BREAKING NEWS
Search

ராஜபக்சே வருகையைக் கண்டித்து தீக்குளித்த சேலம் ஆட்டோ டிரைவர் மரணம்

ராஜபக்சே வருகையைக் கண்டித்து  தீக்குளித்த சேலம் ஆட்டோ டிரைவர் மரணம்

சேலம்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் தமிழின உணர்வாளர். தமிழ் இயக்கங்கள் நடத்துகின்ற அனைத்து கூட்டங்களுக்கும் தவறாமல் சென்று கலந்து கொள்வார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு தமிழர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வலியுறுத்தி நேற்று அதிகாலை தீக்குளித்தார். பின்னர் தீக்காயங்களுடன் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார்.

தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்ராஜ், மகிந்த ராஜபக்சேவை தமிழர்கள் செருப்பால் அடித்து விரட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மரணத் தறுவாயிலும் அவர் நிருபர்களிடம் பேசுகையில், “இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், கனரக விமானங்கள் கொடுத்து தமிழர்களுக்கு தொடர் துரோகம்  இழைத்துள்ளது. இந்த மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த  வேண்டும். என்னுடைய உயிர் ஆயுதத்தை பார்த்து தமிழர்கள் ராஜபக்சேவை திருப்பி அனுப்ப வேண்டும்.

அதற்காகத்தான் இதை நான் செய்தேன். ராஜபக்சேவை இந்தியாவிற்குள் விடக்கூடாது. இத்தனை வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபச்சேவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. இதை பார்த்தாவது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப்  பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும்’’ என்றார் பெரும் வேதனையுடன்.

மருத்துவர்கள் அவரை பேசக்கூடாது என்று கூறியும், நான் எனது உணர்வுகளை மீடியாக்கள் மூலம் தமிழகத்துக்கு  தெரிவிக்கிறேன். என்னை பேசவிடுங்கள் என்றார்.

உயிரிழந்த விஜய்ராஜின் சகோதரர் தேவராஜ், கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர். ஆனால் விஜய்ராஜ் தாம் எந்த அமைப்பிலும் உறுப்பினர் இல்லை என்றும் தாம் அனைத்து தமிழின உணர்வு கொண்ட அமைப்பினருக்கும் ஆதரவாளன் என்றும் தமது மரண வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

-என்வழி செய்திகள்
5 thoughts on “ராஜபக்சே வருகையைக் கண்டித்து தீக்குளித்த சேலம் ஆட்டோ டிரைவர் மரணம்

 1. vasanthan

  யாருப்பா இந்த மனுசன கொளுத்தின ,இதால யாருக்கு என்ன லாபம் ,மனிதனுடைய உய்ரை வைத்து தயவு செய்து அரசியல் பண்ணாதிங்க ,,,,,

 2. மு. செந்தில் குமார்

  இந்த முட்டாள் ஜனங்களை நம்பி உயிர் துறந்து தன் கருத்தை வலியுறுத்துவதை விட உயிரோடிருந்து வலியுறுத்தி இருந்தால் – எவ்வளவு நன்றாக இருக்கும்

  (உயிர் துறப்பதை எக்காரணம் கொண்டும் என்னால் ஆதரிக்கமுடியாது – அது மேலும் பல உயிர்களை காவுகொள்ளும் என்ற அச்சத்தினாலும் கூட)

 3. chenthil UK

  அவரின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்…. அனால் இது ஒரு முட்டாள் தனமான முடிவு… அவரின் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்.. விளைமதிப்பிலாத உயிரை … கேவலம் ராஜபக்ஷே என்னும் கொடியவனுக்காக துறப்பது பாவம்… அதுவும் இந்த கேடு கெட்ட இந்திய அரசாங்கத்தில் தமிழனுகாக உயிர் விடுவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போன்றது… ஏற்கனவே காதை துணி கொண்டு மூடி தான் வச்சுருகரு பிரதமர்… இது மாதரியான சாவை தயவு செய்து யாரும் அதறிகாதிர்கள் …

 4. Krishna

  அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று அவ்வையாரின் கருத்துப்படி கிடைப்பதற்கரிய மானிடப்பிறவியை தானே துறப்பது என்பது நம்மை படைத்த இறைவனுக்கு நாம் செய்யும் துரோகம். சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற மடத்தனத்தை முத்துக்குமார் என்பவர் செய்தார். இவர்களின் இந்த செயலை வீர வணக்கம் செலுத்துவதாக சொல்லி சில செல்லாக்காசு அரசியல்வாதிகள் இது போன்ற தற்கொலைகளை நியாயப்படுத்துவது மட்டுமின்றி ஊக்காப்படுத்துவது தான் கொடுமையிலும் கொடுமை.

 5. மிஸ்டர் பாவலன்

  கிருஷ்ணா அவர்களே:

  SpiceJet (கலாநிதி மாறன்) கொழும்பு-மதுரைக்கு விமான சேவை
  துவங்கி இருப்பதை நீங்கள் கவனிக்கவும்.

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *