BREAKING NEWS
Search

ஒரு பிரமாண்ட வெற்றியுடன் தன் கிரிக்கெட் வரலாற்றை நிறைவு செய்தார் டெண்டுல்கர்!

ஒரு பிரமாண்ட வெற்றியுடன் தன் கிரிக்கெட் வரலாற்றை நிறைவு செய்தார் டெண்டுல்கர்!

India v West Indies 2nd Test Day 2

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் கால் நூற்றாண்டு காலம் இணையற்ற சாதனையாளராகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் இன்றைய வெற்றிகரமான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார்.

சக விளையாட்டு வீரர்கள் அத்தனைபோரும் தலைவணங்க, மொத்த ஸ்டேடியமும் எழுந்து நின்று மரியாதை செலுத்த கண்ணீருடன் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதனைகள் பல படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். சாதனைகள் படைப்பதிலேயே சாதனைப் படைத்தவர் என்று அவரைச் சொல்லலாம்.

40 வயதைக் கடந்த நிலையில், தொடர்ந்து கிரிக்கெட் விளையாடும் விருப்பம் இருந்தாலும், அணியின் நிலைமை மற்றும் விமர்சகர்களின் கருத்துகளைப் புரிந்து உள்ளூர்ப் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள், இருபது ஓவர் போட்டிகள் என கிரிக்கெட்டின் ஒவ்வொரு வகை போட்டிகளிலிருந்தும் அவர் படிப்படியாக விலகினார்.

தமது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சொல்லொனாத ஆற்றாமையைத் தந்தது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மும்பையில் தொடங்கிய சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இன்று பிற்பகலில் இந்திய அணி இப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

sachin-tendulkar-legend

இப்போட்டி முடிந்தவுடன் பிற்பகல் 11.47 மணிக்கு சக வீரர்கள் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்த சச்சின் டெண்டுல்கர் கண்ணீருடன் விடைபெற்றார். அவர் மைதானத்தை விட்டு வெளியேறிய போது இன்றைய போட்டியின் ஸ்டெம்ப்பை தன் கிரிக்கெட் சகாப்தத்தின் நினைவாக கையில் எடுத்துச் சென்றார்.

ஒட்டுமொத்த மைதானமே எழுந்து நின்று சச்சினுக்கு கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தது பார்த்த அத்தனை பேரையும் நெகிழ வைப்பதாக இருந்தது.

இந்திய கிரிக்கெட் அதன் அழகை பூரணமாக இழந்து நிற்கிறது இன்று!

என்வழி செய்திகள்




2 thoughts on “ஒரு பிரமாண்ட வெற்றியுடன் தன் கிரிக்கெட் வரலாற்றை நிறைவு செய்தார் டெண்டுல்கர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *