BREAKING NEWS
Search

சச்சின் ஓய்வு பெற வேண்டுமா? – ஆமாம் என்கிறார்கள் 57 சதவீதம் பேர்!!

சச்சின் ஓய்வு பெற வேண்டுமா? – ஆமாம் என்கிறார்கள் 57 சதவீதம் பேர்!!

டெல்லி: இந்திய கிரிக்கெட்டின் இணையற்ற வீரராகக் கருதப்படும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை நடத்திய ஆய்வில் 57 சதவீத வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் சச்சின் டெண்டுல்கர். தற்போது 39 வயதாகிறது அவருக்கு.

பொதுவாக ஒரு வீரர் 100 ரன்கள் எடுப்பதே சாதனை எனும் நிலையில், சச்சினோ நூறாவது நூறுக்காக காத்திருக்கிறார்.

இளம்வீரர்களுக்கு சாவல்விடும் வகையில் தொடர்ந்து விளையாடி வரும் சச்சின், 1989ம் ஆண்டு 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது  கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.

அதன்பிறகு 188 டெஸ்ட் போட்டிகள், 453 ஒருநாள் போட்டிகளில் சச்சின்   ஆடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 51 சதங்களும், 65 அரைசதங்களும் அடித்து உள்ள சச்சின், மொத்தம் 15,470 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 248* ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரியாக 55.44 ரன்களை வைத்துள்ளார்.

மொத்தம் 453 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின், இதுவரை 18,111 ரன்களை குவித்துள்ளார். பேட்டிங் சராசரியாக 45.16 ரன்களை வைத்துள்ள இவர், இதுவரை 48 சதமும், 98 அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 200* ரன்கள் எடுத்துள்ளார்.

கடந்த 23 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சினுக்கு, இதுவரை கிளம்பாத விமர்சனங்களும் எதிர்ப்புகளும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. காரணம் சமீபத்திய ஆஸ்திரேலிய பயணம் மற்றும் அங்கு நடக்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பி வருவதுதான்.

முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் வருவதும் போவதுமாக இருக்கும் சச்சினால் இந்த முறை பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை. இதனால் முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் சச்சினை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

டெண்டுல்களின் குருவான காவஸ்கரே, டெண்டுல்கர் ஓய்வை அறிவித்துவிடலாம் என்று கூறிவிட்டார்.

வயசாயிடுச்சில்ல… – கபில்

1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் கபில்தேவ் கூறுகையில், “சமீபத்திய நான்கு இன்னிங்ஸ்களில் 68 ரன்கள் எடுத்திருக்கிறார் சச்சின். 22 வருடங்கள் விளையாடிவிட்டார். 20 ஓவர், ஒரு நாள் போட்டிகளிலிருந்து அவர் விலகிக் கொள்வது கிரிக்கெட்டுக்கு நல்லது. இதை உலகக் கோப்பை முடிந்த உடனே எதிர்ப்பார்த்தேன். அவரது வயதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். 40 ஐத் தொட்டுவிட்டார். சச்சின் மட்டுமல்ல, திராவிட், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரும் ஓய்வை அறிவித்துவிடலாம்,” என்றார்.

முன்னாள் கேப்டன் கங்குலியும் சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முடிவை சச்சின்தான் எடுக்க வேண்டும், யாரும் அவரைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா கணிப்பு

இந்த நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் டைம்ஸ் ஆப் இந்தியா, சச்சின் ஓய்வு பெறுவது குறித்த ஆய்வு ஒன்றை வாசகர்கள் இடையே நடத்தியது. இதில் சச்சின் ஓய்வு பெறலாமா? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

பல சாதனைகளை படைத்து உச்சியில் நின்றாலும், இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், மூத்த வீரர்கள் ஓய்வு பெறுவதுதான் சரியான முடிவு. புகழின் உச்சியில் இருக்கும்போதே அவர் விலக வேண்டும் என்பதே பெரும்பான்மை வாசகர்களின் கருத்தாக உள்ளது.

சச்சினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளவர்கள், அவர் விரும்பும்வரை விளையாட விடலாம் என்று கூறியுள்ளனர்.

இதில் மொத்தம் 47,000 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். அவர்களில் 57 சதவீதம் வாசகர்கள், சச்சின் ஓய்வு பெறுவதற்கு ‘ஆம்’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

41 சதவீதம் (19,127 பேர்) ஓய்வு பெற ‘வேண்டாம்’ என்று வாக்களித்து இருந்தனர். மேலும் 2 சதவீதம் ( 817 பேர்) முடிவு எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

கபிலுக்கு நேர்ந்த அனுபவம்…

இந்தியாவின் இணையற்ற ஆல்ரவுண்டராகத் திகழ்ந்த கபில்தேவ் 1994-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இத்தனைக்கும் அந்த ஆண்டு அவர் உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். அதற்கு முந்தைய ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளரும் அவர்தான். பேட்டிங்கிலும் நல்ல பார்மில் இருந்தார் கபில்.

ஆனால் அன்றைக்கு அவரது வயது 34 ஆகிவிட்டது என்று கூறி, எப்போது ரிட்டயராகப் போகிறார் என்று முன்னாள் வீரர்கள், மீடியா போன்றவை கேள்வி எழுப்பின. இந்தக் கேள்வி எழுந்த சில தினங்களிலேயே தனது ஓய்வை அறிவித்துவிட்டார் கபில்!

-என்வழி செய்திகள்




6 thoughts on “சச்சின் ஓய்வு பெற வேண்டுமா? – ஆமாம் என்கிறார்கள் 57 சதவீதம் பேர்!!

  1. kabilan

    வினோ அண்ணா,நீங்கள் இந்த கட்டுரையை நீங்கள் எழுதுவிர்கள் என்று நினைத்து கூட பார்கவில்லை .ஏன் என்றால் நம் தலத்தில் நீங்களே தான் கபிலுக்கு செய்த அவமானத்தை சச்சினுக்கு செய்து விடாதிர்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்திர்கள் .அதில் சச்சினை யாரும் கடயபடுதி ஒய்வு பெற வைக்க கூடாது என்று வலியுறுத்தி இருந்திர்கள் .அனால் வினோ இப்போ குற்றம் சொல்லும் அனைவரும் சொல்லி கொண்டு தான் இருப்பார்கள்.சச்சின் கடிசியாக ஒரு நாள் போட்டியில் விளையாடியது உலக கோப்பையில்,அத பிறகு ஒதிகியே இருந்தார் .இளைகர்களுக்கு வாய்ப்பு அளிபதர்ககத்தான் அது .இப்பொழுது தேர்வு குழு எதற்கு அவரை தேர்வு செய்தார்கள் என்றால் ஆஸ்திரேலியாவில் அதிக முறை விளையாடியதும்,அங்கு உள்ள பிட்ச் தன்மை அதிகமாக சச்சினுக்கு தான் தெரியும் என்பதால் .டெஸ்டில் virat kohliku அடுத்த இடத்தில இருந்தார் ரன் குவிப்பில் .தற்போது கொஞ்சம் திணறி வருகிறார் ,ஆஸ்திரேலியா சென்று யார் தான் திணற வில்லை,இளம் வீரர்கள் மட்டும் என்ன செய்து கொண்டு இருகிறார்கள். அவர் அணியுடன் இருபது அணியின் மனதில் பலத்தை கூட்டும்.சுனில் கவாஸ்கர் போன்றவர்கள் எபோழுதும் இப்படித்தான் .தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் ,இல்லை கீழே போடு மிதிப்பார்கள் .அனால் நம் கிரிக்கெட் பிதாமகன் அதற்கெல்லாம் வில் பதில் சொல்லி பலகமில்லதவர்.இருபது வருடமாக கிரிக்கெட் விளையாடுகிறார் அனால் யாரை பற்றியும் பிரஸ் மீதிலோ மத எதிலும் குறை கூறாதவர் .எவளவோ வீரர்களை சந்தித்து உள்ளார் .ஆனால் இப்ப வந்த வீரர்களுக்கு பிரஸ் யில் பேச கூட தெரியவில்லை.அவரிடம் இருந்து இளம் வீரர்கள் கற்று கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.அவரை விடுங்கள் ,இப்படி பட கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர் .பெசுபர்வர்களும்,பேசிக்கொண்டு இருபர்வகள் மூஞ்சில் கூடிய சீயகிரம் கறியை பூசுவர் .அவரை அவனபடுதுவதை நிறுத்துங்கள் இது என்வழி மூலமாக நான் வைக்கும் வேண்டுகோள்.இங்கே கமெண்ட் போடுபவர்களும் அவர் இது நாள் வரையில் அணிக்கு சேதத்தை நினைத்து பார்த்து பதியுங்கள்.இந்த ஒரு series மட்டும் விடுங்கள்.அவர் நமக்கு தேவை .அந்த நல்லவர் மனதை நோகாடிகதிர்கள் .
    இப்படிக்கு
    தலைவர் ரஜினி
    சச்சின் ரசிகன்

  2. Manoharan

    முதலில் ஒன்று : சச்சினை யாரும் டெஸ்ட் கிரிகெட்டிலிருந்து ஒய்வு பெருமாறு சொல்லவில்லை. எல்லோரும் சொல்வது அவர் ஒருநாள் போட்டியிலிருந்து ஒய்வு பெறவேண்டும் என்பதுதான். எப்போதுமே முன்னாள் வீரர்களுக்கு தற்போது விளையாடும் வீரர்களை பற்றி பேசுவதுதான் வேலையே. அது கபிலாகட்டும் இல்லை கங்கூலி ஆகட்டும். இவர்களையும் இந்த பத்திரிக்கைகளையும் விட்டு தள்ளுவோம்.
    சச்சினை பற்றி மட்டும் பார்ப்போம். அதாவது இந்த தொடரில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக சச்சின் ஒய்வு பெறவேண்டும் என்று சொன்னால் அவருக்கு முன் சேவாக், ரோகித் சர்மா,சுரேஷ் ரெய்னாவை ஒய்வு பெற சொல்லட்டும்.
    ஆனால் ஒன்று ,சச்சின் ஒருநாள் போட்டியில் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை தேர்வாளர்களிடம் தெரியப் படுத்த வேண்டும். ஏன் என்றால் அவர் எல்லா போட்டிகளிலும் விளையாடுவதில்லை. பல மாதங்களுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகள் பங்கேற்கும் போட்டிகளில் மட்டும் விளையாடுகிறார். அவரது எண்ணம் 2015 உலக கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பதாக இருந்தால் அதற்க்கு இது சரி. ஆனால் அப்படி ஒரு திட்டம் இல்லை என்றால் அவர் அனைத்து போட்டிகளுக்கும் தன்னை available ஆக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் வருவதும் போவதுமாக இருந்தால் அது அவரை மட்டுமல்ல மற்ற வீரர்களையும் பாதிக்கிறது. கம்பீருக்கு தான் தொடக்க ஆட்டக்காரரா அல்லது முதல் டவுனா என்பது இன்னும் தெளிவில்லை. ஒருநாள் போட்டியில் இன்னும் ஒரு சதம் எடுத்தால் சச்சினின் ஒரு நாள் சாதனைகள் பூரணம் அடையும். அதை உடைக்க இன்றைய வீரர்கள் யாராலும் முடியாது. 18000 ரன்களும் 50 சத்தங்களும் அடிக்க இன்னொருவர் பிறக்க வேண்டும். ஆகவே சச்சின் தனது நிலையை தேர்வாளர்களிடம் தெரியப்படுத்திவிட்டு அதன் படி செயல்பட்டால் அது அவர்க்கும், இந்திய அணிக்கும் மிகவும் நல்லது. வாழ்க்கையில் சாதனையின் உச்சத்தை அடைந்தவர்களுக்கு அடுத்து என்ன என்கிற தெளிவு ஏற்ப்படும் வரை தற்போதைய நிலையை விட மாட்டார்கள். இது ரஜினிக்கும் பொருந்தும் அடுத்தது என்ன என்பதை முடிவு செய்யாத ரஜினி சினிமாவில் தன்னுடைய உச்சத்தை இழக்க விரும்பவில்லை. அதுவரைக்கும் அவர் நடித்துக் கொண்டேதான் இருப்பார். அடுத்தது என்ன என்பது முடிவானால் அவர் நடிக்க மாட்டார். MGR சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலிலும் உச்சத்தை அடைந்து விட்டார். அதனால் அவருக்கு சினிமாவை துறப்பது எளிதானது. சச்சினுக்கும் , ரஜினிக்கும் அப்படியில்லை. ஆனால் ஒரு சென்சுரியுடன் சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடை பெற வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஆசை. ஆனால் வரும் போட்டிகளில் அவர் ஒரு சதம் அடித்தால் கூட அனைவரும் தங்கள் கருத்தில் பல்ட்டியடிப்பார்கள். ஏனெனில் இந்தியர்கள் ஒரு Emotional Idiots.

  3. kabilan

    மனோகரன் சார்,கரெக்ட் சார்.அதுவும் கடைசியில் ஒரு வரி சொல்லி இருகிறிர்களே அது மிகவும் சரியான சொல்

  4. i.suyambu

    சச்சின் 100சதம் அடித்ததும்ஓய்வுபெறுவதாகசொன்னாராஒருதொடரில்நல்லாவிளையாடவில்லைஎன்றால்ஓய்வுபெறுவதா

  5. tharma

    என் தலைவரை பத்தி யாரும் இங்கு குறைகூரதிர்கள் ……………..அவர் விளையாடி கொண்டை இருக்கவேண்டும் …………….. அவர் விளையாடவில்லை என்றால்…………… என்னால் தாங்கமுடியாது ……….
    கண்டிப்பா கண்ணீர்விடுவேன் ………………….
    தயாவ் செய்து யாரும் அவரை விலகவேண்டும் என்று சொல்லாதிர்கள் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *