BREAKING NEWS
Search

நீதானே என் பொன்வசந்தம் சிடி விற்பனையில் சாதனை – இசையுலகுக்கு இளையராஜா தந்த புது உற்சாகம்!

சிடிக்கள் விற்பனையில் சாதனை –  இசையுலகுக்கு இளையராஜா தந்த புது உற்சாகம்!


சிகர்கள் மட்டுமல்ல.. சினிமா உலகில் இருவர் சந்தித்துக் கொண்டாலும் கேட்டுக் கொள்வது, ‘நீதானே என் பொன்வசந்தம்’ பாட்டெல்லாம் கேட்டுட்டியா?’ என்பதுதான்.

இதை நாம் வெறும் புகழ்ச்சிக்காகக் குறிப்பிடவில்லை. கடந்த ஒரு வாரமாக நேரில் பார்த்தையே சொல்கிறோம்.

அந்த அளவு ஆர்வத்தையும் எதிர்ப்பார்ப்பையும் தூண்டியுள்ள இந்தப் படத்தின் ஆடியோ சிடிக்கள்  2 லட்சம் பிரதிகள் வரை விற்பனையாகி பெரும் சாதனை படைத்துள்ளன. படத்தின் எட்டுப் பாடல்களும் எங்கும் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக இளையராஜா பாடியுள்ள வானம் மெல்ல, கார்த்திக் பாடிய என்னோடு வாவா, காற்றைக் கொஞ்சம், யுவன் பாடிய சாய்ந்து சாய்ந்து, சுனிதி சௌஹான் பாடிய முதல்முறை.. போன்ற பாடல்கள் இசை ரசிகர்களின் உதடுகளில் நிரந்தரமாக தங்கிவிட்டன.

டவுன்லோடிங், பைரசி காரணமாக, எப்பேர்ப்பட்ட படத்தின் சிடி விற்பனையும் படுத்துவிட்ட சூழலில், தமிழ் – தெலுங்கில் இந்தப் படத்தின் சிடிக்கள் இந்த அளவு விற்பனையாகியிருப்பது பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ளது சோனி நிறுவனம்!

இதற்கிடையே இந்தப் படத்தின் ட்ரைலரை இரண்டே நாட்களில் 12 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் இவ்வளவு பார்வையாளர்களை இரண்டே நாட்களில் பெற்ற முதல் வீடியோ இதுவே.

இதுகுறித்து சோனி நிறுவனத்தின் நிர்வாகி அசோக் கூறுகையில், “எங்கள் நிறுவன வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம். புதிய சாதனையை படைத்திருக்கிறது இசைஞானி இளையராஜா- கவுதம் மேனன் கூட்டணி. இளையராஜாவின் ரசிகர்களுக்கு நன்றி,” என்றார்.

என்வழி ஸ்பெஷல்

நீதானே என் பொன்வசந்தம் – இளையராஜா கேலரி




5 thoughts on “நீதானே என் பொன்வசந்தம் சிடி விற்பனையில் சாதனை – இசையுலகுக்கு இளையராஜா தந்த புது உற்சாகம்!

  1. Tamizhan

    எனக்கு ரொம்ப நன்றாக தெரிந்த ஆடியோ கடைகாரர் சொன்ன தகவல்… நீ தானே என் பொன்வசந்தம் ஆடியோ CD எந்த ஆடியோ கடைக்கும் விற்பனைக்கு வரவே இல்லை என்கிறார்… இதில் எது உண்மை?

  2. Paul

    Lyrics Neethane en ponvasantham is penned by Vairamuthu. Am i right. So raja’s hit this year wil be a lyric pen by Vairamuthu. SUPERAPPU
    _______________
    தவறு.. அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் நா முத்துக்குமார்!
    -வினோ

  3. kitcha

    CD கடைக்கு வந்ததா இல்லையா அது இருக்கட்டும் தமிழன், பாடல் எப்படி அதைப் பற்றி சொல்லுங்கள்

  4. srikanth

    வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே பாடல் மிக அருமை.

  5. Tamizhan

    பழைய இளையராஜாவின் பாடல்கள் போல் இல்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *