஞ்சு தன்னோட முதல் மொபைலை 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ‘ஐ-போன்’ங்கிற பேர்ல ரிலீஸ் பண்ணியது.

இண்டெர்நெட் உலகில் தனித்தன்மையோட இருக்கும் கூகுள் வெளியிட்ட மொபைலுக்கான ஆன்ட்ராய்டு சாப்ட்வேரை உள்ளடக்கி சாம்சங் தனது முதல் கேலக்ஸி i7500 என்ற மொபைலை 2009 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் பண்ணியது.

ஆதாரம் 2

அதே போல ஆப்பிளோட ஐ-பேட் சாதனம் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மார்க்கெட்ல ரிலீஸ் ஆச்சு. அதே 2010 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் சாம்சங் தன்னோட முதல் ஆன்ட்ராய்டு டேப்லெட்டை ‘கேலக்ஸி டேப்’ங்கிற பேர்ல ரிலீஸ் பண்ணியது.

மேற்கண்ட இரண்டு சாதனங்களையும் முதல்ல முந்தி ரிலீஸ் பண்ணினது ஆப்பிள் கம்பெனிதான்கிறது உண்மைன்னு தெரிய வருது. ஆப்பிளுக்குப் பிறகு தான் சாம்சங் மேற்சொன்ன ரெண்டு தயாரிப்புகளையும் வெளியிட்டிருக்கிறதும் தெளிவா தெரியுது.
என்னதான் கோர்ட்ல ’நாங்க ஏற்கனவே இந்த சாதனங்களை பரிசோதனை முயற்சியில் தயாரிச்சி வைத்திருந்தோம்’ என்று சாம்சங் சொன்னாலும் கோர்ட் அதை சட்டை பண்ணவே இல்லை. பரிசோதனை முறையில் வைத்திருந்தால் முதல்ல சாம்சங் தானே தயாரிப்புகளை ரிலீஸ் பண்ணியிருக்கணும்கிற கேள்வி இந்த இடத்தில் எழுவதை நம்மால தவிர்க்க முடியல. இதைத்தான் கலிபோர்னியா கோர்ட்டும் கெட்டியா பிடிச்சிக்கிச்சு.

ஆன்ட்ராய்ட் மொபைல்களை சாம்சங் நிறுவனம் வெளியிட ஆரம்பித்த திலிருந்தே சாம்சங்குக்கும் ஆப்பிளுக்கும் குடுமிபிடி சண்டை தான்.

ரெண்டு கம்பெனிகளும் ஒருவர் மேல ஒருவர் மாறிமாறி கோர்ட்ல வழக்குகளை போட்டுட்டு வர்றாங்க. வடிவமைப்பு (style) , முகத்திரை (user interface) என பல வகைகளில் சாம்சங் தயாரிப்புகள் எல்லாமே எங்கள் தயாரிப்பை போலவே இருக்கின்றன என்று ஆப்பிள் நிறுவனம் சாம்சங் மீது குற்றம் சாட்டி வழக்குகளை போட்டன.

பதிலுக்கு சாம்சங்கும் ஆப்பிளை கோர்ட்டுக்கு இழுத்து வருகிறது. இப்படி ரெண்டு கம்பெனிகளும் சுமார் 10 நாடுகளில் 50க்கும் மேற்பட்ட வழக்குகளை போட்டுள்ளன.
ஏன், சாம்சங் மட்டும் தான் ஆப்பிளை காப்பியடித்ததா..? மற்ற நிறுவனங்கள் காப்பியடிக்கவில்லையா..? என்ற கேள்வி எழலாம். அதெப்படி இல்லாம இருக்கும். ஆப்பிள் கம்பெனி இதேபோல ஆண்ட்ராய்ட் போன்களை தயாரித்து வெளியிடும் அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான மோட்டோரோலா மீதும் தைவானைச் சேர்ந்த எச்.டி.சி மீதும் கோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்து உள்ளது என்றாலும் ஆப்பிளின் முக்கிய எதிரி கொரிய நாட்டைச் சேர்ந்த சாம்சங் தான்.
அதற்கு முக்கிய காரணம், சாம்சங் மொபைல் சந்தையில் செலுத்தி வரும் அளவுக்கு அதிகமான ஆதிக்கம் தான்.

இதுநாள் வரையிலும் மொபைல் சந்தையில் கொடிகட்டிப் பறந்த பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியாவையே கீழிறக்கி விட்டுட்டு சாம்சங் கம்பெனி முன்னுக்கு வந்துவிட்டது. அதே நிலைமை நமக்கும் வந்து விடுமோ என்ற பயம் ஆப்பிளுக்கும் வந்ததால் தான் இப்படி ஒரு குடுமிபிடி சண்டை.

கலிபோர்னியா கோர்ட் இந்த தீர்ப்பை சொன்ன சிலமணி நேரங்களிலேயே பங்குச் சந்தையில் ஆப்பிளோட பங்குகள் அதிகரித்த அதே நேரம் சாம்சங்கோட பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தது.

ஆனால் சாம்சங் இதுக்கெல்லாம் அசர்ற மாதிரி தெரியல. காரணம் சாம்சங்கின் ஒட்டுமொத்த வர்த்தக லாபத்தில் இந்தத் அமெளண்ட் வெறும் 5 சதவீதம் தான். ஆனாலும் சாம்சங் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

அதேநேரம் ஜப்பானில் ஆப்பிளுக்கும் சாம்சங்குக்கும் இடையே நடந்த ’வீடியோ மற்றும் இசை பதிவுகளை ட்ரான்ஸ்பர் செய்து கொள்ளும் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை ஆட்டையைப் போட்டுட்டதா’ தொடர்பான வழக்கில் அந்தநாட்டு நீதிமன்றம் ’அப்படி எல்லாம் எதுவுமே இல்லை’ என்று ஆப்பிளின் வழக்கை தள்ளுபடி செய்து சாம்சங் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பு கூறியது.

இன்னும் மற்ற நாடுகளிலும் ரெண்டு கம்பெனிகளுக்கும் இடையே நிறைய வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளிலும் பெரும்பாலானவைகளில் ஆப்பிள் வெற்றி பெற்று விட்டால் நஷ்டம் யாருக்கு?

ஆப்பிளுக்கோ சாம்சங்குக்கோ இல்லை. மொபைல் கஸ்டர்மர்களுக்குத்தான். காரணம், சாம்சங் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் 5000/- ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. ஆனால் ஆப்பிள் ஸ்மார்போன்கள் அப்படி இல்லை.

அட்லீஸ்ட் 10000/- ரூபாயிலிருந்தாவது ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் தங்கு தடையின்றி கிடைக்குமா..? என்பது தான் மொபைல் ஆர்வலர்களின் மத்தியில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி..?

நியாயமான கேள்விதானே!

– செ.சக்திவேல்

என்வழி ஸ்பெஷல்
3 thoughts on “சாம்சங் vs ஆப்பிள் : காப்புரிமை சண்டை – நஷ்டம் யாருக்கு?

 1. Manoharan

  என்னதான் சாம்சங் ஆப்பிளை காப்பி அடித்தாலும் ஆப்பிளின் தரத்துக்கு ஈடு இணையே இல்லை. கடந்த நான்கு வருடங்களாக ஆப்பிள் சாதனங்களை உபயோகிப்பதால் அதன் தரம் அதிரவைக்கிறது. முதல் ஐ போன் வாங்கி இரண்டு வருடங்கள் கழித்து விற்கும் வரை வாங்கியபோது எப்படி இருந்ததோ இரண்டு வருடங்கள் கழித்தும் அப்படியே இருந்தது. பேட்டரி திறன் முதல் நாளிலிருந்து விற்கும் நாள் வரை ஒரு துளியளவு கூட குறையவில்லை. அதே போல் தொடுதிரையில் ஆப்பிளின் ரெஸ்பான்ஸ் வியக்க வைக்கிறது. I am always for Apple products.

 2. sakthi

  Yes manogaran u r correct!
  Apple is awesom!
  Waiting for iphone5 in india!
  If ve any informatiom pls let me know

 3. Sokka1288

  Yes கண்டிப்பாக நான் Samsung , Nokia , Sony Ericsson , ஆப்பிள் சாதனங்களை use பண்ணிருக்கேன் , இதில் பெஸ்ட் iPhone தான் , சாம்சுங் galaxy s கொஞ்ச நாளில் ஸ்லொவ் response ஆனால் ஆப்பிள் iphone ஸ்டில் சுபெர்ப் ஒரு ஸ்லொவ் response கூட அல்ல , காசு அதிகம் தான் ஆனால் அதற்கு ஏற்றார் போல் தரம் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *