BREAKING NEWS
Search

கோப்பையை வென்ற சந்தோஷத்துடன் ஐபிஎல் & டி ட்வென்டி போட்டிகளிலிருந்து சச்சின் ஓய்வு!

கோப்பையை வென்ற சந்தோஷத்துடன் ஐபிஎல் & டி ட்வென்டி போட்டிகளிலிருந்து சச்சின் ஓய்வு!

sachin-t20

மும்பை: ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் மும்பை அணி கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்த முடிவை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று கொல்கத்தாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதலாவது சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

இந்த வெற்றியை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் விளையாடி வந்த சச்சின் டெண்டுல்கர் ஐ.பி.எல். விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில், “உலகக் கோப்பையை பெறுவதற்கு நான் 21 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. ஆனால், இந்த ஐ.பி.எல். கோப்பையை நான் 6 ஆண்டுகளிலேயே பெற்றுவிட்டேன்.

எனவே இந்த நல்ல தருணத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுகிறேன். அடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நான் விளையாட மாட்டேன். இது நான் ஏற்கெனவே எடுத்த முடிவு. நாற்பது வயதாகிவிட்டது எனக்கு. நிஜத்தை நானும் உணர்கிறேன்,” என்றார்.

ஏற்கெனவே ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்துவிட்டார் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இனி ஆடுவார்.

-என்வழி




4 thoughts on “கோப்பையை வென்ற சந்தோஷத்துடன் ஐபிஎல் & டி ட்வென்டி போட்டிகளிலிருந்து சச்சின் ஓய்வு!

  1. Raj

    இதெல்லாம் சச்சினின் பித்தலாட்டம். எங்கே தன் மீது சூது பழி விழுந்து விட்டால் இது வரை விளம்பரங்களில் ஆடி (நடித்து) சேர்த்த சொத்து பறிபோகலாம் என்று பயந்து விலகியிருக்கிறார் அவ்வளவுதான்.

  2. m.saro

    ராஜ் நீ என்ன பாகிஸ்தான் காரனா சும்மா தெரியாம யாரையும் தப்பா பேசாதா மனிதனின் நாக்கில் நரம்பு இல்லை என்று சொல்வார்கள் அது நால என்ன வேண்டுமானாலும் பேசாத உன்ன மாதிரி ஆட்கள் இருப்பபதனால் தான் நாடு இப்படி உள்ளது நல்ல விசியங்களை நினைத்து பேச பழகுங்கள்

  3. shanmugsundharam

    Raj says:
    இதெல்லாம் சச்சினின் பித்தலாட்டம். ………………….///

    எழுத அனுமதி இருக்கிறது என்பதற்காக எதையும் யோசிக்காமல் எழுதாதீர்கள் நண்பரே. உங்கள் எழுத்துக்கள் சில சமயம் உங்களின் குணத்தினையும் பிரதிபலிக்கும். (அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்று ஒரு தகவலும் இல்லை. அப்படி இருந்தால் கூட அதை பற்றி எழுதலாம்.).
    ரஜினி ரசிகர்களின் வலை தளத்தில் சச்சினை பற்றிய இந்த கருத்து தேவை இல்லாத ஒன்று.
    ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள். வீண் பழி வேண்டாம். அது உங்களை திருப்பி தாக்கும் போது தான் அதன் வலி புரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *