BREAKING NEWS
Search

டியர் சச்சின்…. இனி கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் பெரிதாக இல்லை!

அன்பை எடுத்துச் செல்லும் சச்சின்…

SACHIN_141175f

34 வயதில் கபிலை ஓய்வெடுக்கச் சொல்லி அனத்தி எடுத்தார்கள். மேலும் சில ஆண்டுகள் விளையாடும் விருப்பம் அவருக்கு இருந்தாலும் அமைதியாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்தார் கபில்.. அந்த உலக சாதனையாளரை துரத்துவதிலேயே குறியாக இருந்தார்கள் மும்பைகாரர்கள்!

டெண்டுல்கருக்கு அந்த நிலை இல்லை. கிரிக்கெட்டின் அனைத்து வகை போட்டிகளிலும் 40 வயது வரை அவர் விரும்பும் அளவுக்கு விளையாட அனுமதித்தது பிசிசிஐ. ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சரியான நேரத்தில் ஓய்வை அறிவித்தார் சச்சின். இந்த வர்த்தக போட்டிகளில் அவர் தொடர்ந்ததை நாமும் எதிர்த்து எழுதியிருக்கிறோம்.

24ten2

ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் கூட சில ஆண்டுகள் அவர் விளையாடியிருக்கலாம். இன்றைய நாட்களில் டெஸ்ட் போட்டியின் அழகை இன்னும் சோபிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட ஒரே வீரர் சச்சின்தான். உலக கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்து இது.

உலக கிரிக்கெட்டில் தாதாவாக திகழ்ந்த ஆஸ்திரேலியாவை எண்பதுகளில் தனியொரு ஒரு ஆல்ரவுண்டராக அவர்கள் மண்ணிலேயே புரட்டியெடுத்தவர் கபில். அவருக்குப் பின் ஆஸ்திரேலியா பார்த்து நடுங்கிய ஒரே வீரர் சச்சின்தான். ஷார்ஜா பாலைவனப் புயலையே ஓரங்கட்டிய அபார ஆட்டத்துக்குச் சொந்தக்காரர்… யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ.. ஷேன் வார்னுக்கும் முத்தையா முரளிதரனுக்கும் சச்சின் என்ற புயலின் வீரியம் புரியும்..!

தனிப்பட்ட முறையில், கபிலுக்குப் பிறகு நான் ரசித்த வெகு சில சர்வதேச கிரிக்கெட்டர்களில் முதலிடம் ஜென்டில்மேன் சச்சினுக்கே! பண்பான மனிதன், உலகையே தலைவணங்க வைத்த உன்னத கிரிக்கெட் வீரன்…

இந்திய கிரிக்கெட்டில் சச்சின் இடம் மகத்தானது… அவர் பங்களிப்பு இன்னும் மகத்தானது, கிரிக்கெட்டின் கடவுள் என்ற மகத்துவத்தைப் பெறுமளவுக்கு!
Kapil-Dev-with-Sachin-
கபில் போனார்.. கிரிக்கெட்டை வாய்ப்பு கிடைத்தால் ரசிக்கும் மனநிலை வந்தது. சச்சின் விடை பெறுகிறார்.. இந்திய அணியின் கிரிக்கெட்டைப் பார்க்கும் விருப்பம் எதுவும் பெரிதாக இல்லை!

-வினோ

குறிப்பு: விரிவான கட்டுரை நாளை..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *