BREAKING NEWS
Search

ரஜினிக்கு எதிராக பேசச் சொன்ன தந்தி டிவி… மறுத்த எஸ்வி சேகர்!

ரஜினிக்கு எதிராக பேச அழைத்த தந்தி டிவி… மறுத்த எஸ்வி சேகர்!

sve sekar

ஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று சொல்வது விளம்பரத்துக்காகத்தான் என்று பேசுமாறு கூறிய தந்தி தொலைக்காட்சிக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் எஸ்வி சேகர்.

லிங்கா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி முதல்வராகி தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இயக்குநர் அமீர் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். அதற்கு பதிலளித்த ரஜினி, சூழ்நிலை அப்படி அமைந்தால் நான் மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன் என்று பதிலளித்தார்.

இது தமிழக அரசியல் மற்றும் மீடியா வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. கடந்த மூன்று தினங்களாக இதுதான் பேசுபொருள் என்றாகிவிட்டது.

தொலைக்காட்சிகளில் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன.

தந்தி தொலைக்காட்சியில் ரஜினி அரசியலுக்கு வருவதாகக் கூறியது விளம்பரத்துக்காகவா என்ற தலைப்பில் விவாதம். இதில் பேச வருமாறு நடிகர் எஸ்வி சேகரை அழைத்துள்ளனர்.

அவரும் சம்மதம் சொல்ல நினைத்த கணத்தில், அடுத்து ஒரு கண்டிஷன் போட்டார்களாம் தொலைக்காட்சிக்காரர்கள்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்பது வெறும் விளம்பரத்துக்காகத்தான் என்றுதான் நீங்கள் பேச வேண்டும் என்றார்களாம். உடனே மறுப்பு தெரிவித்த சேகர், அதுக்கு வேற ஆளைப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து எஸ்வி சேகர் கூறியுள்ளதாவது:

ஒரு (தந்தி) தொலைக்காட்சியில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி பேசியது விளம்பரத்துக்காகவா என்ற தலைப்பில் என்னை பேச அழைத்தார்கள். உடனடியாக ‘விளம்பரத்துக்காகத்தான்’ என்றே பேச வேண்டும் என்றும் சொன்னார்கள். அதுக்கு உங்ககிட்ட சம்பளம் வாங்கற ANCHOR ஐ பேசச் சொல்லுங்க. நான் என் கருத்தைத் தான் சொல்லமுடியும். அதனால் வரமுடியாது என சொல்லி விட்டேன்.”

யார் முதல்வர் ஆனாலும் அவர்களின் சார்பெடுத்து செய்தி வெளியிடும் தந்திக்கு எதற்கு இந்த வேலை!

-என்வழி




6 thoughts on “ரஜினிக்கு எதிராக பேசச் சொன்ன தந்தி டிவி… மறுத்த எஸ்வி சேகர்!

  1. மிஸ்டர் பாவலன்

    எஸ். வி. சேகர் அவர்களின் நேர்மையை பாராட்டுகிறேன்!

    அவரது முதல் திரைப்படம் கமல்-ரஜினி நடித்த “நினைத்தாலே இனிக்கும்”.
    அவருக்கு என்ன வேடம் என்பதை ரசிகர்களே நினைவு கொள்ளட்டும்!
    “மிஸ்டர் பாரத்” படத்தில் ரஜினியுடன் சிறிய வேடத்தில் சேகர் நடித்தார்..
    கமல் கூட “சிம்லா ஸ்பெஷல்” என்ற படத்தில் பெரிய வேடத்தில் நடித்தார்.
    கிட்டத்தட்ட ஒரு “வில்லன்” வேடம்.. ‘உனக்கென்ன மேலே நின்றாய்” என்ற
    கமல் கிளாசிக் பாட்டு இந்தப் படத்தில் தான்.. நன்றி!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  2. குமரன்

    //// யார் முதல்வர் ஆனாலும் அவர்களின் சார்பெடுத்து செய்தி வெளியிடும் தந்திக்கு எதற்கு இந்த வேலை!///

    கேள்வியிலேயே பதில் இருக்கிறது.

    மக்களின் முதல்வர் என்று கூறிக் கொள்ளும் ஜெயாவுக்கு ஆதரவுதான். வேறென்ன?

    ரஜினி அரசியலுக்கு வரவிடாமல் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் ஜெயா-சோ கும்பலும், கருணா-வீரமணி கும்பலும் செய்யும்.

  3. Kalidass

    அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். தலைவரை சுற்றி அரசியல் மேகம் சூழ்ந்தது 1995ல் நடந்த பாட்சா வெற்றி விழாவிற்கு அப்புறம் தான் என்று சொன்னார்கள், அது தவறு. மனிதன் படம் வந்த சமயத்தில் இருந்தே தலைவர் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு வந்துவிட்டது. அந்த படத்தின் வெற்றிவிழாவில் தலைவர் சொன்னது நான் அரசியலுக்கு வரமாட்டேன். ஆனால் பாட்சா வெற்றி விழாவில் நடந்தது வேறு. அரசியல் வேண்டாம் என்று சொன்ன தலைவரை அரசியல் பேசவைத்தது சூழ்நிலை. அந்த சூழ்நிலை இல்லை என்றால் தலைவர் அரசியல் பேசிஇருக்கவே மாட்டார். இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று மனிதன் பட சமயம் தலைவர்கூட நினைத்திருக்க மாட்டார். இதைத்தான் தலைவர் இப்பொழுதும் சொல்கிறார். தலைவர் குழம்பவில்லை, யாரையும் குழப்பவுமில்லை. பத்திரிக்கைகள்தான் மக்களை குழப்புகிறது. முன்பு ஒரு சாணி(சரிதான்) தலைவர் படம் ஓட இதுமாதிரி பேசவேண்டும் இல்லை என்றால் ஓடாது என்றார். அதற்கு அப்புறம் தான் சந்தரமுகி, சிவாஜி, எந்திரன் கோச்சடையான் போன்ற வெற்றி படங்களை கொடுத்தார்.

  4. srikanth1974

    திரு.மிஸ்டர் பாவலன் சார் அவர்களுக்கு வணக்கம்’
    நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் திரு.எஸ்.வி.சேகர் அவர்கள் ஒரு
    ஆடியோ கேசட் கடையில் வேலை பார்ப்பவராக நடித்திருப்பார்.படத்தில்
    ரஜினிக்கு ஒரு பெண்ணிடமிருந்து கேசட் பரிசாக வரும் அந்தப்பெண்
    கேசட்டில் என்ன பேசினார் என்பது தெளிவாகப்புரியாது என்ன பேசினார்
    என்பதை எஸ்.வி.சேகர் அவர்கள் ரஜினிக்கு விளக்கிக்கூருவார்.

    அன்புடன் தங்கள் சகோதரன்
    ஸ்ரீகாந்த்.ப

  5. மிஸ்டர் பாவலன்

    நண்பர் குமரன் அவர்கள் சோ அவர்களை JJ-ஆதரவாளர் என
    மறைமுகமாக பல பதிவுகளில் குறிப்பிட்டு வருவது எனக்கு
    மிக அதிர்ச்சியாக உள்ளது. சோ பல மீட்டிங்குகளில் தன்னை
    ‘நடுநிலையாளர்’ என்றும், துக்ளக்கை ஒரு “நடுநிலை, நாணய
    அரசியல் வார இதழ்” எனவும் சொல்லி வருவதை நான் இங்கு
    சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன்! நன்றி!

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *