BREAKING NEWS
Search

ஆர் கே நகர் இடைத் தேர்தலில் என் ஆதரவு யாருக்கும் இல்லை! – சூப்பர் ஸ்டார் ரஜினி அதிரடி

யாருக்கும் ஆதரவில்லை! – சூப்பர் ஸ்டார் ரஜினி

rajinikanth

சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்தார். அப்போது விரைவில் ரஜினியிடமிருந்து அறிவிப்பு வரும் என மர்மமாகப் பேசினார். இதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு தங்களுக்குதான் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் ஆதரவு எங்களுக்குதான் என தமிழிசை கூறிவந்த நிலையில், அவரது இந்த மறுப்பு அறிவிப்பு பாஜகவுக்கு மட்டுமல்ல, யாருக்குமே ரஜினி ஆதரவில்லை என்பதை தீர்க்கமாக தெளிவுபடுத்தியிருக்கிறது.

தமிழக அரசியல் களத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *