BREAKING NEWS
Search

மலேசியாவில் மையம் கொண்ட கபாலி புயல்… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரமாண்ட வரவேற்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரமாண்ட வரவேற்பு!

10406490_982269695126530_5808308954853776988_n

கோலாலம்பூர்: கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிரமாண்டமான வரவேற்பு தரப்பட்டது. ஏராளமான தமிழர்கள், மலேசியர்கள் திரண்டு வந்து ரஜினிக்கு பூங்கொத்துகள் கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் வரவேற்பு தெரிவித்தனர்.

இதுவரை எந்தத் தமிழ் நடிகருக்கும், அரசியல் தலைவருக்கும் கிடைக்காத வரவேற்பு இது என மலேசிய பத்திரிகைகள் வியப்பு தெரிவித்துள்ளன.

பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படப்பிடிப்பின் முதல் கட்டம் சென்னையில் நடந்துமுடிந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஜினியும் தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினரும் நேற்று மலேசியா சென்றனர்.

விமான நிலையத்தில் ரஜினிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசிய போலீசார் மற்றும் பாதுகாப்பு குழுவினர் புடைசூழ ரஜினி கம்பீரமாக நடந்து வர, விமான நிலையத்துக்கு வெளியே ஏராளமான தமிழர்களும் மலேசிய மக்களும் குழுமி நின்று அவருக்கு வரவேற்பளித்தனர்.

பிரமாண்டமான சொகுசு காரில் அவரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் படப்பிடிப்பு நடக்கும் மலாக்காவுக்குச் சென்றார் ரஜினி.

12049176_982270368459796_1950469620546143811_n

அங்கு மலாக்கா கவர்னர் முகமது கலீல் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். மலாக்கா மக்கள் சார்பில் ரஜினியை வரவேற்பதாகக் கூறிய கவர்னர், பின்னர் ரஜினிக்கு விருந்தளித்து அவருன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

மலேசியாவில் ரஜினி போகுமிடமெல்லாம் அந்நாட்டு காவல் துறையினரும், அதிகாரிகளும், கவர்னர் மாளிகையிலிருந்தவர்களும், பொது மக்களும் அவருடன் படமெடுத்துக் கொள்ள பலரும் ஆர்வம் காட்ட, அதைப் புரிந்து கொண்டு, அனைவருடனுமே சிரித்தபடி படமெடுத்துக் கொண்டார் ரஜினி.

ரஜினிக்கு மலேசிய மக்களிடம் உள்ள செல்வாக்கு, அவர் செல்லுமிடங்களிலெல்லாம் திரளும் மக்கள் கூட்டம் பார்த்து வியப்புத் தெரித்து செய்தி வெளியிட்டுள்ளன மலேசியப் பத்திரிகைகள். ‘கபாலி புயல் இப்போது மலேசியாவில் மையம் கொண்டுள்ளது’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளன.

Kabali-Mal-8

மலேசியா உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடுகளில் கடந்த சில நாட்களாக கடும் புகை மூட்டம் காணப்பட்டது. ரஜினி மலேசியா வந்த அன்று பனிமூட்டம் விலகியிருந்ததால், அதை ‘புகை மூட்டத்தை விரட்டிய கபாலி புயல்’ என வர்ணித்து ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இன்னும் 60 நாட்கள்

கபாலியின் படப்பிடிப்பு இன்னும் 60 நாட்களுக்கு வெளிநாடுகளில் நடக்கவிருக்கிறது. இப்போது மலாக்காவிலும், பின்னர் தாய்லாந்து மற்றும் ஹாங்காங்கிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த 60 நாட்களும் ரஜினி மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங்கில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். அவருடம் ரஜினியுடன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-என்வழி
9 thoughts on “மலேசியாவில் மையம் கொண்ட கபாலி புயல்… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரமாண்ட வரவேற்பு!

 1. srikanth1974

  உண்மை,உழைப்பு,நேர்மைக்கு கிடைத்த வரவேற்பு.

 2. மிஸ்டர் பாவலன்

  உலக நாயகன் த்ரிஷாவுடன் மலேசியாவில் ஒரு ஜேம்ஸ் பாண்ட்
  படம் எடுத்தால் கலக்கலாக இருக்கும். தாணு களம் இறங்குவாரா?

  -== மிஸ்டர் பாவலன் ==-

 3. enkaruthu

  தலைவரின் மனதிற்கு இன்னும் பல பேரின் vayatrai

 4. குமரன்

  நல்லாத்தான் இருக்கு உங்க ஆசை, மிஸ்டர் பாவலன் அவர்களே !!!

  ஆளவந்தான் படத்தை எடுத்து, அது தன் சொத்தை “அழிக்க வந்தான்” என்பதைப் புரிந்து கொண்டு உஷாராகி கொஞ்சம் நல்லா வாழும்போது ……

  மறுபடியும் முதல்லேருந்தா………………..???????????

 5. MK

  “ஒரு ஜேம்ஸ் பாண்ட்
  படம் எடுத்தால் கலக்கலாக இருக்கும். தாணு களம் இறங்குவாரா?”

  தாணு ;

  ஏம்பா நா நல்ல இருக்கிறது பிடிக்கலையா.? இந்த அர லூச வச்சி ஆள வந்தான் எடுத்து நடு தெருவுக்கு வந்தது பத்தாதா? உத்தம வில்லனை எடுத்து லிங்கு சாமி சட்டையை கிளிச்சுடுட்டு அலைறான். எதோ தெய்வத்தோட (தலைவர் ரஜினி) அருள் கிடைச்சி கபாலி எடுக்கிறேன். இப்போ போய் அவனை (உலக ஊம்….) வச்சி ஜேம்ஸ் பாண்ட் படமா?
  ஏம்பா நீயல்லாம் வந்தோமா ரெண்டு பின்னூடம் போட்டோமான்னு இருக்கணும்.இந்த கருத்து சொல்ற வேலைய வேணாம். என்னா இந்த சைட்ல நீ மட்டும் தான் அந்த தெனாலிக்கு சால்ரா(ரசிகன்) ன்னு எல்லோருக்கும் தெரியும். உன் கருத்தை அப்படியே தெனாலி (அர லு…)கிட்ட சொல்லு. என்னா விட்ட்ருப்பா…….

 6. MK

  நல்லவர்களுக்கு, நாணயமானவ்ரகளுக்கு, நேர்மையளர்களுக்கு,மக்களை, ரசிகர்களை நேசிபவர்களுக்கு, அதாவது நம் தலைவருக்கு சென்ற இடமல்லாம் சிறப்பு.

  “இது தானா சேர்ந்த கூட்டம். அன்பால சேர்ந்த கூட்டம்.”

 7. raj

  My mind goes back to 2011 – Our Thalaivar gone to Singapore in ambulance ,now by god grace he is walking like lion and acting films – Thank GOD , Thank God …….

 8. மிஸ்டர் பாவலன்

  கபாலி ஒரு சூப்பர் hit என்பதில் சந்தேகம் இல்லை.. எப்போதோ நான்
  அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லி விட்டேன்..

  உத்தம வில்லன் படுதோல்விக்குப் பின் பாபநாசம் ஏதோ ஓடியது.
  தூங்காவனம் டிரைலரைப் பார்த்த பின் த்ரிஷா ரசிகரான பாவலனே
  சங்கு ஊத்தி விட்டேன்.. படம் ஊத்திக்கும் போல இருக்கிறது..
  (த்ரிஷாவிற்காக அரண்மனை-2 பார்க்கலாம்.. தூங்காவனம் படம்
  பார்க்கும் பிளானை drop செய்துவிட்டேன்..)

  கமல் ரசிகர்கள் மிகவும் மனம் நொந்து உள்ளனர்.. அடுத்த வெற்றிப்படம்
  எப்போது?! கே. எஸ். ரவிகுமாரை வைத்து எதுவும் படம் எடுப்பாரா?

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 9. இந்திரன்

  அது என்ன மோ தெரியல கமல் விஜய் படமெல்லாம் தோல்வியடஞ்ச வினியோஸ்தர்கள் வாய தொரக்க மாட்டார்கள் . தலைவர் படம்னா இவாயன் நினப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *