BREAKING NEWS
Search

திருப்பூரில் ரூ 14 கோடி நகைகள் கொள்ளை – இன்று அதிகாலை நடந்த துணிகரம் !

திருப்பூரில் ரூ 14 கோடி நகைகள் கொள்ளை – இது லேட்டஸ்ட்!

திருப்பூர்: திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடை சுவரை ஓட்டை போட்டு நுழைந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த ரூ. 14 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நேற்று நள்ளிரவு, அதாவது செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த திருட்டு நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் குமரன் சாலையில், போலீஸ் நிலையத்துக்கு எதிரிலேயே உள்ளது இந்த நகைக் கடை.  ஏகப்பட்ட கிளைகள் கொண்ட நிறுவனம் இது.

இந்த கொள்ளை குறித்து போலீசார் கூறுகையில், ‘ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் இன்று அதிகாலை ஒரு கும்பல் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே புகுந்துள்ளது. பின்னர் கடையில் இருந்த ரூ. 14 கோடி மதிப்புள்ள 45 கிலோ தங்க, வைர நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பி விட்டனர். கடையில் இருந்த மொத்த நகைகளையும் திருடர்கள் திருடிச் சென்று விட்டனர்.

இந்த நகைகளில் 3 கிலோ வைர நகைகளும் அடக்கம். தடயங்களைத் தேடி வருகிறோம். மோப்ப நாய் சிறிது தூரம்தான் சென்றது. அதன் பிறகு திரும்பி வந்துவிட்டதால், கொள்ளையர்கள் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியவில்லை,” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மொத்த கடையையே கொள்ளையர்கள் சூறையாடி விட்டதால் கடை உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்துள்ள நான்காவது மிகப்பெரிய கொள்ளை இது.

சில மாதங்களுக்கு முன்புதான் திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தது ஒரு கும்பல்.

அடுத்து சென்னை பேங்க் ஆப் பரோடா கிளையில்ல் நடந்த கொள்ளை.  முத்தூட் பைனான்ஸ், பேங்க் ஆப் பரோடா கொள்ளைகளையே இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், நேற்று பட்டப்பகலில் கீழ்கட்டளை இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியிலும், இன்று அதிகாலை ஆலூகாசிலும் பெரும் கொள்ளை நடந்திருப்பது தமிழகத்தை அதிரவைத்துள்ளது.

நேற்று மட்டுமே மேலும் 6 கொள்ளைகள்..

ந்த பெரிய கொள்ளைகள் தவிர, நேற்று ஒரே நாளில் மாநிலத்தின் ஆறு  வெவ்வேறு இடங்களில் சிறியதும் பெரியதுமாக கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

1.சென்னை சேலையூரில் பைசல் என்ற முஸ்லிம் வீட்டில் ரூ 15 லட்சம் மற்றும் 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

2.காரைக்குடியை அடுத்த சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த அழகு மீனாள் மற்றும் அவர் தாயார் செல்லம்மாள் ஆகியோரின் இரண்டு தங்கச் சங்கிலிகளை திருடர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

3.நரிக்குடி அருகில் வீரசெவல்பட்டியைச் சேர்ந்த பிச்சை என்பவரின்  அடகுக்கடையில் நேற்றிரவு சில மர்ம நபர்கள் புகுந்து 15 பவுன் நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

4.கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகரை சேர்ந்த ட்யூஷன் டீச்சர் கலாவிடம் 5 சவரன் தங்கச் சங்கிலி களவாடப்பட்டது.

5.காஞ்சிபுரத்தில் உள்ள பரஞ்ஜோதி அம்மன் கோவில் மற்றும் செல்வவிநாயகர் சன்னதி சுவரில் பதிக்கப்பட்டிருந்த உண்டியலை பெயர்த்தெடுத்து கொள்ளையடித்துள்ளனர் சில கொள்ளையர்கள்.

6. மதுரை வண்டியூர் அருகே நேற்று ஒரே இரவில், அடுத்தடுத்த வீடுகளில் இருந்து 42 பவுன் நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

-என்வழி செய்திகள்

 
9 thoughts on “திருப்பூரில் ரூ 14 கோடி நகைகள் கொள்ளை – இன்று அதிகாலை நடந்த துணிகரம் !

 1. RAJAN

  ஆல்லுகஸ் திருப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ளது .

 2. M.SARO

  வடிவேல் காமெடி மாதிரி கிணத்தை காணோம் என்று வடிவேல் சொன்னதுபோல கொஞ்ச நாட்களில் தமிழ்நாட்டை காணோம் என்ற நிலை உருவாக போகின்றது !ஹி ஹி ஹி ஹி ஐயோ ஐயோ

 3. ஜெயன்

  அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கும்.. யாரோ எப்போவோ சொன்னது..Joke of the year …

 4. Manoharan

  திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு நேர் எதிரே உள்ள கடை இது. திருடர்களுக்கு அதுதான் வசதியாக போய்விட்டது. இத்தனைக்கும் அது அகலமான ரோடு கிடையாது. 60 அடி அகலம் உள்ள ஒருவழிப்பாதை. திருப்பூர் SP office, Ladies police station, Court என்று அத்தனையும் நேர் எதிர் உள்ள இடம். திருப்பூரில் தொழில் நிலை சரியில்லாத நிலையில் கொள்ளை சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டது. இந்தியாவிலேயே நடந்த நகை கடை கொள்ளையில் இதுதான் பெரியது என்கிறார்கள். இதுதான் சாதனையா…?

 5. ravindran

  ஓசூரில் தினமும் குறைந்தது 3 கொள்ளை சம்பவம் நிகழ்கிறது

 6. தினகர்

  “அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கும்.. யாரோ எப்போவோ சொன்னது ”

  அப்படி சொன்னவரே இப்போ விளக்கமும் சொல்லலாமே 🙂

 7. தினகர்

  “இதுதான் பெரியது என்கிறார்கள். இதுதான் சாதனையா…?”

  சங்கரன்கோவில் வரை இது கேட்குமா?

 8. Anbudan Ravi

  வெளியே மக்களின் வரிப்பணம் போதாதென்று இப்போ வீடு புகுந்தும் கொள்ளை அடிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? மிக்க மகிழ்ச்சி.

  அன்புடன் ரவி.

 9. சேகரன் (சிங்கப்பூர்)

  அம்மா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கும்.
  ஆனாலும் குண்டர்களைப் பிடித்து உள்ளே போட்டால்
  கோர்ட் அவர்களை விடுதலை செய்து விடுகிறது.
  திருடு யார் செய்தார்கள் என்பது விரைவில் காவல்
  துறை கண்டுபிடித்து அம்மா நல்ல நடவடிக்கை எடுப்பார்.

  கடை மூடும் போது ஷோகேஸ்ல் உள்ள நகைகள்
  அனைத்தையும் லாக்கரில் வைத்து பூட்டி விட்டுத்தான்
  கடை மூட வேண்டும் என்பது எல்லா நகை கடைகளும்
  உள்ள விதி. விதியை மீறினால் ஏற்பட்ட விளைவு தான் இது.
  Close Circuit TV-யும் switch off செய்யப்பட்டிருக்கிறது.
  நகைக் கடைகளுக்கு போதுமான செக்யூரிட்டி வேண்டும்.
  போலீஸ் கான்ஸ்டபில் கடை வாசலில் காவல் நிற்க முடியாது.

  உள்ளுக்குள் வேலை செய்யும் நபர் உதவியின்றி கொள்ளை
  நடக்க வாய்ப்பு இல்லை.

  -சேகரன் (சிங்கப்பூர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *