BREAKING NEWS
Search

சகுனி – சினிமா விமர்சனம்

சகுனி – சினிமா விமர்சனம்

டிகர்கள்: கார்த்தி, சந்தானம், பிரகாஷ் ராஜ், ப்ரணிதா, கோட்டா சீனிவாசராவ், ராதிகா
இசை: ஜிவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: பிஜி முத்தையா
தயாரிப்பு: ட்ரீம் வாரியர்ஸ்
இயக்கம்: சங்கர் தயாள்

சொந்தப் பிரச்சினை அரசியலாகும் கதை. ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கிவிட்டு பொசுக்கென்று முடிந்துபோகும் பட வரிசையில் சேர்ந்துள்ள படம் இந்த சகுனி!

ரயில்வே பாலம் கட்ட நிலத்தை கையகப்படுத்தும்போது, ஒரு வீட்டை இடிக்க வேண்டி வருகிறது. அந்த வீடு கார்த்தியுடையது. அந்த வீட்டை தன் பரம்பரை கவுரவமாக நினைப்பதால், காப்பாற்ற முயல்கிறார். அது அரசியல் மோதலாகிறது.

முதல்வர் பிரகாஷ்ராஜை வீழ்த்தி தன் வீட்டை கார்த்தி எப்படி மீட்டார் என்பது மீதிக் கதை.

கதையில் பெரிதாக குறை காண ஒன்றுமில்லை. ஆனால் அரசியல் களம் என்று வந்த பிறகு திரைக்கதை எத்தனை சுவாரஸ்ய முடிச்சுகளைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்?

இங்கே அது சுத்தமாக மைனஸ்.. கார்த்தி ராதிகாவை களமிறக்க முயலும்போதே, ‘அடுத்து ராதிகா மேயராவாங்க’ என பக்கத்து சீட் கணித்துவிடுகிறது.

ஜெயிலில் கோட்டா சீனிவாசராவை கார்த்தி சந்திக்கும்போதே, ‘இவர் சிஎம் ஆகிடப் போறார்பா…’ என்கிறது முன் சீட்!

ஜீப் வெடித்து கிரண் இறக்கும்போதே, ‘அட இது சும்மாடா… கடைசில வரும் பாரேன்’ என்கிறார் இன்னொருவர்.

‘அட போங்கப்பா… எப்படி பால் போட்டாலும் அடிச்சா என்ன பண்றது?’ன்னு சலிச்சிக்க வேணாம் டைரக்டரே… ஜனங்க தெளிவாயிட்டாங்க. நீங்க இன்னும் புத்திசாலித்தனமா காட்சிகளை வச்சிருக்க வேணாமா!

கையில காசே இல்லையாம்… ஆனா கோட் சூட்டோடு சுத்தறாராம் ஹீரோ..

சந்தானமும் கார்த்தியும் ரஜினி – கமல் என அழைத்துக் கொண்டு அறிமுகமாகும் காட்சியில் கலகல. ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் அது மகா கடுப்பை வரவழைக்கிறது. ரஜினியும் கமலும் அத்தனை சாதாரணமாகிவிட்டார்களா உங்களுக்கெல்லாம்?

இவ்வளவு பெரிய மாநிலத்தில், அத்தனை பெரிய கட்சிகளில் கார்த்தியை விட்டால் புத்திசாலி யாருமே இல்லையா… அவர் என்ன சொன்னாலும் கேட்கிற அளவுக்கு கேனத்தனமான தலைவர்களா!

சந்தானம் இருந்தாலும், காமெடி குறைவுதான். வழக்கம்போல ஹீரோ நண்பன் மூலம் அவஸ்தைப்படும் ஒரே பாத்திரத்தை இன்னும் எத்தனை படங்களில் தொடரப் போகிறீர்கள் மிஸ்டர் சந்தானம்?


படத்தில் தூரத்தில் ஒரு பெண் அடிக்கடி வருகிறார். அரை நொடியில் அவருக்கு ஒரு க்ளோசப். அப்புறம் பாடல் காட்சிகளில் ஓடுகிறார்… பெயர் ப்ரணிதா. ஹீரோயினாம்!!

ப்ரகாஷ் ராஜைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. அவர் சிஎம்மா… சிஎம் வீட்டு ட்ரைவரா என்றே தெரியவில்லை. ஏதோ பைனான்ஸ் கம்பெனி பார்ட்னர்கள் மாதிரி கிரண், சித்ரா லட்சுமணன் கோஷ்டியோடு பேசிக் கொண்டே இருக்கிறார்.

கோட்டா சீனிவாசராவ் மாதிரி எதிர்க்கட்சி  தலைவர்கள் எல்லாம் எம்ஜிஆர் காலத்தோடு அரசியலில் காணாமல் போயிட்டாங்கப்பா.

மேயராகப் பதவியேற்கப் போகும்  ராதிகா, அந்த ஸ்டேஜ் படிக்கட்டில் ஒவ்வொரு அடியாக  எடுத்து வைக்க, ப்ளாஷ்பேக்கில் அவர் இட்லி கடை ஞாபகங்கள் எட்டிப் பார்ப்பது நல்ல உத்தி!

ஜீ.வி.பிரகாஷ்குமாரின் இசை வழக்கம்போல கவரவில்லை. பின்னணி இசைக்கு வேலையில்லை என அவரே முடிவுகட்டிக் கொண்டார் போலிருக்கிறது!  பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு ஓகே.

சங்கர் தயாளுக்கு இது முதல்படம். கார்த்தியின் ப்ளாஷ்பேக், பீடி சாமியார் நெல்லி சாமியாராவது போன்ற சில பளிச் ஐடியாக்களில் பலே வாங்கினாலும், பெரும்பாலான காட்சிகளில் ‘இன்னும் உழைத்திருக்கலாம்’ என்று சொல்ல வைக்கிறார்.

சகுனிக்கு இது சறுக்கல் ஆட்டம்!

-வினோ
24 thoughts on “சகுனி – சினிமா விமர்சனம்

 1. chandra

  கொடுமையான செம மொக்கை படம். ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 2. arulselvan

  வினோ,

  உண்மை தான். படம் மரண மொக்கை.

  கார்த்திக் நடிப்பைப் பற்றி எதுவும் கூற வில்லையே?

 3. shanmugam.

  ஜீ.வி.பிரகாஷ்குமாரின் இசை வழக்கம்போல கவரவில்லை. – 100%. I dont know why people rushing to him.

 4. kabilan

  வினோ அண்ணா,க.வ.பிரகாஷ்குமாரின் இசை வழக்கம் போல் சரி இல்லை என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை .அவர் பலபடங்களுக்கு நன்றாக இசை அமைத்து உள்ளார் .இந்த படத்தில் ஒன்றும் மட்டமில்லை .ஒரு commercial படத்துக்கு என்ன தேவையோ அதை கொடுத்துள்ளார் .அவர் இசை அமைத்த படங்களான கிரீடம் ,ஆடுகளம்,மதராசபட்டினம் ,ஆயிரத்தில் ஒருவன்,மயக்கம் என்ன ,பொல்லாதவன் ,வெயில்,முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் அவர் இசை மிகவும் நன்றாக இருக்கும் .சந்தானம் சார் ah குறை சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.directors விரும்புறத அவர் குடுக்றார் .

 5. palPalani

  @kabilan: சிலசமயம் நல்ல tune மாட்டுது, சில சமயம் மாற்றது இல்லைன்னு நினைக்கிறேன். அவருக்கு புடிச்சிருக்கு, நமக்கு பிடிக்கல!

 6. enkaruthu

  இப்பொழுதுதான் பார்த்துவிட்டு வருகிறேன்.படம் சுமார்தான்.சகுனி ஆட்டம் ஆரம்பம் என்று இடைவேளையில் போடுகிறார்கள்.எதோ பயங்கரமாக விளையாட போகிறார் என்று நினைத்தால் ஏமாற்ற்றம் தான் மிஞ்சுகிறது.படம் என்னமோ மனதில் ஒட்டவில்லை.அடுத்த நகர்வுகளை எளிதாக கணிக்க முடிகிறது.சில இடத்தில வசனங்கள் பரவாயில்லை.

 7. பாவலன்

  ///படம் என்னமோ மனதில் ஒட்டவில்லை.அடுத்த நகர்வுகளை எளிதாக கணிக்க முடிகிறது./// (என் கருத்து)

  வினோவின் விமர்சனத்தில் படத்தின் முழுக் கதையும் வந்திருக்கிறது 🙂

  -பாவலன்

 8. தினகர்

  பிரகாஷ் ராஜ் தான் இந்த படத்த்திற்கே பெரிய மைனஸ். கண்ணை மூடிக்கிட்டு கேட்டா ’சிங்கம்’ படம் பார்த்துகிட்டு இருக்கோமோ என்ற நினைப்பு வருகிறது. மனுஷம் இப்படி கத்துறத நிறுத்தா விட்டால் மக்கள் அவரை பார்ப்பதை நிறுத்திவிடுவார்கள்.

  அடுத்து வரும் காட்சிகளை பக்கத்து சீட் கணித்து விடுகிறது என்பதிலேயே திரைக்கதையின் வேகம் தெரிந்து விடுகிறதல்லவா. இடைவேளைக்கு பிறகு கத்திரிக்கு கொஞ்சம் வேலை அதிகமாக கொடுத்திருந்தால் கூட கொஞ்சம் தப்பியிருக்கும்.

  ஆனாலும் ரத்தவெறி காட்டாமல், மைல்டு காமெடியாக படத்தை நகர்த்தி கொண்டு போனவர் கார்த்தி தான். அவரது அசட்டு சிரிப்பை பார்த்து கிட்டே படம் பாத்து விட்டு வந்துடலாம். அட அவரோட டான்ஸ் மூவ்மெண்ட் எல்லாம் கூட நல்லா இருக்கே..

  அடுத்த காட்சியில் என்ன ஆகும் என்றெல்லாம் யோசிக்காமல் பாத்து விட்டு வந்தால் ’பரவாயில்லை’ என்று சொல்லலாம்.
  .

 9. qad

  If rajini would have acted in this movie. Appo vimarsanam eppadi irrukkum theriyuma? …. Your guess is right

 10. தினகர்

  “If rajini would have acted in this movie ” ஏம்பா ஆர்வக்கோளாறுலே, என்ன எழுதுறோம்னு கூட யோசிக்கிறது கிடையாதா? ரஜினி அந்த காலத்திலே கூட இந்தமாதிரி படத்திலே நடிச்சது கிடையாதே.. இப்போ இந்த கதையை அவரு செக்ரட்டரி கூட கேட்பாரா?

  சகுனியால் தான் மகாபாரதம் உருவாயிற்று. அப்படி ஒரு பெயரை வைத்து விட்டு, சப்பையான திருப்பங்களை வைத்தால் பாக்கிறவங்களுக்கு ஏமாற்றம் இருக்கத்தானே செய்யும். அதைத்தானே விமர்சனத்தில் சொல்லியிருக்கிறார்.

 11. பாவலன்

  ரஜினியையும், கார்த்தியையும் ஒப்பிட வேண்டாம் நண்பர்களே..

  -பாவலன்

 12. அன்பு

  எந்திரனின் வசூலை முறியடித்த சகுனி
  http://kobirajkobi.blogspot.in/2012/06/blog-post_29.html

  Behindwoodsஇன் சறுக்கலை ஓரளவு விவரித்து இருக்கிறார்,
  இருந்தாலும் ஒரு சராசரி ரசிகனானே எனக்கே இது (தலைப்பு) பொறுக்கவில்லை, எந்திரன் எனக்கு பிடிக்காவிட்டாலும், எந்திரன் ரிலீசின் பொது queue வில் நின்ற கூடம் எங்கே?, இந்த பாப்பா சகுனி எங்கே?

  நீங்கள் தான் இந்த (காசு கொடுத்து செய்தி போடும்) தில்லுமுல்லு குறித்து விளக்க வேண்டும்

 13. enkaruthu

  //If rajini would have acted in this movie. Appo vimarsanam eppadi irrukkum theriyuma? …. Your guess is ரைட்//

  dont worry guy. thalaivar never select this type of movie.child, do you one thing thalaivar hve neglected the political based blockbuster muthalavan eventhough he knew that this movie would be rocked in future.thats our thalaivar.just close your holes and get out from making childhood comment like this.

 14. enkaruthu

  //நீங்கள் தான் இந்த (காசு கொடுத்து செய்தி போடும்) தில்லுமுல்லு குறித்து விளக்க வேண்டும்//

  நண்பரே இப்படி ஒரு செய்தி பல முறை படித்து படித்து நாங்கள் களைப்படைந்துவிட்டோம் .விடுங்கள் நண்பரே தன்னம்பிக்கை வைக்காமல் தலைவர் படத்தின் வசூலை வைத்து வியாபாரம் பண்ண நினைக்கும் ஒவ்வொருவருக்கும் கடைசியில் கிடைப்பது தோல்வியே.

 15. enkaruthu

  /நீங்கள் தான் இந்த (காசு கொடுத்து செய்தி போடும்) தில்லுமுல்லு குறித்து விளக்க வேண்டும்//

  மன்னிக்கவும் நண்பரே வேறு ஒரு நண்பருக்காக நான் போட்ட வேறு ஒரு விஷயம் உங்களுக்கான கம்மேண்டில் வந்துவிட்டது.ஆனால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக எந்திரன் உலக லெவலில் blockbuster buster படம் இல்லை என்று நீங்கள் சொன்னால் அதை ஒத்து கொள்பவன் ஒரு ஞான சூனியம் என்பது என்கருத்து .

 16. அன்பு

  ஹலோ enkaruthu என்னுடைய கருத்தை முழுமையாக புரிந்து படித்தீர்களா? எந்த இடத்தில எந்திரன் “Block Buster ” இல்லை என்று சொன்னேன் ?, சகுனி பாப்பா லாம் போட்டி ன்னு வருதேன்னு தான் எனக்கும் கோபம்,
  மற்றபடி உங்கள்
  //எந்திரன் உலக லெவலில் blockbuster buster படம் இல்லை என்று நீங்கள் சொன்னால் அதை ஒத்து கொள்பவன் ஒரு ஞான சூனியம் என்பது என்கருத்து . //
  // ஞான சூனியம்// லாம் ரஜினி பாசத்தில் கண்ணை மறைத்து வெளிப்படும் strong words
  //
  நண்பரே இப்படி ஒரு செய்தி பல முறை படித்து படித்து நாங்கள் களைப்படைந்துவிட்டோம் .விடுங்கள் நண்பரே தன்னம்பிக்கை வைக்காமல் தலைவர் படத்தின் வசூலை வைத்து வியாபாரம் பண்ண நினைக்கும் ஒவ்வொருவருக்கும் கடைசியில் கிடைப்பது தோல்வியே.
  //
  இதை ஒத்து கொள்கிறேன்
  எந்திரன் “Block Buster ” தான், அதற்கு வாரக்கணக்கில் திரை அரங்குகளில் தவமிருந்த கூட்டமே (அந்த மாதிரியான கூட்டத்தை வேறு எந்த படத்திற்கும் நான் பார்த்ததில்லை ) சாட்சி,

  ஆனால் எனக்கு பிடிகிறது , பிடிக்கவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து, இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று தான் என்னுடைய எண்ணம்.
  இனிவரும் காலங்களில் மற்றவர்கள் போடும் கருத்துரையை விரிவாக படித்துவிட்டு பதில் அளிக்கவும் நண்பரே

 17. பாவலன்

  //இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று தான் என்னுடைய எண்ணம்.//

  எல்லாப் படங்களுக்கும் இதே கருத்தைச் சொல்லலாம்.

  What is your point?

  -பாவலன்

 18. Ganesh Shankar

  “எந்திரன்” படத்தோடு சகுனி படத்தை ஒப்பிடும் அளவிற்கு சகுனி படைத்திருக்கு தகுதியே இல்லை என்று அந்த படத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்.
  இதை போய் “எந்திரன்” படத்தோடு ஒப்பிட்டு பார்ப்பது,எவ்வாறு என்று எனக்கு புரியவில்லை.
  சகுனி “Screen play” சுத்த மோசம்.ஒரு தொடர்ச்சியே இல்லை

 19. enkaruthu

  //ஆனால் எனக்கு பிடிகிறது , பிடிக்கவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து, இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று தான் என்னுடைய எண்ணம்.
  இனிவரும் காலங்களில் மற்றவர்கள் போடும் கருத்துரையை விரிவாக படித்துவிட்டு பதில் அளிக்கவும் நண்பரே//

  நண்பரே தவறாக கமெண்ட் போட்டுவிட்டேன் என்று ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன் .அப்புறம் ஏன் இந்த கொலைவெறி .நான் போட்ட கமெண்டே தப்பு என்று சொல்லும் நான் உங்களின் சொந்த கருத்துக்கு ஏன் தடையாக இருக்க போகிறேன்.

 20. qad

  aduthavan sambathipathil evalo aarvam katringa… Namba nilamaiya yocichi munneralam vanga.. Thalaivarum ithathan virumbuvaar…

 21. பாவலன்

  //நண்பரே தவறாக கமெண்ட் போட்டுவிட்டேன் என்று ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன் // (AK)

  முன்பு தினகருக்கும் எனக்கும் ஒரு கருத்துப் பரிமாற்றம் நடந்து
  ‘தவறாக கமென்ட் போட்டு விட்டேன்’ என நான் வருத்தம் தெரிவித்ததும்
  அதை திரும்ப சுட்டிக் காட்டாமல் பெருந்தன்மையுடன் விட்டு விட்டார்.
  இதே பண்பு அனைவரும் கடைப்பிடித்தால் இந்த வலைக்கு நல்லது.

  -பாவலன்

 22. பாவலன்

  //“எந்திரன்” படத்தோடு சகுனி படத்தை ஒப்பிடும் அளவிற்கு சகுனி படத்திற்குத் தகுதியே இல்லை என்று அந்த படத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்.// (கணேஷ் ஷங்கர்)

  படம் பார்த்து தான் இதை தெரிஞ்சுக்கனுமா என்ன?

  AK – என்ன சொல்றீங்க?

  -பாவலன்

 23. பாவலன்

  புதிய குறள் இரண்டு:

  என்கருத்தின் மின்கருத்தைப் படித்தற்க படித்தபின்
  உன்கருத்தை அடித்து எழுது. (P1)

  பொய்யில் பெருவலி யாவுள பாவலர்க்கு
  மெய்யின் தான்முந் துறும். (P2

  [இவற்றின் பழைய குறள்களைக் கண்டுபிடிக்கும் தமிழ் நண்பர்களுக்கு
  special பாராட்டுக்கள்! ]

  -பாவலன்

 24. மிஸ்டர் பாவலன்

  Casino Royale என்ற ஜேம்ஸ் பாண்ட் படம் பார்த்தவர்கள்
  அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லனை
  AK-47 வைத்து காலில் சுட்டு அவர் பெயரை சொல்லும்
  காட்சி படத்தின் சிகரமாக அமைந்தது. அதைப் போல் இந்த
  வலையில் எழுதும் AK என்னும் நண்பரும் நெருப்பு பறக்க
  கருத்து எழுதி கலக்கி வருகிறார்.

  -மிஸ்டர் பாவலன்

  (எப்படி ‘MP’ ஆவது என யோசித்தேன் – இதுவும் ஒரு வழி!)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *