BREAKING NEWS
Search

தலைவா, இன்னும் நூறாண்டுகள் வாழுங்கள்.. எங்களை ஆளுங்கள்!

தலைவா, இன்னும் நூறாண்டுகள் வாழுங்கள்.. எங்களை ஆளுங்கள்!

Lingaa -1 Thalaivar-solo copy

லைவர் ரஜினி பிறந்த நாள்… எப்போதும் நள்ளிரவில் அவருக்கு என்வழியில் வாழ்த்துச் சொல்வது வழக்கம். இப்போது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் என்று தளங்கள் மாறிவிட்டன. இவற்றில்தான் முதல் வாழ்த்தைப் பகிர்ந்தேன். என்வழியில் அவரது இந்த பிறந்த நாளில் நாம் அனுபவித்ததை எழுதலாம் என்று விட்டுவிட்டேன்.

முன்பு தலைவரின் பிறந்த நாளன்று பெரும்பான்மை ரசிகர்களும், ஓரளவு பொதுமக்களும் பங்கேற்று வந்தனர். கடந்த மூன்றாண்டுகளாக தலைவர் பிறந்த நாள் மாநில, தேசிய, உலகளாவிய கொண்டாட்டங்களாகிவிட்டன.

அனைத்துக் கொண்டாட்டங்களையும் செய்தியாகத் தருவதே பெரும் சவாலாகிவிட்டது இந்த ஆண்டுகளில். மூலை முடுக்கெங்கும் சிறுசு முதல் பெருசு வரை ‘ஹேப்பி பர்த் டே டு யு தலைவா’ என்ற வாழ்த்தொலி முழங்குவதைக் கேட்டு மனசு பரவசமடைகிறது. ஊடகங்கள் முதல் பக்கத்தில் அவர் படத்தை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கின்றன. திரைத்துறையினர் தங்கள் விளம்பரங்களில் தலைவர் படத்தைப் போட்டு வாழ்த்துக் கூறி விளம்பரம் தேடுகின்றனர்.

பிறந்த நாளாக மட்டும் இருந்தால் பரவாயில்லை.. இந்த முறை உலகமே எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அவரது லிங்கா படமும் வெளியாவது உற்சாகம், கொண்டாட்டங்களின் உச்சத்துக்கே கொண்டு போக வைத்துவிட்டது ரசிகர்களையும் அவரை நேசிப்பவர்களையும்.

விளைவு, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி நிஜமாகவே தீபாவளி, பொங்கலைப் போல ஒரு பெரும் திருவிழாவாக மாறிவிட்டது. வேலைக்குச் செல்லும் பலர் ‘இன்று தலைவர் ரஜினி பிறந்த நாள், லிங்கா ரிலீசாகுது.. லீவு வேணும்’ என்று கேட்டு விண்ணப்பித்ததை என்னவென்பது! உலகின் எந்தத் தலைவருக்கும், கலைஞருக்கும், மனிதருக்கும் வாய்க்காத பெருமை இது!

தனியார் நிறுவனங்கள், கார் உற்பத்தியாளர்கள், கணிப்பொறி கார்ப்பொரேட்டுகள், அட.. தலப்பாக்கட்டி பிரியாணிக் கடை உள்பட எங்கும் தலைவர் ரஜினியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்தான்.

12-1418386382-super-star-contest-600

இந்தப் பரவசத்தை அனுபவிக்கக் கூட நேரமின்றி அந்த செய்திகளை எழுத வேண்டியுள்ளது!

தொலைக்காட்சிகள் ரஜினியின் பிறந்த நாளையும் லிங்கா வெளியீட்டையும் கொண்டாடிய விதத்தை என்னவென்பது.. எதையென்று எழுதுவது?

இந்த டிசம்பர் மாதம் முழுவதும் ரஜினி படங்கள், கடந்த ஒரு வாரமாக ரஜினி சிறப்பு நிகழ்ச்சிகள் என அமர்க்களப்படுத்திக் கொண்டுள்ளன.

குறிப்பாக டிசம்பர் 12-ம் தேதி முழுக்க தலைவர் படங்கள்தான் கேடிவியில். உலகம் முழுவதும் நம் தலைவரின் பிறந்த நாளை மக்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது இந்த சேனல். அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, கனடா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, பிரான்ஸ். ஸ்விஸ், வளைகுடா நாடுகள் என அத்தனை நாடுகளில் உள்ள தமிழர்களும் தங்களின் அடையாளமாகக் கொண்டாடினர் ரஜினி பிறந்த நாளை.

வட இந்திய சேனல்கள் வழக்கம் போல தலைவரின் பிறந்த நாள் ஸ்பெஷல் செய்தித் தொகுப்புகள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர்.

40 முதல் 50 வயதுகளில் உள்ள ஆரம்ப ரஜினி ரசிகர்களை விட, இந்தத் தலைமுறையினர் அவர் பிறந்த நாளையும் லிங்காவையும் கொண்டாடிய விதம் இருக்கிறதே.. மெய் சிலிர்க்கிறது. ஒரு தெய்வத்துக்கு செலுத்தும் மரியாதைக்கு நிகரான அர்ப்பணிப்புடன் அவர்கள் தலைவர் ரஜினியைக் கொண்டாடிக் கொண்டுள்ளனர். நேற்றும் இன்றும் பல்லாயிரம்… ஏன் லட்சக்கணக்கில் கேக்குகளை வாங்கி வெட்டிக் கொண்டாடியுள்ளனர் ரஜினி பிறந்த நாளை. நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறதல்லவா?

காலத்தை வென்ற ஒரு உன்னத மனிதன், அரசியல் மாச்சர்யங்கள் தாண்டிய பெரும் தலைவர், பிறந்த தேசத்தின் பெருமையை உலகமெங்கும் எடுத்துச் சென்ற ஒப்பற்ற கலைஞரான சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று காலம் தந்துள்ள இடம்… உச்சம், இதற்கு மாற்றாக இன்னொரு வார்த்தையைத் தேட முடியாது!

ரஜினி என்ற ஒரு வார்த்தையை உச்சரிக்கும்போதே எத்தனை சந்தோஷம்.. இப்படி ஒரு மகத்துவம் வேறு எந்தப் பெயருக்காவது வாய்த்திருக்கிறதா!!

அன்புத் தலைவா… இன்னும் நூறாண்டுகள் இதே உச்சத்தில் வாழுங்கள்.. எங்களை ஆளுங்கள்!

வினோ
-என்வழி
7 thoughts on “தலைவா, இன்னும் நூறாண்டுகள் வாழுங்கள்.. எங்களை ஆளுங்கள்!

 1. kabilan.k

  சத்தியமா அழுது கொண்டு இருக்கிறேன் வினோ அண்ணா….என் உடம்பு தானாகவே புல் அரிக்குது இந்த பதிவ படிக்கைல…அதுவும் கடைசி வரி இருகிறதே…..அண்ணா அவர் தெய்வம்….தலைமுறை வென்ற கலைஞன்….இன்று காலை ஏழு மணி காட்சி முடித்துவிட்டு வெளியே வண்டி எடுக்க வந்தேன்…அப்போது அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு இருந்த 40-45 மதிக்க தக்க ஒரு நபர் தனது மகளுடன் நின்று கொண்டு இருந்தார்..அவள் சிறிய பெண் தான், அந்த பெண்ணும் மாலை போட்டு இருந்தாள்..ஐந்தாவது ஆறாவது படிக்கும் பெண் ..இண்டெர்வலில் வெளியே வந்தபோதே பார்த்தேன்…அவர்களின் நிலையை வைத்து பார்த்தல் பொருளாதாரத்தில் கொஞ்சம் பின் தங்கியவர்கள் என்று தெரிந்தது…வண்டியை எடுத்த கொண்டு வெளியேறும் அனைவர்க்கும்…ஒரு ருபாய் மிட்டாயை அள்ளி கொடுத்து கொண்டு இருந்தார்…என்ன அண்ணன் தலைவர் பிறந்த நாளுக்கா என்று சும்மா என்னிடம் மிட்டாய் குடுக்க வரையில் கேட்டேன்…சிரித்து கொண்டே ,ஆமான்பா என்றார்…புல் அரித்துவிட்டது….
  அந்த மாமனிதனுக்கு இன்னும் அன்பு மாறாமல் எத்துனை ரசிகர்கள்,அவர் வழியில் அவர் தலைவர் பிறந்தநாளை கொண்டாடுகிறார்……..
  இந்த எளிய,அன்பை வாரி வழங்கும் மனிதர்கள்,ரசிகர்கள் மனதில் அந்த மாமனிதர் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்றென்றும்….

 2. D.Elango

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என் அன்புத்தலைவா…

 3. கிரி

  தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

  தலைவர் பண்டிகை நாளில் தனது படத்தை வெளியிடவில்லை ஆனால், அவர் படம் வெளியாகும் நாளே பண்டிகை நாளாகி விடுகிறது. இது எவருக்கு சாத்தியம்!!

  தலைவரின் நல்ல மனசு போல என்றும் நிம்மதியுடனும் சந்தோசத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

 4. Saravan

  Nice post…. Happy birthday and long live thalaiva!!
  The only person who can create such an euphoria and hysteria among millions is YOU
  Wishing u good health peace and happiness Always

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *